பாடல்களாலும், கவிதைகளாலும், வரலாற்றுத் தொடர்களாலும் நிரம்பிய என் இலக்கியப் பயணத்தின் இளைப்பாறல்களாய் நான் கருதுவது, வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவுகளைக் கேட்பதும்; புத்தங்களைப் படிப்பதும் என்றால் அது மிகையாகாது. புத்தகங்கள் நிரம்பிய எனது தனிப்பட்ட அறையில், நான் மதிக்கும் ஆளுமை மிகுந்த ஆன்மீக சிந்தனையாளர்கள் மூவரின் புகைப்படங்கள் உண்டு. விவேகானந்தர், இராமலிங்க அடிகள் மற்றும் வாரியார் சுவாமிகள் ஆகியோர். வாரியார் சுவாமிகள் பாமரனும் புரியும் வண்ணம் சொல்லவந்த கருத்தை எளிமையாகச் சொல்லி, எல்லோர் மனதிலும் இடம்பிடித்தவர். தன் பேச்சாற்றலால் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருந்தவர். வாரியாரின் கருத்துக்களை ‘‘வாரியார் சொல் விருந்து’’ எனும் இந