யானை மிதித்து விவசாயி பலி, வயலில் புகுந்து யானைகள் அட்டகாசம் போன்ற செய்திகளை நாம் அன்றாடம் கடந்து வருகிறோம். மனிதர்களை மிதித்துக் கொல்வதற்காகவே காட்டு யானை ஊருக்குள் வருகிறது என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. உண்மையில் ஏன் யானைகள் சேதத்தை ஏற்படுத்துகின்றன? மனிதர்களைக் காவு வாங்குகின்றன? என்று கேள்விகள் எழலாம். இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் தன் பேராசையால் பிற உயிர்கள் வாழும் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதன் விளைவாக காடுகள் அழிக்கப்பட்டன. இதனால் காட்டில் வாழும் உயிர்கள் நேராக மனிதர்கள் இருப்பிடம் தேடி வர ஆரம்பித்தன. உணவும், தண்ணீரும் இல்லாமல் வாயலை நாசம் செய்கின்றன. இப்போது சுற்றுச்சூழல், பிற உயிர்களுக்கான வாழிடம் குறித்த குரல்கள் வ
நிலத்தில் வாழும் பெரும் பலம் கொண்ட உயிரினம் யானை, பெரும் எண்ணிக்கையில் நிலத்தை ஆளும் உயிரினம் மனிதன். இரு உயிரினங்களுக்கும் இடையிலான வாழ்வாதரா சண்டையில் யார் பக்கம் நாம் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் முன் இந்த யானைகளின் வருகை கட்டுரைகளை வாசித்துவிடுங்க. -கலைச்செல்வன் செல்வராஜ்.