என்ன எழுதுவது எப்படி ஆரம்பிப்பது இந்த புத்தகத்திற்கான விமர்சனத்தை சில புத்தகங்கள் நம் வாழ்வில் பல பாதிப்புகளையும் நீங்காத பல அழுத்தங்களையும் நம்முள்ளே ஆழ பதித்து விடும்... அவ்வாறு பதிந்த உணர்வுகளை வார்த்தை படுத்தும் யுக்தி வாய்ப்பதில்லை இந்த நாவல் நான்கு தலைமுறையின் தீண்டப்படாத வாழ்வியலை மிகவும் நேர்த்தியான முறையில் சொல்லி செல்கிறது...நிலா திண்ணை சேரியில் தன் கடைசி மூச்சை விட்ட எல்லனா சுபத்திரா காதலர்களின் காதலை நாம் ஏன் இத்தனைக்காலம் கொண்டாடவே இல்லை... இதுதானே இந்த மனிதர்கள் ஏங்கி ஏங்கி தவித்து கொண்டு இருக்கிற காதல் காவியம் ஆனால் நாம் ஏன் இவர்களை மறந்தோம் இல்லை இவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை..ஒரு வேலை எல்லனா பண்ணையார் குடியில் பிறந்திருந்தால் சுபத்திராவிற்கு ஒரு சிறு தாஜ்மஹால் கூட கட்டியிருக்கலாம்...இல்லை சுபத்ரா ஏதேனும் ஒரு உயர் குடியில் பிறந்திருந்தால் எல்லனாவை எண்ணி எண்ணி பல நினைவு குறிப்புகளையும் கடிதங்களையும் எழுதி தீர்த்திருப்பால் அந்த கடிதங்களையும் குறிப்புகளையும் உலகமே பல மொழிகளில் பதிப்பித்து கொண்டாடி தீர்த்திருப்பார்கள்.... இப்படி எத்தனையோ எத்தனையோ வாழ்வியலை இந்த நாவல் சொல்லி நகர்கிறது அது நகர்கையில் நம் முன் அடர்ந்த சிவப்பு நிற கண்ணீரும் மனதில் மலைப்போல் பாரமுமே நம்மை ஆசுவாசப்படுத்துகிறது..... மனிதர்கள் கொண்டாட வோண்டிய நாவல்...தீண்டாத வசந்தம்...
இந்த வசந்தம் அன்றும் தீண்டாததே இன்றும் தீண்டாததே
பிறந்த சாதி தீண்டாது செய்ய விரும்பிய போராட்டமும் தடை செய்யப்பட்டது
அது நேற்றாக இருக்கலாம் இன்றாகவும் இருக்கலாம் எந்த காலமாகவாவது இருக்கலாம்
இந்த வசந்தம் அன்றும் தீண்டாததே இன்றும் தீண்டாததே....❤️