இமையம் (Imayam, nom de plume of Ve. Annamalai), என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். இவர் எழுதிய செல்லாத பணம் என்ற புதினத்திற்கு 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. எனினும் இராசு கௌதமன் போன்ற தலித் சமூக அறிஞர்கள் தலித்து சமூகத்தின் அவலநிலைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் மேல் சாதியினர் புகழக்கூடிய வகையானதாகவும் இப்புதினம் உள்ளதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
He is also the recipient of the Agni Aksra Award, the Tamil Nadu Progressive Writers Association Award, the N.L.C. Award, and the Thamizh Thendral Thiru.V.Ka. Award, among others, and has been honored by the governments of Kerala, TamilNadu and India.
ஊராட்சி எலெக்ஷன்ல நான் தோத்துட்டன் நான் ஓட்டுக்கு குடுத்த பணத்த திருப்பிதாங்கடா பரதேசி பசங்களா. ஒரு ஓட்டுக்கு ₹5000 குடுத்த எனக்கு ஓட்டு போடாம ஓட்டுக்கு வெறும் ₹100 குடுத்த உங்க சாதிகாரனுக்கு ஓட்டுபோட்டு செவிக்க வச்சிட்டிங்கல. டேய் ஒவ்வொரு வூடா போயி கேளு காசு இல்லனு எவனாச்சும் சொன்னா அவன் வூட்டுக்கு இந்த பூட்ட போட்டு பூட்டு. இல்லான இந்த பத்திரத்தல அவன கையெலுத்து போட சொல்லு. இனி எந்த நாயும் என் காட்டுல ஆடு, மாடு மேய்க்க கூடாது என கட்டளையிடுகிறான் தேர்தலில் தோற்றவன். என் தாலி மேல சத்தியமா நாங்க உங்களுக்குதான் ஓட்டு போட்டம் என ஒரு பெண் அவனிடம் போராடுகிறாள். ஊரை ரெண்டாக்கிய உள்ளாட்சி தேர்தல், தாலி மேல சத்தியம் - கலைச்செல்வன் செல்வராஜ்.
தாலி மேல சத்தியம் சிறுகதையின் பெயரை பார்த்ததுமே படிக்கத்தூண்டியது . ஆசிரியர் இமையம் அவர்களின் கைவண்ணத்தில் புனையப்பட்டது. தேர்தல் என்று வந்தாலே வாக்கு சேகரிப்பு மிக விமரிசையாக நடக்கும். ஓட்டுக்கென்று பணம் கொடுப்பதும் வாங்குவதும் தொடர்கதையாகிவிட்டது. ஓட்டுக்கென்று பணமோ பொருளோ தரவேண்டும் என்னும் எதிர்பார்ப்பு பெரும்பாலான மக்கள் மனதில் வேரூன்றி இருக்கிறது. ஓட்டுக்கென்று பணம் பொருள் வாங்குவதும் கொடுப்பதும் கிரிமினல் குற்றம், எனினும் குற்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இச்சிறுக்கதையின் கதைக்கரு தேர்தலில் வெற்றி பெற வேண்டி ஓட்டிற்கு அதிக பணம் கொடுத்தும்,வெற்றி பெற இயலவில்லை. கொடுமை யாதெனில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்று, அவமானப்பட்டு மனம் வேதனையடைந்துள்ள வேட்பாளரின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பற்றியது. இருகட்சியினரிடமிருந்தும் பணத்தை வாங்கிக் கொண்டு ( இவன் கொடுத்த தொகை, வெற்றி பெற்றவனை விட 500 மடங்கு அதிகம்) நல்லவனை நிராகரித்து சாதிக்காகவே தங்களது வாக்கினை செழுத்தி அவனை கேவலமாக தோற்கடித்தனர் என்பது வேதனையின் உட்சம். அதனால் உண்டான விளைவுகள் விபரீதமானது. அது என்ன விபரீதம் ?? இச்சிறுகதையினை வாசிக்க.. சாதியே தேர்தலை நிர்ணயம் செய்கிறது.ஓட்டுக்கு 5000 கொடுத்தவன் தோக்குறான் நூறு ரூபா கொடுத்தவன் செயிக்கிறான். என்னா ஒலகம்டா சாமி இது?
பல்வேறு போராட்டம் செய்து பெற்ற தனித் தொகுதிகளிளும், ஆதிக்கசாதியினரின் கட்டுப்பாடுக்குள்ளே தேர்தல் உள்ளது.பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தும், ஆணாதிக்கமே மேலோங்குகிறது. தேர்தலில் வென்று பதவியேற்ற பின்பும் பெண்கள் ஓர் தஞ்சாவூர் பொம்மையைப் போலவும், பகடைக்காயிகளாகவே பயன்படுத்தப்படுகின்றனர். என்னதான் சாதிகள் இலையடி பாப்பானு பள்ளியில் படிச்சாலும், யாரும் மனதில் கொள்வதில்லை... !
பணத்தை பெற்றுக்கொண்டு வாக்களிக்காதீர்கள். உங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல.. நேர்மையாக வாக்களித்து மக்கள் நலனையை சிரமேற்கொள்ளும் நல்ல மனிதர்களை தேர்ந்தெடுத்து, மக்களாட்சியின் மாண்பைக் காப்போம்.
இதில் வரும் பத்து சிறுகதைகளுமே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதில் பெண்களின் வேதனை நிறைந்த கதைகள்தான் மனதை மிகவும் துயரத்தில் ஆழ்த்துகிறது அதுவும் கவர்மெண்ட் பிணம், ரவ நேரம் மற்றும் மயானத்தில் பயமில்லை ஆகிய கதைகளில் வரும் பெண்கள் இயல்பான வர்கள் போல தெரிந்தாலும் அவர்கள் மேன்மையான வர்கள். இதில் வரும் அனைத்து கதைகளும் சமூக வாழ்க்கையில் நடக்கும் அவலங்களை சிறப்பாக எடுத்துரைக்கிறது.