நர்மதா ஒரு தனிமை விரும்பி,கடந்த காலத்தில் நடந்த சில சம்பவங்கள் அவளைத் தனிமைப் படுத்திவிட்டது.அதிகம் யாருடனும் தொடர்பு இல்லாமல் அவள் வாழ்க்கையை கழிக்கிறாள்.அடிக்கடி கடற்கரைக்குச் சென்று அமைதியாக அமர்ந்து விட்டு வருவது அவளின் வழக்கம். சத்யா ஒரு எஞ்ஜினியர், காதல் தோல்வியில் பாதிக்கப்பட்ட ஒருவன்.இருவரின் யதார்த்தமான சந்திப்பில் துவங்கும் இந்தப் பயணம் அடுத்து என்ன என்பதை இந்த புத்தகத்தைப் படிக்கும் பொழுது உங்களுக்குத் தெரிய வரும்.இது உங்கள் இதயத்தை தொட்ட ஒன்றாக இருக்கும் என நம்புகிறேன்