சச்சின் சிறு வயதில் குடியிருந்த குடியிருப்பு வாசிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் தூர்தர்சனில் போடும் திரைப்படத்தை தாங்கள் அத்தனை பேரும் ஒன்றாக குழுமியிருந்து பார்த்து ரசிப்பது வழக்கம். அவர்கள் திரைப்படத்தில் மூழ்கி இருக்க, சச்சினும் அவர் நண்பரும் இணைந்து பக்கத்தில் நின்றிருந்த மாங்காய் மரத்திலேறி மாங்காய் பறிக்க சென்று விட்டார்கள். இருவரும் ஒற்றைக் கொம்பில் ஏறியிருந்த காரணத்தால் அவர்கள் கனம் தாங்காமல் அக்கொம்பு பெருச்சத்தத்துடன் முறிந்துவிழ வசமாக மாட்டிக்கொண்டார்கள். அதன் பிறகே இவனை இனி இப்படி விட்டால் சரியாகாது இவனை ஏதேனும் பயனுள்ள வழியில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவருடைய அண்ணன் அஜீத் ஆச்ரேக்கரின் கிரிக்கெட் பயிற்சி முகாமி&#