நம் சமூகத்தில் நம் சீர்திருத்தம் முழுமை பெறவேண்டும் என்றால் நாம் திராவிடத்தை வெறும் அரசியல் கொள்கையாக கொள்ளாமல் வாழ்வியல் முறையாக ஏற்க வேண்டும். திராவிடத்தை நண்பர்களிடமும் இனணயத்திலும் மட்டும் விவாதிக்காமல் தங்கள் வீட்டு பெண்களிடமும் குழந்தைகளிடமும் புரிய வைக்க வேண்டும். ஏனெனில் பெண்களும் குழந்தைகளும் தான் அடுத்த தலைமுறையின் வாழ்வியலை முடிவு செய்பவர்கள்.