கொப்பளிக்கும் புத்திக் கூர்மை. டைமிங். மிரட்டும் மாடுலேஷன். அநாயாசமான நகைச்சுவை உணர்வு. வில்லன் வேடம் ஏற்பவரையும் விழுந்து விழுந்து ரசிக்கலாம் என்று ரசிகர்கள் எண்ணத் தொடங்கியதே ராதாவுக்குப் பிறகுதான். அவருக்கு முன்னும் பின்னும் இந்தியத் திரையுலகில் அவருக்கு நிகரான இன்னொரு கலைஞர் உதித்ததில்லை. அன்றைய திராவிட இயக்க அரசியலில் ராதாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. பெரியாருக்குத் தோள்கொடுத்து பகுத்தறிவைப் பரப்ப ராதா செய்த பணிகள் அபாரமானவை. ராதாவின் ராமாயணம் என்ற ஒற்றை நாடகம், தமிழகத்தையே உலுக்கியது. அடிதடி, கல்வீச்சு, கலவரம், 144 தடை உத்தரவு. அத்தனையையும் மீறி ராதாவுக்காகக் குவிந்தனர் ரசிகர்கள். அவரை அடக்குவதற்காக நாடகத் தடைச் சட்டம் என்ற தனி