முன்னுரை: ஜமீன்தார் தாத்தாவுக்கும் அவர் செல்ல பேரனுக்கும் நடுவில் நடக்கும் பனிப்போரில் இரண்டு பெண்களின் வாழ்வு சிக்கி கொண்டு தவிப்பது தான் கதையின் போக்கு... உன்னை மணம் முடித்து உன் எதிர்காலத்தை என்னுடன் பகிர்ந்து கொள்வேன் என்று வாக்களித்த தன் மனம் கவர்ந்த காதலியா? இல்லை கட்டாயத்தினால் அக்னி சாட்சியாய் உன்னை என்றும் உடன் இருந்து காப்பேன் என்று உறுதி அளித்து தாலிகட்டிய மனைவியா? என்று தடுமாறும் நாயகன் என்ன முடிவு எடுத்தான் என தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்... இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான காதல் கதைதான்..எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்பு