முகநூலை, பொழுதுபோக்கிற்காக இல்லாமல் அதனூடே, சமுதாயத்திற்கு பயன்தரக்கூடிய கருத்துக்களை வெளிப்படுத்துவதே என்னுடைய நோக்கம். ஜோஸ் அவர்களுக்கும், இதே எண்ணம் இருப்பதால் இவருடைய பதிவுகளைத் தவறாமல் வாசித்து, அதற்கு என்னுள் ஏற்படும் மன உணர்வுகளை, அவருடைய பதிவில் பின்னூட்டமாக தெரிவிப்பேன். இப்படியாக எங்களுக்குள் ஒரு பரஸ்பர அன்பும், நட்பும் ஏற்பட்டுள்ளது. வெளிப்பார்வைக்கு ஒரு சாதாரண தோற்றமுடைய இளைஞர். ஆனால், அகத்திலோ அன்பானவர் பண்புகள் நிறைந்தவர் அதிகம் ஏட்டுக்கல்வியை கற்கவில்லை எனினும் வாழ்க்கையை நன்கு கற்றிருக்கிறார். தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை, அதில் கற்றுக்கொண்ட பாடத்தையும் தனக்குள் புதைத்துக்கொள்ளாமல், அதை அடுத்த தலைமுறையினருக