Jump to ratings and reviews
Rate this book

கொங்கு தேர் வாழ்க்கை

Rate this book
நாஞ்சில் நாடன் ஊர் அறிந்த எழுத்தாளர். விருதுகள் வாங்கிய எழுத்தாளர். அவர் ஆனந்த விகடன், விகடன் தீபாவளி மலர், விகடன் பவழ விழா மலர் ஆகியவற்றில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். அவர் தனக்கே உரிய நடையில் கதைகளை எழுதியிருக்கிறார். அங்கங்கே கிண்டலுக்குக் குறைவேயில்லை. கிண்டலின் ஊடே எது நடந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகப் புரியும் வகையில் எழுதியிருக்கிறார். வாழ்க்கையில் சாமானியர்கள் சந்திக்கும் அவலங்களை உற்று நோக்கி அதைக் கதைப்படுத்தியிருக்கிறார். வாழ்க்கையைத் தியாகம் செய்து பிள்ளையை வளர்த்த பிறகு முதுமைக் காலத்தில் மீண்டும் ஒரு வைராக்கிய வாழ்க்கையைத் தொடரும் பேச்சியம்மை கதை மனதைப் பிசைகிறது. இது கதையல்ல, வாழ்க்கையின் யதார்த்தம். இப்படிப்பட்ட தாய்மார்களை அடுத்தத் தெருவில், நாம் வாழும் ஊரில் பார்க்கத்தானே செய்கிறோம். நூல் ஆசிரியர் அலுவல் நிமித்தமாக வட நாட்டில் வாழ்ந்தவராதலால், மும்பை, தாணே, கோவா போன்ற ஊர்களையும் அதன் சுற்றுவட்டாரத்தையும் வைத்துக் கதையைப் பின்னியிருப்பதும், இந்தி, மராத்தி மொழிகளையும் தன் கதைகளில் கையாண்டிருப்பதும், அதன் மாந்தர்களை பாத்திரங்களாகப் படைத்திருப்பதும் சுவையை கூட்டுகிறது. ஆனால், தமிழகமானாலும் வட மாநிலமானாலும் உணர்வுகள் ஒன்றே என்ற இழை கதைகளில் சன்னமாக பின்னப்பட்டிருப்பது கதைகளின் வலிமை. கதைகள் எல்லாத் தரப்பு வாசகர்களையும் ஈர்க்கும் என்பது நிச்சயம்.

189 pages, ebook

First published October 1, 2013

62 people are currently reading
85 people want to read

About the author

Nanjil Nadan

43 books79 followers
நாஞ்சில் நாடன் (பிறப்பு: டிசம்பர் 31, 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.
நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல்.
இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.
2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
45 (40%)
4 stars
45 (40%)
3 stars
20 (17%)
2 stars
1 (<1%)
1 star
1 (<1%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Gowthaman Sivarajah.
17 reviews1 follower
July 25, 2018
கடந்த காலங்களில் நாஞ்சில் நாடன் ஆனந்த விகடனில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. பெரும்பாலான கதைகள் வாசிப்பாளனைச் சிந்திக்க விடாமல் முற்றுமுழுதாக நேரடியாகவே சொல்லப்பட்டு விடுகின்றன. அவை ஆனந்த விகடன் என்ற வெகுஜன இதழ்களில் வெளிவந்தவை என்பது அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனாலும் நாஞ்சில் நாடனுக்கேயான நக்கல்களும் நையாண்டிகளும் எல்லாக் கதைகளிலுமே குறைவின்றி நிரம்பிக் கிடக்கின்றன.
Profile Image for Prabhu R..
Author 3 books34 followers
January 5, 2020
A nice immersive collection of short stories that have a very good narrative along with a subtle humour running inside the story. The author deftly merges popular poems and sayings into the story that adds more spice and substance.
Profile Image for Rajesh Arumugam.
144 reviews3 followers
June 29, 2020
நாஞ்சில் நாடனின் இந்த சிறுகதை தொகுக்கும் மிக மிக நன்றாக இருந்தது. நாஞ்சில் நாடனின் நய்யாண்டியின் கைவண்ணம் இந்த சிறுகதைத்தொகுப்பு. கடையிசில் இருந்த கடி தடம் சிறுகதையை தவிர மற்ற அணைத்து கதைகளும் எனக்கும் மிகவும் பிடித்து இருந்தன. நாஞ்சில் நாடன் சமூதாயத்தை கூர்ந்து நோக்கி அவதானித்து இச்சமுதாயத்தை எழுத்தில் வடித்துள்ளார். பல இடங்களில் சாட்டையால் அடிப்பது போன்று அடித்தும் உள்ளார். கண்டிப்பாக படிக்கலாம். சில கதைகள் கண்டிப்பாக படிக்கவேண்டியவை 
எனக்கு பிடித்த கதைகள்: தாலிச் சரண், பாம்பு, காடு, பரிசில் வாழ்க்கை , பேச்சியம்மை,  நீலவேணி டீச்சர் , கான் சாகிப், ஆத்மா, பெருந்தவம், பூனைக் கண்ணன் கடத்திய அம்மன்
Profile Image for Mahesh.
120 reviews4 followers
December 13, 2025
14 short stories by Nanjil Naadan. Most of the stories initially explain a lot about the 80, 90s culture and within couple of pages either the story gives you a smile, satisfaction and ends with bang with a heavy heart.
Profile Image for Guru Guru.
38 reviews17 followers
May 3, 2014
விகடனில்(தீபாவளி மலர்/ஆ.விகடன்/etc...) வந்த நாஞ்சில் நாடனின் 13 கதைகளின் தொகுப்பு. ரொம்ப கஷ்டமான நடை,வாசிக்க கொஞ்சம் கடினம். சில கதைகள் அருமை,சில மரணமொக்கை.சில கதை போலவே இல்லை சும்மா பத்தி மாதிரி இருக்கிறது. ஒரு வேளை எனக்குதான் நா.நா-வை படிக்க/புரிந்துகொள்ள அறிவில்லையோ/பக்குவமில்லையோ தெரியவில்லை.

பிடித்த கதைகள்:- காடு, கொங்குதேர் வாழ்கை, தன்ராம் சிங், பேச்சியம்மை, நீலவேணி டீச்சர்.
Profile Image for Kracekumar.
41 reviews32 followers
May 12, 2016
நாஞ்சில் நாடனின் நய்யாண்டியின் கைவண்ணம் இந்த சிறுகதைத்தொகுப்பு. அதே சமயம் ஒரு சான் வயிற்றிக்காக எளிய மனிதன் படும் பாட்டையும் எளிமையாக சித்தரித்துள்ளார். இதில் வரும் சில கதைகளை வாசிக்கும் போது என் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை நினைவுட்டியது. இது தான் ஒரு படைப்பின் வெற்றியாக நான் கருதுகிறேன்.
Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.