நல்லதொரு விடியலை எதிர்நோக்கி துயில்கொள்ளும் ஒவ்வொரு காலையும் முன்றைய தினத்தை repeat modeயில் போட்டப்படியே நாட்கள் கடக்கின்றன. அத்தகைய நாட்களுக்கான ஊக்கமாக புதுமையின் சாயலைப் பூச முற்படுவன புத்தகங்கள்.கல்யாண்ஜியை படிக்கத்தொடங்கிய நாள்முதல் ஒவ்வொரு கவிதைகளும் ஒவ்வொரு நாளின் wakeup call ஆகி விட்டன எனக்கு.மனிதர்களின் நுண்ணுரச்சிகளையும் ஆரவாரமின்றி கடக்கும் கவணிப்பாரற்றப் பொழுதுகளை சிறை பிடிக்கும் கவிதைகள் இவருக்குரித்தானவை..
புலரி-விடியல்!
ஒவ்வொரு கவிதையை ஒரு புது விடியலை நிகழ்த்திவிடுகிறது. கல்யாண்ஜி அவர்களின் முதல் கவிதை தொகுப்பும் இதே.சலனமற்ற இவர் கவிதைகளில் நதிகள் பாயாமல் இருந்ததில்லை.
"நாணல் முளைத்த
தண்ணீர்க் கரை நனைத்து
நதியெல்லாம்
மணல் பாய
குளித்துக் கரையேறும்
கல் மலர்கள்."
"புலரி" கனவுலகிலிருந்து துயில் கொள்ளும் ஒரு விடியலாக ஒரு கவிதையும் குரங்குகளோடு விடியும் காலையாக ஒரு கவியும் உள்ளது.
"நீ" என்னும் கவிதை அடுத்த தலைமுறைக்கான வித்தாக தன்னம்பிக்கை வரிகள் கொண்டது.
காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வரும் இரு கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.
"பகல் முழுவதும்
பறக்கவே விரும்புகிறேன்.
இரவில்
கூடோ , கூண்டோ
என்ன உத்திரவாதம்?"
"மேகநிழல்
ஊர்ந்துவிடும்,முன்
ஓடுகிற காலமே என்
உடனிருந்து இளைப்பாறு."
வாழ்க்கையை கற்றுக்கொடுக்க நிகரற்றவர்களாகிய "சக மனிதர்களை" அடையாளம் கண்டுகொள்ளும் கவிதை ஒன்று.
"... தொட்டிப்பூ
பூப்பூத்தல் அது இஷ்டம்
போய்ப்பார்தல்
உன் இஷ்டம்"
இதை விடவும் ஒரு நாளுக்கான உந்துதல் தேவையா என்ன!? இனி தினமும் நல்லதொரு விடியலை நோக்கி!!!..