Jump to ratings and reviews
Rate this book

Vaanavalli - 1

Rate this book
சோழப் பேரரசன் கரிகாலன் இமயமலை வரைப் படையெடுத்த வீர வரலாற்றைப் பற்றிய புதினமே, வானவல்லி.----வானவல்லி, இன்னொரு யவனராணி என்றே சொல்வேன் நான். கரிகாலன் தனக்குரிய நாட்டை மீட்டதோடு மட்டுமல்லாமல் அவனது இமயத்தில் புலிக்கொடி நாட்டிய வெற்றியையும் விவரிக்கும் புதினமே, வானவல்லி. அதாவது யவனராணியின் நீட்டிக்கப்பட்ட வடிவமே வானவல்லி என்றே சொல்லலாம். ஆக, யவனராணியின் மறுபிரதியா என்ற ஐயம் எழவும் கூடும். முதல் பாகமான வேளிர்களின் எழுச்சி அவ்விதம் ஓர் பிரமையையும் தோற்றுவிக்கலாம். ஆனால் அடுத்தடுத்த இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாகங்கள் அந்தப் பிரமையைத் துடைத்தெறிந்துவிடுகின்றன.கரிகாலனின் இமயப்போரை, அவன் காலத்தில் பெருவலிமை கொண்டிருந்த அவந்தி, கலிங்கம், மகதம் எ

803 pages, Kindle Edition

Published April 13, 2020

16 people are currently reading
29 people want to read

About the author

C.Vetrivel Salaiyakkurichy

9 books9 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
21 (50%)
4 stars
9 (21%)
3 stars
6 (14%)
2 stars
2 (4%)
1 star
4 (9%)
Displaying 1 - 4 of 4 reviews
4 reviews
Read
May 16, 2022
இது எழுத்தாளர் திரு.சி . வெற்றிவேல் அவர்கள் எழுதிய "வானவல்லி " என்ற வரலாற்று நாவலை பற்றிய பதிவு. இது முற்கால சோழன், காவேரிக்கு குறுக்கே கல்லணை கட்டி, இரு புறங்களிலும் கரை எடுத்த, இமயம் வரை தன் புலி கொடியினை பறக்க விட்ட திருமாவளவன் என்று அழைக்கப்படும் "கரிகால சோழனின் " வரலாற்றை சொல்லும் புதினம்.

வரலாற்று நாவல் என்றால், பக்கம் பக்கமாக எழுதி தள்ள வேண்டும் என்று , இந்த எழுத்தாளருக்கு சொல்லி இருப்பார்கள் போல. மொத்தமாக நான்கு பாகங்கள். இந்த பதிவு , முதல் பாகம் பற்றியது. உண்மையிலேயே , முதல் 50 பக்கங்கள் சுவாரசியமாகவும் , ஏராளமான தகவல்களை கொண்டும் இருந்தது. ஆனால் போக போக , வரலாற்றை சொல்லாமல் , தனது சொந்த கற்பனையினை கடை விரித்து உள்ளார்.

எழுத்தாளருக்கு, பிராமணர்கள் மேல் என்ன கோபமோ தெரியவில்லை, கதை நெடுக பிராமண துவேஷ கருத்துக்களை அள்ளி தெளித்து உள்ளார். முக்கியமான இரு கற்பனை வில்லன் கதா பாத்திரங்களை, பிராமணர்களாக சித்தரித்து உள்ளார். கற்பனைதான் என்றாலும் , ஒரு நியாயம் வேண்டாமா? என்று கேட்க தோன்றுகிறது.. மேலும் பிராமணர்கள் வேறு , அந்தணர்கள் வேறு என்ற கருத்தையும் சொல்லி உள்ளார். பிராமணர்களை மதம் வைதீக மதமாம் , ஆரம்பத்தில் , இவர்கள் அசைவம் சாப்பிடுவார்களாம் . பின்பு பௌத்த மற்றும் சமண மத பாதிப்பால் , சைவர்கள் ஆனார்களாம்.

சோழ அரச குடிக்கு ஆபத்து காலத்தில், அரச மரபினர் , தில்லை வாழ் அந்தணர்களிடம் , மணி மகுடத்தை காப்பாற்றி வருமாறு பணிப்பது மரபு. இந்த தில்லை வாழ் அந்தணர்களும் , பிராமணர்கள் இல்லயாம்.
எதன் அடிப்படையில் , இந்த கருத்துக்களை கூறுகின்றார் என்று தெரியவில்லை.

100 பக்கங்களில் சொல்ல வேண்டிய கதையினை, 696 பக்கங்களுக்கு நீட்டி உள்ளார். தனது கற்பனை கதாபாத்திரமான , விறல் வேல் என்பவனை , Super man போன்று உலவ விட்டுள்ளார். கரிகால் சோழனை விட, இவனே அதிக பக்கங்களை ஆக்கிரமிதித்துள்ளான். ஒரு கட்டத்தில் , சலிப்பு தட்டி , எப்பொழுது பக்கங்கள் முடியுமோ என்ற எண்ணம் வந்து விடுகிறது. இன்னும் மூன்று பாகங்கள் படிக்க வேண்டும் என்று நினைத்தாலே, மலைப்பாக இருக்கிறது. இதே எழுத்தாளர் எழுதிய "வெற்றி வேல் சென்னி" என்ற புத்தகத்தை வாஙகி படிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். இந்த புத்தகத்தை படித்த உடன் , அந்த எண்ணத்தை , மனதில் குழி தோண்டி புதைத்துவிட்டேன்.

பல புத்தகங்களை ஆய்ந்து , பல தகவல்களை ஆங்கு ஆங்கே சொல்லி இருந்தாலும், வள வள என்று , கற்பனை குதிரையினை தட்டி விட்டு , பக்கங்களை நிரப்பி இருப்பது , மனச்சோர்வை அளிக்கிறது. இந்த கதையினை., தகுந்த ஆதாரங்களோடு ,மிக சுவாரசியமாக இவரால் ஒன்று அல்லது இரண்டு பாகங்களில் சொல்லி இருக்க முடியும் அந்த அளவிற்கு எழுத்து திறமை கை வரப்பெற்றவர்தான்.

இந்த புத்தகத்தில், எழுத்து பிழைகள் ஏராளம். இந்த புத்தகம் , அச்சிடப்பட்ட அச்சகத்தில் , சூ என்ற எழுத்தே இல்லை போலும். எங்கு எங்கெல்லாம் , சூழ , சூழ்ந்து என்று வருகிறதோ அங்கெல்லாம் , ழ , ழ்ந்து என்றே அச்சிடப்பட்டு உள்ளது.

மொத்தத்தில் , இது ஒரு அழகான , சுவாரசியமான வரலாற்றை , ஏகப்பட்ட கற்பனை பாத்திரங்களை கொண்டு , பக்கங்களை தேவை இல்லாமல் நிரப்பிய வரலாற்று புதினம்.
Profile Image for Dharshini.
70 reviews1 follower
September 10, 2023
பகுதி -1 🛡️வேளிர்களின் எழுச்சி 🛡️
👑சோழ நாட்டின் அரசனான இளஞ்சேட் சென்னி இறந்த பிறகு சோழ நாட்டின் அரசு உரிமை அரசி எழினியின் கருவில் இருக்கும் குழந்தைக்கு வழங்கப்படுகிறது. அரசியும் இறந்த பிறகு சோழ நாட்டினை கைப்பற்ற சூழ்ச்சிகள் நடக்கிறது . வாலிப வயதில் இருக்கும் இளவரசனான திருமாவளவனை சிறை பிடித்து அவனை‌ கொல்ல நினைக்கிறான் சிற்றரசனான இருங்கோவேள், அதற்காக திட்டங்கள் தீட்டி இளவரசனை சிறை செய்கிறான்‌.
👑இது ஒரு புறம் இருக்க அரசன் இல்லாத நாட்டினை காக்க புகார் நகர படைத்தலைவன் , சோழ தேசத்தின் இணையற்ற வீரனான விறல்வேலும் அவனது உபதளபதிகளும் பாடுபடுகிறார்கள். விறல்வேளும் மகேந்திர வளவனின் மகளுமான வானவல்லியும் காதலிக்கிறார்கள். தவறான புரிதலால் வானவல்லி விறல்வேளை வெறுக்கிறாள்.
👑 சோழ இளவரசன் சிறை பிடித்து வைத்திருக்கும் இடத்திற்கு நெருப்பு வைக்கிறான் இருங்கோவேள் . அதிலிருந்து இளவரசன் தப்பிக்க முற்படும்போது அவரை காப்பாற்றுகிறான் விறல்வேள். இருந்தும் இளவரசனின் கால்கள் எரிந்து விடுகின்றன . அதனால் ""கரிகாலன்"" என்ற பெயர் பெறுகிறான். பின்பு‌ தன் ஆருயிர் நண்பனான திவ்யனின் மரணத்திற்கான காரணத்தை அறிய முற்படுகையில் என்ன நடக்கிறது என்பதை இந்த கதை..
👑அரசன் இல்லாத நாட்டினை கைப்பற்ற நடக்கும் சூழ்ச்சிகளை தெளிவாக எழுதியுள்ளார் ஆசிரியர்.
👑வேளக்காரப் படையின் தலைவனான மகேந்திர வளவனின் மகனான திவ்யன், சில இடங்களில் மட்டுமே வருகிறான். மற்றொரு வேளக்காரப் படைத்தலைவன் யார் என்ற கேள்விக்கான மர்மத்தை அவிழ்த்த விதம் அபாரம்.
👑கள்வர்கனின் தலைவனான காலன் யார் என்று அறியும் போது வென்வேல் சென்னி நியாபகம் வருகிறது.
👑இருங்கோவேள் தன் மகனுக்கு இளவரசன் பட்டம் கட்டும் போது அங்கு ஏழு குதிரைகள் பூட்டிய உருவப் பஃறேரில் கரிகாலனை அழைத்து வருகிறான் விறல்வேள். அக்காட்சி புல்லரிக்க வைக்கிறது, வெற்றிவேல் சென்னியையும் நினைவூட்டுகிறது.
👑இக்கதையில் காதலும் மோதலும் சமமாக இருக்கிறது. விறல்வேள் 💖 வானவல்லி,
கரிகாலன் 💖 மரகதவல்லி, காலன் 💖 பத்திரை தேவி ஆகியோரின் காதல் அழகாக உள்ளது.
👑 விறல்வேளின் உபதளபதிகளான டாள்தொபியாஸ், திருக்கண்ணன், பரவதன் குமரன் ஆகியோர் அவனின் மனம் அறிந்து செயல்படுவது சிறப்பு.
👑 கரிகாலனின் வரலாறு என்றாலும் முதல் பாகம் முழுவதும் விறல்வேளே ஆக்கிரமித்து ஆட்சி புரிகிறான்.
👑 வரலாற்று கதைகள் படிக்க விரும்புகிறவர்கள் இந்த புத்தகத்தை நிச்சயம் வாசியுங்கள் 💯
Profile Image for Balaji Srinivasan.
150 reviews10 followers
February 28, 2024
வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல சரித்திர நாவல் வாசித்த அனுபவம்.

சோழ நாட்டின் இரு நகரங்கள். உறைந்தை மற்றும் புகார். சோழ அரசனின் மறைவிற்கு பிறகு இருங்கோ என்பவன் உறைந்தை நகரத்தில் சோழ மன்னனாக முடிசூட்டி கொள்கிறான். சோழ இளவரசன் ஆன கரிகாலனையும் சிறைபிடித்து வைக்கிறான். மீதம் இருக்கும் ஒரே நகரமான புகாரில் மீதமிருக்கும் சோழ நாட்டு தலைவர்கள் இருக்கிறார்கள். முக்கியமாக கதை நாயகன் விறல்வேல். புகாரில் இருக்கும் விறல்வேல் கரிகாலனை மீது சோழ அரியணையில் அமர்த்துவாரா என்பதே கதை.

முதல் பாகம் முழுவதும் கதை நாயகனின் சாகசங்கள் தான். கதை மிகவும் சுவாரசியமாக இருக்க வேண்டுமென்றால் எதிராளியும் மிகவும் மதியூகியாக இருந்தால் தான் முடியும். ஆனால் இந்த புத்தக���்திலும் எப்பொழுதும் போல் அறிவில்லாத, யோசிக்க தெரியாத வில்லன்கள். அவர்கள் வகுக்கும் திட்டங்களும் சூழ்ச்சிகளும் விறல்வேல் அனாயசமாக கண்டுபிடிப்பதை போல் உள்ளது. அதனால் வில்லன்கள் என்ன செய்தாலும் இறுதியில் நாயகன் தான் ஜெயிப்பான் என்று திடமாக நம்ப முடிவது சுவாரசியத்தை குறைத்து விடுகிறது.

புத்தகத்தில் ஆங்காங்கே நாயகன் காணாமல் போனாலோ அல்லது யாருக்கேனும் ஆபத்து வந்தாலோ எளித���க " இப்போ பாரேன். ஹீரோ வந்து எல்லாரையும் காப்பாத்துவார் பாரேன்" என்று தன் நினைக்க தோன்றுகிறது.

இரண்டாம் பாகத்திலாவது வில்லன்கள் யோசிக்கிறார்களா என்று பார்ப்போம் .
7 reviews
Read
January 12, 2022
Good book about Karikaal Cholan

Always wanted to know about Karikaalan. This is full about him. Good narrative and lot of evidences. Will recommend for all Tamil readers
Displaying 1 - 4 of 4 reviews