Jump to ratings and reviews
Rate this book

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்

Rate this book
எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் வெளிவந்து இருபதாண்டுகள் ஆகிறது. இப்போதும் இந்த நாவல் கொண்டாடப்படுவதாகவும் சகித்துக் கொள்ளமுடியாததாகவும் இருப்பதற்கு காரணம் தமிழ்ப் புனைகதை மொழியை அது சிதறடித்து ஒரு புதிய கதை சொல்லல் முறையை உருவாக்கியது தான். அந்த வகையில் தமிழில் பின் நவீனத்துவ நோக்கில் எழுதப்பட்ட முதல் நாவலாக இதையே குறிப்பிட இயலும். மனித உடல் மற்றும் மனதின் மீது நமது கலாச்சார வாழ்க்கை செலுத்தும் வன்முறைக்கு எதிராக, இலக்கியத்தில் அது உருவாக்கும் ஒழுக்கவியல் சார்ந்த அழகியலுக்கு எதிராக இந்த நாவல் ஒரு மாற்று மொழியையும் புனைவு வெளியையும் படைக்கிறது.

170 pages, Paperback

First published October 1, 2010

35 people are currently reading
171 people want to read

About the author

Charu Nivedita

80 books147 followers
Charu Nivedita (born 18 December 1953) is a postmodern, transgressive Tamil writer, based in Chennai, India. His novel Zero Degree was longlisted for the 2013 edition of Jan Michalski Prize for Literature. Zero Degree was inducted into the prestigious '50 Writers, 50 Books - The Best of Indian Fiction', published by HarperCollins. Vahni Capildeo places Charu Nivedita on par with Vladimir Nabokov, James Joyce and Jean Genet, in her article in the Caribbean Review of Books. He was selected as one among 'Top Ten Indians of the Decade 2001 - 2010' by The Economic Times. He is inspired by Marquis de Sade and Andal. His columns appear in magazines such as Art Review Asia, The Asian Age and Deccan Chronicle.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
31 (23%)
4 stars
51 (38%)
3 stars
37 (27%)
2 stars
11 (8%)
1 star
4 (2%)
Displaying 1 - 19 of 19 reviews
Profile Image for Naren.
75 reviews1 follower
Read
July 26, 2025
pudikalanu solla mudiyala, pudichirukunum solla mudiyala........
Profile Image for Selva.
55 reviews
August 28, 2020
Existentialism (இருத்தலியல்) : live experience and live reality
அதாவது மனிதர்கள் சமூக தடையின்றி சுதந்திரமாக தங்கள் தேர்வு களையும்(choice) செயல்களையும் செய்யலாம். இவ்வாறு கிடைக்கும் இயல்பான இருக்கும் சிந்தனை, உணர்வு, அனுபவத்தை பற்றி உரைப்பது.

கதையின் நாயகன் சூர்யா ஒர் பத்திரிக்கை எழுத்தாளன் தன்னை பற்றியும் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைப் பற்றியும், மனிதர்களை பற்றியும் நாவலாக எழுத முற்படுகிறான். மிக எதார்த்தமாக கதை நகர்கிறது, பல சிக்கலான உறவுகளையும், சில கசப்பான உணர்வுகளையும் குறை கூறாமல் சூர்யாவின் வாயிலாக முன் வைக்கிறார் ஆசிரியர்.
Profile Image for Manoj Prabhakar.
26 reviews9 followers
May 6, 2017
இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறதே ! ஏதாவது ஒரு கட்டத்தில் புரிந்துவிடும் என்றும் படித்துமுடித்த சாருவின் இரண்டாவது நாவல் இது. இன்னும் அதற்கான பக்குவம் கிடைக்கவில்லை.
Profile Image for Dhulkarnain.
80 reviews2 followers
November 28, 2023
கடவுள் நம்பிக்கையுள்ள சராசரி மனிதர்களுக்கு இருத்தலியல் பற்றிய கேள்வியோ, குழப்பமோ இருப்பதில்லை. கடவுளை மறுக்கும்போதுதான் இருத்தலியல் பற்றிய கேள்விகள் வருகின்றது. நாம் ஏன் பிறந்தோம்?. நம் வாழ்க்கையின் நோக்கம் என்ன?.மனிதனுக்கான ஒழுக்கநெறிகள் தேவையா?. தனிமனித சுதந்திரத்திற்கு எல்லையுண்டா? என்பன போன்ற கேள்விகள் வருகின்றது. இருத்தலியல்வாதம் என்பது வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை தேடுவதுதான் என்று சொன்னாலும், ஏற்கனேவே மனிதர்கள் உருவாக்கி வைத்திருக்கும் ஒழுக்கக் கோட்பாடுகளை, வரம்புக்குட்பட்ட சுதந்திரத்தை, அறம்சார்ந்த விஷயங்களை உடைத்து எல்லாவிதமான சமூக விழுமியங்களையும் புறக்கணிக்கின்றது. இதனால் சமூகத்தை புறக்கணித்தல், குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தல், வரம்புமீறிய போதை நுகர்வு, முறையற்ற பாலியல் வேட்கை எல்லாவற்றையும் சரிகாண்கிறது. "இருத்தலியல் என்பது மனிதன் எதுவாக இல்லையோ அதுவும், மனிதன் எதுவாக இருக்கிறானோ அதுவல்லாததும்தான்" என்றால் மனிதன் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்று வரையறுத்துச் சொல்லவேண்டும். அப்படி ஏதாவது சொல்லப்பட்டிருக்கின்றதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை கேட்பதன் மூலம் எல்லா தனிமனித மற்றும் சமூகம் சார்ந்த பொறுப்புகளையும் புறந்தள்ளிவிட்டு முழுக்க முழுக்க எல்லாவிதமான இன்பத்தை நுகர்வது மட்டும்தான் என்கிற சுயநலமான உள்நோக்கத்தை நியாயப்படுத்துகின்ற ஒன்றாகத்தான் இந்த இருத்தலியல்வாதத்தை நான் பார்க்கிறேன். இருத்தலியல்வாதம் என்பது தத்துவமும் கிடையாது. ஒழுக்கக்கேட்டை நியாயப்படுத்துகின்ற ஒரு கவசம் மட்டுமே இருத்தலியல் என்பது. மனிதன் சந்திக்கின்ற எந்த பிரச்சினைக்கும் அது தீர்வை கொடுக்காது. மாறாக புதிய புதிய பிரச்சினைகளைத்தான் ஏற்படுத்தும். இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஐரோப்பா முழுக்க பல்வேறுவிதமான தத்துவங்கள் தோன்றின.இருத்தலியல் என்பதும் அதில் ஒன்று. இருத்தலியல்வாதிகள் என்று தங்களை கூறிக்கொள்வோர் மிகச்சிறந்த சமூகத்திற்கு முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டார்களா என்று பார்த்தால், ஒரு சராசரி மனிதனைவிட மிகக் கீழான பகுத்தறிவற்ற விலங்குகளுக்கு ஒப்பான வாழ்க்கையை வாழ்ந்து மரணிக்கின்றார்கள். இருத்தலியல்வாதிகள் என்று தங்களை மார்தட்டிக்கொள்பவர்கள் எல்லாம் ஒன்று தற்கொலை செய்துகொள்கிறார்கள். அல்லது எய்ட்ஸ் வந்து இறந்துபோகிறார்கள். 


          இந்த நாவலில் ஏன் இவ்வளவு ஆபாசம் இருக்கின்றது என்று சாருவிடம் நீங்கள்  கேட்டால் இருத்தலியல் அடிப்படையில் இது எல்லாவற்றையும் கட்டுடைக்கிறது என்பார். 


         குழந்தையை பெற்றால் அதனைப் பெற்றவர்கள்தான் வளர்க்க வேண்டும் என்பது சமூகம் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் ஒரு விஷயம். சாரு பிறந்தபோது ஒருவேளை சாருவின் பெற்றோர்கள்,  இருத்தலியல் அடிப்படையில் குழந்தை வளர்ப்பையே புறக்கணித்துவிட்டிருந்தால் இன்று சாரு எழுத்தாளராக ஆகியிருப்பாரா? என்பதும் கேள்விக்குறிதான்.



      பகுத்தறிவற்ற மூடநம்பிக்கைகள் எவ்வளவு ஆபத்தானதோ அதைவிட ஆபத்தானது மேற்குலகின்  பகுத்தறிவற்ற முற்போக்கு தத்துவ உளறல்கள்.

        
Profile Image for Marudhamuthu.
68 reviews12 followers
September 25, 2022
சாருவை வாசிக்கும் முன் லக்ஷ்மி சரவணக்குமார்ஐ வாசியுங்கள். ஏனென்றால் லக்ஷ்மி சரவணக்குமார் தொட நினைக்கும் உச்சமே சாரு 💙💙💙💙💙
Profile Image for Praveen Rajaram.
9 reviews
January 20, 2024
முற்றிலும் வழக்கத்திற்கு மாறான ஒரு கதை சொல்லாடல், கட்டமைப்பு (structure). வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து சுவாரசியமாக சரசரவென கதை இழுத்து சென்றது. சூர்யா என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து அதன் மூன்று தலைமுறை குடும்பத்தின் கிளைக் கதைதான் இந்த நாவல். நான் இதுவரை படித்ததிலயே இதுதான் முற்றிலும் மாறுபட்ட நாவல். இவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும் ஏனென்றால் நாவலின் மையக்கரு, எதற்காக இந்த தலைப்பை வைத்து இருக்கிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஒரு வேளை இன்னும் ஐந்து அல்லது பத்து வருடங்கள் கழித்து இந்த நாவலை படித்தால் புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன்
30 reviews1 follower
February 9, 2020
The way charu nivethitha written this novel, doesn't interest me at all. It is a nonlinear mode of writing. But most of the characters or names he written can't be connected even if it was written in linear mode. So charu sir if someone says I understood your novel don't believe them. It is far from understanding. Can you understand your own novel sir?
Profile Image for இரா  ஏழுமலை .
136 reviews8 followers
February 25, 2022
இது ஒரு இருத்தலியல் நாவல் என்பதால் இருத்தலியல் என்றல் என்ன என்று பார்போம் “மனிதன் என்பவன் இப்போது எதுவாக இல்லையோ அதுதான் , இப்போது எதுவாக இருக்கிறதோ அதுவல்ல “ என்று வரையறை செய்கிறது . மொழி என்பது மனிதனின் இருப்பை நிலைபடுதுவதற்கான தொழில்நுட்பமாக கையாள்கிறான் ஆகவே பெயர்யற்ற பொருட்கள் மனிதனின் இருப்பை நிலைகுலைய வைப்பதால் அவன் பொருட்களின் மீது பெயர் வைக்கிறான் ஆகவே அவன் தான் சூழலின் முதல் வினையை தொடங்குகிறான் . ஆகவே மொழி என்பது தொழில்நுட்பமாக அதாவது அறிவாக அதாவது பொருட்களின் மீதான ஆதிக்கமாக ஆகிறது . வேறு வேறு சூழலில் வாழும் மனிதன் வெவ்வேறு பெயர்களை மொழிய��� அதாவது தொழில்நுட்பதை கொண்டுவுள்ளான் . வேறுவேறு இனங்கள் ஒன்றையொன்று உறையும் போது அதிகாரம் பிறக்கிறது , மொழின்மீது கட்டப்பட்ட அறிவும் அறிவின் மூலம் கட்டப்பட்ட ஆதிக்கமும் சமச்சீரற்ற ஆதிகத்தை உருவாக்கிறது . இதுவே இன்றைய சுரண்டலுக்கும் வழிசெய்கிறது ... நாவலில் தொம்பர்களும் இன்னும் இரண்டு இனக்குழுவும் மோதும் போது அழகியல் மீறிய வன்முறை வெளிப்படுகிறது அதற்கான மொழிழை சாரு கையாள்கிறார் .இது இவறிருக்க தமிழில் எதார்த்தவாதம் என்றுவரும்போது அழகியலுக்காக எதார்த்தவாதம் கைவிடப்படுகிறது எனலாம் .இது தன்னிலை ஒடுக்குமுறை ஆகிறது மொழி கட்டுடயும்போது அதை எதிர்கொள்ள முடியாமல் ஆகிறது ஆகவே தமிழில் அழகியல் கட்டுடைப்பு நடக்கவே இல்லை அதை நடத்தியது சாரு தான் ... நாவல் எதார்த்தவாத மொழியில் செயல்படும் போது செயற்கையான டாகுமெண்டரி தனம் வருகிறது இனொரு தளத்தில் கலை இலக்கிய உன்னத புனிதபடுதலை செய்கிறது ஆக மாயமான அறிவுஜீவியாக தன்னை கருதிகொல்கிறது . இந்த அறிவுஜீவிகள் விலக்கிவைக்கப்பட்ட ஒடுக்கபடவற்றை புரிந்துகொளவோ சந்திக்கவோ முடியாதவர்களாக இருக்கிறார்கள் இதை இந்த நாவலில் சூர்யா , அருண் , குருஜி போன்றவர்களின் முறையற்ற பாலியல் தொடர்பு மூலம் நாம் அறியலாம் ... நாகரீகத்தின் போலித்தனத்தை சமுதயபிற்போக்கு தனத்தை கடுமையாக சாடுகிறது புதினம் தனது துணிச்சலலும் அங்கத மொழியாலும் அழகியல் உடைப்பாலும் தனக்கான இடத்தை சாரு அடைந்து உள்ளார் . இந்த புதினத்தில் வரும் முன்பகுதியை உங்களால் தலையை உடைதுகொண்டாவது புரிந்து கொண்டால் தான் சாருவை உங்களால் புரிந்துகொளமுடியும்.
Author 2 books16 followers
August 19, 2023
ஒரு எழுத்தாளனின் கதை என்கிற அறிமுகத்தால் இந்த புத்தகத்தை எடுத்தால் , எழுத்து பற்றியோ , எழுத்தாளனாக இருப்பதனால் இருந்ததனால் அவனடையும் அனுபவம் பற்றியோ கதை இருக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன் . ஏமாற்றமே எனக்கு மிஞ்சியது . கதைக்கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை . முடிந்து விட்டதா என்பதை இரண்டு , மூன்று முறை நம்மை நாமே கேட்க்கொள்கிற நிலைமை படிப்பவருக்கு இருக்கு . ஒரு நாவலுக்கான வீதிமுறைகளை மீறி படைக்கப்பட்ட படைப்பு என்று இணையத்தில் பலர் இந்த நாவலின் ஆசிரியர் சாருவையும் , அவர் படைப்புக்களை கொண்டாடினாலும் , தனித்திருக்கும் அனைத்தும் சிறந்திருக்கும் என்று நினைப்பது மடமையே . அதுவும் குறிப்பாக இந்த நாவல் பெரிதாக எந்தவொரு தாக்கத்தையும் படிப்போரிடம் ஏற்படுத்தியதாக என்னால் யோசிக்கவும் முடியவில்லை , உணர்வும் முடியவில்லை .புத்தகத்தை விட சிறந்த கண்ணாடி எதுவுமில்லை என்று என்னை போல் நம்பிக்கை உள்ளவர்களுக்கான படைப்பு போல் சித்தரிக்கப்பட்டபோதும் , வரம்புகள் மீறப்பட்டு மிகவும் வெளிப்படையாக ஆபாச வர்ணனைகள் கதாபாத்திரத்தின் உள்ளத்து எண்ணத்தை பிரதிபலிக்க உதவுகிறது என்கிற எண்ணத்தை தாண்டி தேவையில்லாத இடத்தில திணிக்கப்பட்டிருக்கிறது என்கிற எண்ணம் தான் என்னுள் எழுந்தது . joy of reading என்கிற ஒரு விடயத்தை தாண்டி வேறு ஒன்றுமேயில்லாத நாவல் என்று தான் இதை சொல்லவேண்டும் . transgression எழுத்து எனக்கு பிடிக்காமல் இருக்கலாம் இல்லை அதற்கு நான் லாயக்கு இல்லாதவனாக கூட இருக்கலாம் ஆனால் இந்த படைப்பு பிரபலமான ஒரு ஆங்கில பழமொழியை பொய்யாக்கியுள்ளது என்பதை நான் இங்கே சொல்லியே தீர வேண்டும் . அந்த பழமொழி "துரோகம் செய்யாத ஒரே நண்பன் புத்தகம் " .
Profile Image for Ram.
93 reviews
November 20, 2025
இந்தச் சிறிய நாவல் வெளிவந்து மூன்று தசாப்தங்கள் கடந்திருந்தாலும், அது இன்னமும் தமிழ் வாசிப்பின் நடை, மொழி, எதிர்பார்ப்புகளைச் சவாலிடும் முக்கியமான படைப்பாகத் திகழ்கிறது. நாவலின் முன்னுரையில், தனது தற்கால நாவல்களில் தொடர்ச்சியான ஒரு துவக்கத்தைக் குறிக்கும் முதலாவது அம்சமாக இந்தப் படைப்பு விளங்குகிறது என்பதை எழுத்தாளர் குறிப்பிடுகிறார்; இதனை அவரது நாவல்களை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களும் சுட்டிக்காட்டுவதாக அவர் எழுதுகிறார்.

இந்த நாவல் ஒருபுறம் கொண்டாடப்படுவதற்கும் மற்றொருபுறம் சகித்துக்கொள்ள முடியாததாகப் புரியப்படுவதற்கும் காரணம், அது தமிழ் புனைகதை மொழியை முற்றாகச் சிதைத்து, புதிய கதை சொல்லல் நடைமுறையை உருவாக்கியதிலேயே உள்ளது. பின்நவீனத்துவ மனோபாவத்துடன் எழுதப்பட்ட முதல் முக்கிய தமிழ் நாவல்களில் ஒன்றாக இதைச் சுட்டிக்காட்டலாம். மனித உடல் மற்றும் மனதை நமது கலாச்சார கட்டமைப்புகள் எவ்வாறு கட்டுப்படுத்தி வன்முறையாக்குகின்றன என்பதை இந்த நாவல் தீவிரமாக வெளிப்படுத்துகிறது; அதேசமயம், இலக்கியம் பாரம்பரியமாக உருவாக்கிய ஒழுக்கவியல் அழகியலுக்கு எதிராக மாற்றான மொழி நடை மற்றும் வேறுபட்ட புனைவு வெளியையும் அது முன்வைக்கிறது.

இங்கு கதை என்பது நேராகச் செல்லும் தொடர்ச்சி அல்ல; அனுபவத்தின் பிளவுகள், மனச் சிதைவுகள், சிந்தனையின் சீரற்ற அலைச்சல்கள் ஆகியவற்றின் வழியே உடல் மொழிபோன்ற கதையாக்கம் உருவாகிறது. என் பார்வையில், வாசகருக்கு ஏற்படும் அசௌகரியத்தில்தானே இந்த நாவலின் முக்கிய அரசியல் அமைந்துள்ளது, ஏனெனில் அது ஒத்திசைவைப் பெறுவதற்காக எழுதப்படவில்லை; மாறாக, எதிர்ப்பின் வழியே வாசிப்பை உருவாக்குவதற்காகவே கட்டமைக்கப்பட்டுள்ளது.
Profile Image for Dharshan.
9 reviews
October 1, 2025
1989இல் அதுவும் தன் முதல் நாவலாக "சாரு நிவேதிதா" இப்படி ஒரு எழுத்தை பதித்திருப்பது வியப்பளிக்கிறது. இந்த நாவல் நான்லீனியர்(non-linear) வடிவத்தில் இருந்தாலும் அதை சற்று விளக்கும் அடிப்படையில் நாவலின் இறுதியில் 30 பக்கங்கள் இடம் பெற்றிருப்பது சிறப்புக்குரியது. எந்த இடத்திலும் ஒரு தனிப்பட்ட கருத்தை முன்வைக்காமல் வெறுமனே கேள்விகள் அல்லது விவாதங்களை எழுப்பி நம்மை சிந்தனை தேடலில் திளைக்க வைக்கிறது என்று கூறலாம்.

எது விலக்கப்பட்டு இருக்கிறதோ அதுவும் இயல்பாக பேசப்பட வேண்டும் என்பதை உரக்கச் சொல்கிறது. இங்கு சமூகத்தில் ஒரு அடையாளம் பதித்திருக்கும் மனிதர்கள் தனிப்பட்ட வாழ்வில் மாறுபட்ட அடையாளத்துடன் இருக்கும் சகஜத்தை பெரிதும் பேசியுள்ளது.

மனித வாழ்வில் சுற்றமும், சூழலும், பழகும் மனிதர்களும்(kinship structure) நம் எதிர்காலத்தை பெரிதும் தீர்மானிக்கிறார்கள் என்பதை பலரால் இங்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வாழ்வியல் அபத்தங்களின் மூலம் சுட்டிக்காட்டி உள்ளது இந்த நாவல்.

அழகியல், அறவியல், அதிகாரம் ஆகிய மூன்றும் அன்றாட நிகழ்வுகளில் வகிக்கும் முக்கியத்துவம் பற்றி வெவ்வேறு கோணங்களில் பேசியுள்ளது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் எக்ஸிஸ்டென்சியலிசம் என்ற தத்துவம் பொருந்துமா என்ற விவாதத்தையும் எழுப்பியுள்ளது.

இங்கு வாழ்வின் சில பேருண்மைகளை உணர்ந்து கொள்ள நம் மனம் என்னும் "பிரக்ஞையின்" போலி ஆடைகளை களைந்து நிர்வாணப் படுத்துவது எவ்வளவு அவசியம் என்பதை நான் புரிந்து கொண்டேன்!
Profile Image for Rajesh Arumugam.
144 reviews3 followers
February 6, 2024
என் மனதில் நான் புழுங்கிக்கொண்டு இருந்த கேள்விகளை அப்பட்டமாக ஒரு புனைவாக/அ-புனைவாக எழுதியிருக்கிறார் சாரு. உறவுகள், உறவுகள் பின்னால் உள்ள ஆதிக்கம். அதை ஆண் சுமக்க பெண் சிறைப்படுத்தபடுகிறாள். சிறு வயது முதலே ஆணின் மீது இந்த ஆதிக்கம் பொறுப்பு என்ற பெயரில் வளர்த்து எடுக்கப்படுகிறது. இதை நான் 15 ஆண்டுகள் முன்பே படித்து இருந்தால் நான் பட்ட மனவதைக்கு மருந்தாங்க இருந்து இருக்கும். என் உள்ளே இருந்த பழைமைவாதியும் அப்போதே அழிந்து இருப்பான். 20 வருடங்கள் முன்பு படித்து இருந்தால் உண்மையான சுதந்திர பாதையில் இருந்து இருப்பேன். நன்றி சாரு.
Profile Image for Kannan Sv.
66 reviews32 followers
June 22, 2017
This is "Charu". It open you a new world. Only two options for you 1)"To exit this transgressive world by rejecting it" or 2)"Try to understand this transgression and go ahead with it"...
Profile Image for Itadori Yuji.
5 reviews
February 18, 2024
Idha book padicha readers block agirum.. Charu oda book ah inimel thayangi dhan padikanumnu thonudhu.. 🥱..
Profile Image for Raja Guru.
34 reviews18 followers
May 27, 2020
இந்த நாவல் முதலில் முன்வைப்பது எதையுமே அல்ல .
ஒரு கடிதத்தில் இந்த நாவல் துவங்குகிறது , ஒருவர் கதாசிரியரை பார்க்க வருகிறார் , ஆனால் பார்க்க முடிவதில்லை , அவர் எழுதிய கடிதத்திற்கு பதில் எழுதும் போக்கில் சில சம்பவங்கள் , சில மேற்கோள்கள் ஆகியவற்றை சொல்கிறார். பெரும்பாலும் எதற்கும் தொடர்பில்லமல் இருக்கிறது .
பின்னர் தன் குடும்பத்தை அல்லது ஏதோ ஒரு குடும்பத்தை பற்றியதாக கதை தொடங்குகிறது.
அதுவும் இயல்பான ஒரு நிகழ்வோ , கதை மாந்தர்களோ கொண்டிருக்கவில்லை. அனைவரையும் அறிமுக படுத்தும் போது , எந்த வயதில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர் என சொல்கிறார். மிக கற்பனையாகவே தெரிகிறது.
கொஞ்சமும் இயல்பில்லாத மனிதர்கள் , மிகை கற்பனை , தொடர்பில்லாத எழுத்து நடை . நான்-லீனியர் என்று சொன்னால் கூட ஏதோ ஒரு தொடர்பு இருக்கும், அதற்கும் வழியில்லை .
இந்த எண்ணம் தோன்றாமல் இருக்க , இதை எப்படி படிப்பது, எப்படி புரிந்து கொள்வது என்று ஒருவர் பின்னுரையில் விளக்கம் எழுதியுள்ளார். அதற்க்கு நாம் இதையே மறுமுறை கூட படித்து விடலாம்.
சுருக்கமாக , இதை படிப்பதற்கு , அவரின் இணையே எழுத்துக்களையே படித்து விடலாம்.
Profile Image for Umesh Kesavan.
451 reviews177 followers
Read
July 15, 2014
Disgusting writing. (No,I mean it as a compliment).Unable to rate the book.This style of writing is really new to Tamil literature.
Displaying 1 - 19 of 19 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.