வெனிசிலிருந்து பயணித்து 13ம் நூற்றாண்டில் இந்திய தீபகற்பத்தின் அரபிக்கடலை ஒட்டிய துறைமுக நகரங்களை வந்தடைந்து, அந்நகரில் உலவிய போது தான் கண்டும் கேட்டும் அறிந்ததை பதிவு செய்திருக்கிறார் மார்க்கோபோலோ. சில பகுதிகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் தங்களை மிக உயர்த்தி சொல்லப்பட்ட கற்பனை கதைகளால் நிரம்பியிருக்கின்றன.
ஆனாலும் தமிழ் மன்னர்களின் எளிமை (தரையே ஆசனம்) மற்றும் அவர்களின் அறத்துடனான சிறப்பான ஆட்சியைப் பற்றிய குறிப்பும், குஜராத்தின் கொள்ளைக்காரர்களைப் பற்றிய குறிப்பும் அதே கால கட்டத்தில் தென்னிந்தியாவில் கள்வர் பயம் அற்று இருந்ததும், அப்படியே அரிதாக கொள்ளை நடந்தாலும் அரசே அதற்கு இழப்பீடு வழங்குவதும் என நாம் வரலாற்று ரீதியாகவே சிறப்பு பெற்றிருப்பதற்கான சான்றுகளும் பெருமிதம் கொள்ள வைக்கும்.
அக்காலத்தில் கருப்புத் தோல் நிறமே உயர்வாகக் கருதப்பட்டது போன்ற ஆச்சரியமான தகவல்களும் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன!
அரை மணிக்குள் படித்து முடிக்க கூடிய சிறுநூல்.
பக்கம்: 43