பத்திரிக்கை செய்திகளிலிருந்து பெரும்பாலும் நான் கதைகளை உருவாக்குவதில்லை. அப்படியான முயற்சிகள் சலிப்பூட்டக்கூடியவை என்பதால் சில வருடங்களாக நான் செய்தித்தாள்கள் வாசிபதையே நிறுத்திவிட்டேன். பத்திரிக்கைகள் தேவைக்கு அதிகமாய் தகவல்களைத் தந்தபடியே இருக்கின்றன. இந்த தகவல்கள்தான் மனிதர்களை இயல்பாய் வாழவிடாமல் எப்போதும் அச்சத்துடனேயே வைத்திருக்கிறது. என்னைச் சூழ்ந்திருக்கும் எல்லோருமே தகவல்களால் நிரம்பியவர்களாய் இருப்பதைப் பார்க்க பல சமயங்களில் வியப்பாயிருக்கும். ஏன் இத்தனை தகவல்களை சிரமங்கொண்டு சுமந்துகொண்டிருக்கிறார்கள்? நான் எல்லாவற்றையும் கதைகளாக கேட்க விரும்புகிறவன், அப்படியே கேட்டுப் பழகியவன். செய்திகளாக வந்தடையும் எல்லாமும் பல சமயங்களில் செய்திகளாகவே கடந்து போய்விடும். சில வருடங்களுக்கு முன் நண்பர் பாலநந்தகுமாருடனான ஒரு சந்திப்பின் போது அப்போது பரபரப்பாய் பேசப்பட்ட ஒரு வழக்கைக் குறித்து சுவாரஸ்யமாய் சொன்னார். அவர் சொன்னவிதம் ஒரு கதையாகவே எனக்குள் பதிந்ததால் அந்த வழக்கைக் குறித்து கூடுதலாய்த் தெரிந்து கொள்ள விரும்பினேன். பல வருடங்களுக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்ட அந்த கொலை வழக்கில் இரண்டு ரவுடிகள் எப்படி மாட்டிக் கொண்டார்கள் என்கிற விவரங்கள் இதற்குமுன் கேள்விப்படாததாக இருந்தது. நீண்ட காலத்திற்குப்பின் தன் குற்றத்தை ஒத்துக் கொள்ளும் ஒரு மனிதனின் மனநிலை என்கிற ஒரு புள்ளி மட்டும் தொடர்ந்து எனக்குள் சுற்றிக்கொண்டே இருந்ததின் நீட்சிதான் ‘வாக்குமூலம்.’
The reality we create around us is a big ecosystem not only individuals but society itself depends on it. Any fact to change its status quo is simply not possible. Shorter version of crime and punishment
பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் நித்யா என்ற பெண்ணின் பிரசவத்தில் துவங்குகிறது இக்குறுநாவல். இந்த சம்பவம் 30 ஆண்டுகளுக்கு முன்னால் நித்யாவின் தந்தை ஞானசேகரன் செய்த ஒரு குற்றத்தினைத் தூசிதட்டி எழுப்பிவிடுகிறது. செய்த குற்றத்திற்கு தண்டனைப் பெற வேண்டுமென ஞானசேகரன் முயல்வதும் அதனால் பாதிக்கப்பட போகும் அவரது குடும்பமும், ஒரு சிமெண்ட் பேக்டரியும் அதனை தடுக்க முயல்வதுமே நாவல்.
ஒரே சிட்டிங்கில் அதிகம் போனால் ஒன்றரை மணி நேரத்தில் வாசித்துவிடக் கூடிய ஒரு குறுநாவல் தான் "வாக்குமூலம்". அளவில் சிறியதென்றாலும் மனதை மனதை முழுமையாக ஆட்கொண்டு விட்டது. 12 வகுப்பு படிக்கும் மாணவி விடுதி கழிவறையில் பிள்ளை பெறுவதே அதிர்ச்சியான விஷயமாக யோசிக்கும் போது அடுத்தடுத்து பல திருப்பங்கள் நாவலில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
"ஏதோவொரு வகையில் எல்லா மனிதர்களுமே மனப்பிசகு கொண்டவர்கள்தான். ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் அருவருப்புகளையும் ரகசியங்களையும் மனம் திறந்து பேசத் துவங்கிவிட்டால் நாம் மரியாதை கொண்டிருக்கும் எத்தனையோ பேரின் பிம்பங்கள் நொறுங்கிப்போய்விடும்." - எத்தனை உண்மையான வரிகள். மற்றவர்களுக்கு நாம் ஒருவராகவும், நமக்கு நாம் இன்னொருவராகவுமே வாழ்ந்து தொலைக்க வேண்டியிருக்கிறது. "ரொம்ப நல்ல மனுஷன்" என்ற மற்றவர்களின் நற்சான்றிதழ் வேண்டியே பல முகமுடிகளைப் போட்டுக் கொண்டு உள்ளுக்குள் இருக்கும் வன்மங்களையும் வக்கிரங்களையும் மறைத்துக் கொண்டு மரியாதையாக வாழ்கிறோம்.
உண்மையை பேசுங்கள், உண்மையாக இருங்கள் என்று சொல்லும் பெரும்பாலானோர் உண்மையை அவ்வளவாக விரும்புவது இல்லை என்பது தான் உண்மை.
லஷ்மி சரவணகுமார் அவர்களை ஓராண்டிற்கு மேல் பின்பற்றியும், யூடியூபில் அவரது உரையாடல்களை கேட்டிருந்தபோதிலும், லஷ்மி சரவணகுமார் அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்தை கூட வாசிக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் தன் மகள் நித்யா பெற்றெடுத்த குழந்தையை கொன்றுவிட்டால் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்பட்டாது என்று என்னி, அக்குழந்தையை குளத்தில் போட துணிந்த ஞானசேகரனின் கால்களை பிடித்து கெஞ்சிய நித்யாவை பொருட்படுத்தாமல் குளத்தை நெருங்கியவனின் காதில் குழந்தை வீறிட்டு அழும் சப்தம் கேட்டு 30 வருடங்கள் முன் அவன் கொன்ற ஆசைக்காதலி இவாஞ்சலின் மற்றும் அவள் வயிற்றில் இருந்த அவர்களின் சிசுவின் நியாபகம் வந்தது போலும்.
30 வருடத்திற்கு முன்பு செய்த குற்றத்திற்கு தண்டனை பெற வேண்டுமென ஞானசேகரன் முயல்வதும், அதனால் ஏற்பட போகும் பாதிப்பை அவனது குடும்பம் மற்றும் சிமெண்ட் பேக்டரி தடுக்க முயல்வதே வாக்குமூலம்.
"ஏதோவொரு வகையில் எல்லா மனிதர்களுமே மனப்பிசகு கொண்டவர்கள்தான். ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் அருவருப்புகளையும் ரகசியங்களையும் மனம் திறந்து பேசத் துவங்கிவிட்டால் நாம் மரியாதை கொண்டிருக்கும் எத்தனையோ பேரின் பிம்பங்கள் நொறுங்கிப்போய்விடும்". இங்கு பலரும் அக்கம் பக்கம் இருப்பவர் என்ன நினைத்து கொள்வார் என்ற அச்சத்தில் தான் விரும்புவதை விடுத்து முகமூடி அணிந்து வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
ஊரார் மற்றும் மானமரியாதை என்ற மாய வலையில் ஞானசேகரன் சிக்காமல் இருந்திருந்தால் இவாஞ்சலின்னும் அவர்கள் குழந்தையும் இப்போது இருந்திருப்பார்கள்.
ஒரு புள்ளியில் துடங்கி மற்றொருப்புள்ளியில் கதை முடிகிறது. தன் மனதில் இருக்கும் ரகசியத்தை ஒருவன் வெளிசொல்லும் பொழுது சமூகம் அவனை என்னவாக பாக்கும் அவனுக்கு குடுத்த மரியாதை எப்படி அவமரியாதையாக மாறுமென்று வாக்குமூலம் கூறுகிறது. மிகவும் அவசர அவசரமாக விரைந்து கதையை முடித்து இருப்பதுபோல் உணர்கிறேன் . கதாபாத்திரங்கள் தன் தன்மையை மாற்றிக்கொள்ளும் விதம் ஏற்புடையதாக எனக்கு படவில்லை.
காண்ட்ராக்டர் ஞானசேகரின் மகள் நித்யா பள்ளியில் படிக்கும் சக மாணவன் அருண்னுடன்னனா காதலால் பள்ளி கழிவறையில் குழந்தை பெற்று எடுப்பதில் தொடங்குகிறது நாவல். நாம் தினசரி செய்திகளில் படித்தும் பார்த்தும் கடந்து செல்லும் ஒரு செய்தியை மையமாக்கி புனயப்பட்ட நாவல். தன் மகளின் இந்த நிலைக்கு காரணம் தன் கடந்த கால கொலை குற்றம் தான் என எண்ணும் ஞானசேகர், தான் செய்த குற்றத்திற்கு தண்டனை பெற முயல்வதுதான் கதை. லஷ்மி சரவணகுமாரின் இயல்பு நடையில் ஒரு குறுநாவல்.