Jump to ratings and reviews
Rate this book

பிரைட் அண்ட் பிரிஜூடிஸ் : புத்தகம் ஒன்று

Rate this book
ஆங்கில இலக்கியத்தின் சிறந்த நாவல்கள் என்று எடுக்கப்படும் எந்த பட்டியலிலும் , முதல் பத்து இடங்களுக்குள் ' பிரைட் அண்ட் பிரிஜூடிஸ் ' வந்துவிடும். மிகவும் விரும்பப்படும் நாவல்கள் என்பதிலும் இல்லாமல் இருக்காது.
1813இல் இரண்டு பாகங்களாக எழுதப்பட்ட இந்த நாவல் சிறப்பாக பேசப்படுவதற்கு அதன் கதைக்கருவே காரணம். எலிசபெத் பென்னட் , எப்படி தனது கணவனை தேர்ந்தெடுக்கிறாள் என்பதுதான் கதை. அவசரப்பட்டு முடிவெடுப்பதன் விளைவுகள் , மேலோட்டமாக நல்லவர்கள் போலிருப்பவர்கள் போன்றவற்றை கற்று தேர்ந்து மனதை சரியான நபருக்கு கொடுக்கும் கதையே இது. ஒரு காதல் கதையாக இருந்திருந்தால் இந்தளவிற்கு கொண்டாடப்பட்டிருக்குமா என்பது தெரியாது. அத்துடன் மனிதர்கள் , சமூக பழக்கங்கள் என்று பலவற்றையும் கதை தொட்டு செல்கிறது.
ஜேன் ஆஸ்டென் இந்தக் கதையை தன்னுடைய நகைச்சுவையாலும் , ஆங்கில சமூக வாழ்வின் மீதான விமர்சனத்தின் மூலமாகவும் வேறொரு தளத்திற்கு எடுத்து செல்கிறார்.
தமிழில் ஒரு சரியான , முழுமையான மொழிபெயர்ப்பு இதுவரை வந்ததாக தெரியவில்லை. இதுவே முதலாவதாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது போலவே இரண்டு பாகங்களாக வெளிவரப்போகும் இந்த நாவலின் முதலாம் பாகம் இது.

245 pages, Kindle Edition

Published September 5, 2020

Loading...
Loading...

About the author

வானதி

35 books62 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (55%)
4 stars
4 (44%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
Profile Image for Amudhu.
22 reviews
July 30, 2026
(சிறிய அதிருப்தியே பெரிய ஏமாற்றத்தைத் தவிர்க்க சரியான வழி)

புத்தகம்: பிரைட் அண்ட் பிரிஜூடிஸ் (Pride and Prejudice)
ஆசிரியர்: ஜேன் ஆஸ்டென்
(தமிழில் – வானதி)

இந்தப் புத்தகத்தை ஒரு காதல் நாவலை வாசிக்கப் போகிறேன் என்ற எண்ணத்தில்தான் கையில் எடுத்தேன். ஆனால்,நகைச்சுவையும் நையாண்டியும் கலந்த மென்மையான நடையின் மூலம், மனித இயல்பையும் சமூகத்தின் முரண்பாடுகளையும் ஜேன் ஆஸ்டென் மிக நுட்பமாக வெளிப்படுத்தி இருக்கிறார்...

இங்கிலாந்தில் வாழும் பென்னட் குடும்பத்தின் ஐந்து மகள்களை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அவர்களில் இரண்டாவது மகளான எலிசபெத் பென்னட்டும், புதிய அண்டை வீட்டாராக வரும் மிஸ்டர் பிங்லியும், அவருடைய நண்பரான மிஸ்டர் டார்சியும் கதையின் முக்கியக் கதாபாத்திரங்கள். அவர்களுக்கிடையே உருவாகும் சந்திப்புகள், தவறான அபிப்பிராயங்கள், பெருமிதம், முன்முடிவுகள், புரிதல், சுயமாற்றம் ஆகியவற்றின் வழியே கதை இயல்பாக விரிகிறது...

ஆரம்பத்தில் கர்வம் நிறைந்தவராகத் தோன்றிய மிஸ்டர் டார்சியை, கதையின் போக்கில் முற்றிலும் வேறொரு கோணத்தில் பார்க்கத் தொடங்கினேன். அதேபோல், எலிசபெத்தும் தன் முன்முடிவுகளை உணர்ந்து அவற்றைக் கடக்கிறாள். தவறான அபிப்பிராயங்களிலிருந்து உண்மையான புரிதலை நோக்கி அவர்கள் இருவரும் மேற்கொள்ளும் பயணம்தான் இந்த நாவலின் முக்கிய அம்சம்...

இந்த நாவலில் என்னை அதிகம் சிந்திக்க வைத்த மற்றொரு விஷயம், அக்காலத்தில் பெண்களின் சொத்துரிமை தொடர்பான சட்டம். பென்னட் குடும்பத்தில் ஐந்து மகள்கள் இருந்தும், ஆண் வாரிசு இல்லாததால் அவர்களது குடும்பச் சொத்து மகள்களுக்குக் கிடைக்காமல் ஆண் உறவினரான திரு. காலின்ஸுக்குச் செல்லும் entail முறை என்னை ஆச்சரியப்படுத்தியது. பெண்களின் எதிர்காலம் பெரும்பாலும் திருமணத்தைச் சார்ந்திருந்த காலகட்டத்தையும், பொருளாதாரப் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமானதாக இருந்ததையும் இந்த நாவலில் ஜேன் ஆஸ்டென் மிக இயல்பாகச் சித்தரிக்கிறார்.

ஜேன்–பிங்லியின் அமைதியான காதல், சார்லட் லூகாஸின் நடைமுறை முடிவு, லிடியாவின் அவசரமான தேர்வு என ஒவ்வொரு உறவும், திருமணம் என்பது பொருளாதாரம், சமூக அந்தஸ்து, பாதுகாப்பு, தனிப்பட்ட விருப்பம் போன்ற பல காரணிகளால் தீர்மானிக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது...
காதல் கதையைத் தாண்டி, மனிதர்களை இன்னும் கொஞ்சம் பொறுமையுடனும், பரந்த புரிதலுடனும் அணுக வேண்டும் என்பதை உணர்த்திய வாசிப்பு அனுபவமாகவே இந்த நாவல் எனக்கு அமைந்தது...
Displaying 1 - 1 of 1 review