உண்மையான காதல் எப்பொழுதும் வெற்றி பெறும் என்பதை விளக்கும் சிறிய சஸ்பென்ஸ் உடன் கூடிய ஒரு இனிமையான காதல் கதை இது. இந்த கதை ஒரு வித்தியாசமான தம்பதியினரைப் பற்றியது. அவர்கள் இருவரும் வெவ்வேறு திசையில் பயணித்தாலும் இறுதியில் எவ்வாறு தங்கள் காதலை உணர்ந்தனர் என்பதை உணர்த்த வருகிறது இந்த காதல் கதை. ஹீரோ அபிநந்தன். ஒரு சிறந்த தொழிலதிபன். தனது அத்தை மகள் மாயாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. இருப்பினும் அவன் அவள் மீது அக்கறை காட்டவில்லை. அவனது அத்தை அவனது திருமணத்தை விரைவில் நடத்தும் படி அவனை நெருக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அபிநந்தனுக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் போய்விட, திருமண நாளை தாமதப்படுத்தினான்.