The memoirs and lectures of a.N. Sattanathan, presented here in a fully annotated edition, with a critical Introduction, constitute a key literary-historical document of the caste struggle. Sattanathan’s autobiographical fragment is a unique record of non-brahmin low-caste life in rural South India, where the presence of poverty and caste prejudice is the more powerful for being understated. As the experience—sparsely and beautifully rendered the low-caste but not stereotypically ‘untouchable’ villager, it is, quite simply, revelatory, and will make an impact as such on the english-educated reader, to whom that experience has been so far unavailable. In a complementary narrative, sattanathan’s lectures ‘the rise and spread of the non-brahmin movement’ as ‘the most outstanding event in South Indian history in the twentieth century’—offer a lucid summary of the cultural and historical conditions that find more personal and immediate expression in the memoirs.
"சூத்திரன் என்று சொன்னால் ஆத்திரம் கொண்டு அடி" என்ற சொல்லாடல் பெரியார் சொன்னதாக என் தாத்தா என்னிடம் அடிக்கடி சொல்வார். சூத்திரன் என்றால் வேசி மகன்(son of a prostitute) என்று அர்த்தம். மனு சாஸ்திரம் கூறும் அர்த்தமும் அது தான். இன்றைக்கு பார்ப்பனர் அல்லாதாரும் அந்த சொல்லை வசை சொல்லாக பயன்படுத்தி வருகிறார்கள்.
சரி கதைக்கு வருவோம் "கட்சிக்கு ஏன் திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தீர்கள்?" என்ற கேள்வி பெரியாரிடம் கேட்கப்பட்டது. ஆரிய ஆதிக்கத்திற்கு எதிரானது திராவிடம் என்றார் அப்படி திராவிடர் கழகம் என்ற பெயர் வைக்காமல் பொய் இருப்பின் சூத்திரர் கழகம் என்று தான் வைத்திருப்பேன் என்றும் பதிவுசெய்துள்ளார். அப்படி பயன்படுத்தியிருப்பின் தலித் என்ற சொல் எப்படி ஆதிக்கத்திற்கு எதிரான சொல்லோ அதை போலவே சூத்திரன் என்ற சொல்லும் பயன்படுத்தபட்டிருக்கும். வரலாறு அந்த நிகழ்வை அனுமதிக்கவில்லை. ஆனால இந்த புத்தகத்தின் வெளியீட்டாளர் அதை ஒரு குறியீடாக வைத்துள்ளார். படிக்க கூடாது என்று முத்திரை குத்தப்பட்ட சூத்திரன், படித்து பதவிகள் பல பெற்று ஊர் போற்றும் வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் என்பதால் இந்நூலுக்கு பெயர் நன்றாகவே பொருந்துகிறது. kancha ilaiah போன்ற ஆய்வாளர்களும் சூத்திரன் என்ற சொல்லாடலை பரவலாக முற்போக்கு சிந்தனையுடன் பயன்படுத்துவதை பார்க்கமுடிகிறது. வரவேற்கத்தக்கது தான்
பிரிட்டிஷ் இந்தியாவில், தமிழகத்தின் தென் கோடியில் பிறந்த ஒருவர், இடைநிலை சாதியை சேர்ந்தவர் சாதியின் பிடி இறுக்கமாக இருந்த காலகட்டத்திலேயே கல்லூரி படிப்பை முடித்தவர். அன்றைக்கு ICS எனப்படும் அரசாங்க தேர்வில் தேர்ச்சிபெற்று பிரிட்டிஷ் இந்தியாவில் பதவி பெற்றவர். சுதந்திர இந்தியா மற்றும் பிரிட்டிஷ் இந்தியா, இரண்டிலும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். தேசிய இயக்கத்தின் இயங்கியலையும் திராவிட இயக்கத்தின் இயங்கியலையும் உற்று கவனித்தவர். சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள் காரணமாக அந்த புறக்கணப்பில் இருந்து விடுபட கல்வியை ஆயுதமாக பயன்படுத்திய வெகு சிலரில் இவரும் ஒருவர். பின்னாளில் தமிழகத்தில் கலைஞர் அமைத்த முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர். அவர் தான் AN Sattanathan. அவர் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள சூத்திரர்களாகிய நமக்கு பல அம்சங்கள் இருக்கிறது, 1967 இல் ஆட்சிக்கட்டிலில் திமுக அமர்ந்த போது “The rule of sudhra had begun” என்று பதிவுசெய்கிறார். தன்னுடைய நினைவு பதிவுகளை தாண்டி திராவிட இயக்கம் பற்றிய மூன்று முக்கிய கட்டுரைகளும் இவரது புத்தகமான “Plain speaking- A sudhra’s story”இல் இடம்பெற்றுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த புத்தகத்தை பற்றிய ஒரு உரையை வலையொளிக்கு அளித்திருந்தேன். என்னால் முடிந்த அளவிற்கு முக்க்கியமான இடங்களை தொட்டு சென்றேன். ஒரு மணி நேர உரை என்றாலும் 1.75Xஇல் வைத்து பார்த்தால் விரைவில் முடித்துவிடலாம். காணொளிக்கான இணைப்புhttps://www.youtube.com/watch?v=vVPRU...