“Go Lightly” – ஆசிரியர் Nina Karnikowski (இவர் ஒரு Travel Writer). இந்த நூலின் “Blurb: How to travel without hurting the planet” என்னைக் கவர்ந்ததால் வாசித்தேன். இப்புத்தகம் 143 பக்கங்களில் ஒரு “reference book” போல வடிவமைக்கப் பட்டுள்ளது. நூலில் அதிகமாகக் காணப்படும் சொல் “sustainability”. தமிழில் “நிலைத்தன்மை”.
நூலில் “Dream Lightly”, “Pack Lightly”, “Move Lightly”, “Travel Lightly”என்று ஆரம்பித்து “Return Lightly” வரை 10 தலைப்புகளில் அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்திலும், தலைப்பு பற்றிய ஒரு பத்தி, பல உப தலைப்புகளில் யோசனைகள், Conscious Travel Hero ஒருவரின் நேர்காணல் மற்றும் “ONE SMALL THING” போன்ற சிறுகுறிப்புகள் படிப்பதற்கு எளிமையாகவும், மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளன. இப்புத்தகம் ‘Covi19” க்கு பிறகு எழுதப்பட்டுள்ளது. கோவிட் 19 காலக்கட்டத்தில் உலகளாவிய கார்பன் வெளியேற்றம் 17 விழுக்காடு குறைந்ததாக முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு பானை சோற்றுக்குச் சில பருக்கைகள் பதம்:
Connect Lightly: (தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்)
நம்மில் பெரும்பாலோருக்கு, பயணநோக்கம் என்பது பல மனிதர்களோடும் தொடர்பு படுத்திக்கொள்வதற்குத்தான். நாம் மற்றவர்களின் கலாச்சாரம், வாழும் முறை பற்றி அறிந்து கொள்ளவும், நம்மிலிருந்து அவர்கள் எப்படி வேறுபடுகிறார்கள் என்று கண்டு, வீடு திரும்பியபின் நம் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளவும் விரும்புகிறோம். மற்ற கலாச்சாரங்களோடு தொடர்பு படுத்திப்பார்ப்பது என்பது நாம் எல்லோருமே பழமையான மனித இனத்தின் ஒரு கூறு என்பதை நினைவுபடுத்துகிறது – அது தற்காலத்திற்கு மிகவும் தேவையானதும் கூட. இங்கே நாம் மற்ற எல்லா உயிர்களையும் எப்படி மதிக்கவேண்டும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அதேபோல நாம் வீட்டிற்குத் திரும்பியபின் இந்தச்சமூகத்திற்கு, தேவையுள்ளோருக்கு சிறந்த முறையில் எப்படித் திருப்பிச் செய்யப்போகிறோம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். அதனால்தான் உள்ளூர் வழிகாட்டிகளையும், இன்னும் பல யோசனைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
Tanya’s tips to Go Lightly:
• Do little things and urge others to do so. Think of the meme: ‘it’s just one plastic straw…said 8 billion people.’
• Wash your own clothes. Hotel laundries equate to water and energy waste, so I wash mine with me in the shower.
• Walk everywhere. It’s healthy for you and the planet, and you see, feel and experience more.
Jimmy Nelson (Conscious Travel Hero): ‘The real essence of wealth is giving more than you take’