திரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட "The Mahabharata" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதம்...
This is a Tamil translation of Mr.Kisari Mohan Ganguly's "The Mahabharata", which was translated to english from sanskrit between 1883 and 1896.
3-ம் புத்தகம் - வன பர்வம் | 3rd Book - Vana Parva
மொழிபெயர்ப்பு: செ.அருட்செல்வப்பேரரசன் | Translated S. Arul Selva Perarasan
மூன்றாவதாக வருவது (காடு தொடர்பான) ஆரண்யகம் என்றழைக்கப்படும் பர்வம் ஆகும்.(142,143) இருநூற்று அறுபத்து ஒன்பது பகுதிகளுக்குள்[5] பதினோராயிரத்து அறுநூற்று அறுபத்து நாலு பாடல்களைக் கொண்டது இந்தப் பர்வம் என சூதரான சௌதி சொல்கிறார்.
[5] கங்குலியில் வனபர்வத்தில் 313 பகுதிகள் இருக்கின்றன. 11770 ஸ்லோகங்களும் இருக்கின்றன.