நாயகன் டாக்டர். தேவிரதன். நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவன். மருத்துவம் அவன் தொழில், கடமை மட்டும் அல்ல, அவன் காதலும். அவனுக்கு கோபமும் சற்று அதிகம் உண்டு, அதற்கு அவன் நாயகி சூட்டிய பெயர் துர்வாசர். மாற்றாந்தாய் சத்யா மீது அவன் கொண்ட உணர்வுகள் எப்போது, எப்படி வெளியே வரும் என்று ஊகிக்க முடியாது, ஆனால் உடன் பிறக்கவில்லை என்றாலும் தம்பி விசித்ரன் என்ற வி சி யின் மீது அளவுக்கு அதிகமான பாசம், அது அவனது ஒவ்வொரு செய்கைகளிலும் தெரியும். நாயகி அம்புஜாக்ஷி, அவன் உயிர், அவனுக்கு அம்பு டார்லிங், அவள் மீதான அவனது அன்பு, வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எதிர்பாராத சூழ்நிலையில் இருவரும் சதி-பதி ஆகிறர். அவள் அப்போது கர்ப்பவதி, அதனை அறிந்து தான் அவன் அவளை ம&