வாத்தியார் பத்தி சொல்லித்தான் தெரியனுமா. சிறுகதையோ,கட்டுரையோ அல்லது நாவலோ எல்லாருக்கும் புரியுறமாதிரி பரிமாறுவதில் வல்லவர்.
நேத்து ரொம்பநேரம் தூக்கம் வரல, ரைட் சிவராத்திரி தெரிஞ்சுபோச்சு என்ன பண்ணலாம்னு யோசிச்ச அப்போ கிண்டல் கொஞ்சம் பிரௌஸ் பண்ணலாம் உள்ளபோனேன், புத்தியும் கையும் சும்மா இருக்காமல், முன்னாடி நோண்டி வச்ச அஜால் குஜால் கதைகள்,அதனால வந்த வினைனு கொஞ்ச நேரம் அதெயெல்லாம் கடந்து போய்ட்டு(நிஜமா), கிண்டல் அன்லிமிடெட் என்னலாம் இருக்குனு பாக்கும் பொது விரும்பி சொன்ன பொய்கள் ஒரு புத்தகம் 80 பக்கம் வேற சரி படிக்கலாம் முடிஞ்சா வரைக்கும்னு தான் எடுத்தேன், முடிச்சுட்டு தான் வச்சேன்.
80 பக்கம்ல ஒரு 1.30 மணிநேரம் ஸ்கிரிப்ட் ரெடி பண்ண முடியும்ங்குற அளவுக்கு ஒரு அருமையான திரில்லர் ஸ்டோரி.
ராதாகிருஷ்ணன் அல்லது ராதா சர்க்கஸ்ல பணிபுரியும் வில்லாளன், அங்க நடக்குற காதல் (காஜி) பிரச்சனனைல அவன் காதலி மார்புல அம்பை எறிஞ்சுட்டு சிறை செஞ்சுட்டு திரும்பின ஆளு, அதுக்கப்பறம் கிடைக்குற வேலைய பாத்துட்டு கஷ்ட படும் ஆளு, அசிஸ்டன்ட் மேனேஜர் போஸ்ட் கிடைக்குது அங்க இருக்குற முதலாளி பொண்டாட்டியோட ஏற்படும் அனுபவம், இதுக்கு மேல நான் சொல்லல படிச்சு தெரிஞ்சுக்குங்க.
ராதா கேரக்டர் எப்படின்னு புக் முழுக்க காஜியா சுத்துற ஒரு ஆளு. அதனால ஏற்படும் வினைனு சூப்பரா கதை போகுது. 1987ல வாத்தி one night stand பத்தி எல்லாம் விவரமா எழுதி இருக்காரு. ராதாக்கு அட்வைஸ் பண்ற பொண்ணு சொல்றது வேற லெவல், உனக்கு இந்த one night stand எல்லாம் தெரியாதா நேத்திக்கு சந்தர்ப்பத்தால் ஒண்ணா இருந்தோம் அவ்ளோதான் முடிஞ்சு போச்சு இன்னிக்கு நீ உன் வாழ்க்கைக்கு உன்னோட வேசத்தோட போ நான் என்னோட வேஷத்தோட போறேன்.
ஒரு கதை படிக்கும் பொழுது ஒரு வாசகனை நம்பி முடிவை கொடுக்கும் பழக்கம் எனக்கு எப்போவுமே புடிக்கும், அந்த வழக்கம் பொதுவாக பலரிடம் இல்லை இது என் கதை நான் சொல்றது தான் முடிவுன்னு தான் இருக்கும், ஆனா நம்ம சுஜாதா சில பல கதைகளில் முடிவை நம்மிடம் எடுத்துக்கோ தம்பி என்னவேனா முடிவெடுத்து சந்தோசமா இருன்னு கொடுப்பார், அதே தான் இதுலயும்.
நிஜமாக நல்ல ஒரு திரில்லர், தெய்வம் எனக்கு ஒரு வரம் கொடுத்தால் வாத்தியாரை மீண்டும் உயிரெழுப்ப கேட்பேன், எனக்கு விவரம் தெரியரத்துக்கு முன்னாடியே போய்ட்டியே வாத்தியாரே, உன்னை அந்த காலத்தில் வாராவாரம் படிச்சவங்கள நெனச்சா பொறாமையா இருக்கு தலைவரே.