வாலிப வார்த்தைகள்: வாலி, காவியக்கவிஞரென்றும் வாலிபக்கவிஞரென்றும் போற்றப்படுபவர். தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களில் அதிகப் பாடல்கள் எழுதியவராகவும் அவரைச் சொல்லலாம். காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டதிலும் களத்திற்கேற்பத் தன்னைத் தயாரித்துக்கொண்டதிலும் சூழலுக்கேற்ப நடந்துகொண்டதிலும் அவருக்கு நிகர் அவர்தான். அவர் யாரைப் பின்பற்றி எழுதவந்தார் என்பது தவிர்க்கப்படவேண்டிய கேள்வி. தனக்கு முன்னால் இருந்த அத்தனைப் படைப்பாளிகளையும் அவர் அறிந்து வைத்திருந்தார். புதுக்கவிதையின் பிதாமகன் என்று சொல்லப்படும் ந.பிச்சமூர்த்தியிடமே அவர் தன் முதல் கவிதையைக் காண்பித்திருக்கிறார். வாலி பாடல் எழுதிவந்த சமயத்தில், அரச கட்டளை என்னும
கவிஞர் வாலியுடனான முதல் சந்திப்பில் துவங்கி, அவருடன் பயணித்த அனுபவங்களையும், அவருடனான உரையாடல்களையும் இந்நூலில் பதிவிடுகிறார் யுகபாரதி. கவிஞர் வாலியின் நம்பிக்கை, இயல்பு, சுயமரியாதை என பலவற்றையும் இந்நூல் பேசுகிறது. வாலி அவர்கள் பாடல் வரிகள் எழுதும் வேகத்தையும், எப்பொழுதும் trend-ல் இருக்கும் அவரது அசாத்திய கற்பனைகளையும் பல இடங்களில் விவரிக்கிறார் யுகபாரதி.
சமரசமில்லாமல் சினிமா உலகம் இயங்காது என்பதை புரிந்துகொண்ட கவிஞர் வாலி அதை செய்ய தயங்கியதில்லை, ஆனால் அதே சமயம் சுயமரியாதையை என்றும் விட்டுக்கொடுத்ததில்லை என்று பல தருணங்களை சுட்டிக்காட்டி பேசுகிறது இந்நூல். அரசியல் தலைவர்களிடம் கவிஞருக்கு இருந்த தோழமை, மாற்றுக் கருத்துக்கும் மாற்றுச் சிந்தனைக்கும் அவர் கொடுத்த மதிப்பு, சினிமா துறையில் இருக்கும் sentiment மற்றும் மூடநம்பிக்கைகளில் ஈடுபாடு இல்லாமல் இருந்தும் அவர் அவற்றை மற்றவர்களுக்காக சகித்து கொண்டது போன்றவற்றை வாசிக்கும் போது அவரது democratic approach புரிகிறது.
கவிஞரின் பாடல் வரிகளை பற்றிய வர்ணணை இந்த நூலில் குறைவாக இருப்பது ஏமாற்றமே. யுகபாரதியின் "இசை அல்லது இளையராஜா" நூலில் இருந்த இளையராஜாவின் இசையை பற்றிய வர்ணணை போல இங்கு இடம்பெறவில்லை. அது இந்நூலின் நோக்கமாக இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அந்த எதிர்பார்ப்பினால் தானோ இந்நூல் நிறைவான வாசிப்பாக இல்லை.
வாலியை பற்றியே மிக முக்கியமான விஷயங்களை எடுத்து கூறியுள்ளார் ஆசிரியர் யுகபாரதி. சிறிய நூலக இருந்தாலும் நிறைவாக இருந்தது. வாலியே பற்றி தெரிந்து கொள்ள உதவும் இப்புத்தகம். அதில் ஒன்றே மட்டும் கீழே கொடுக்கிறேன்... சமரசமில்லாமல் வாழ்வில்லை என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டிருந்த வாலி, தன்னுடைய சுயமரியாதையை யாராவது சமரசம் செய்துகொள்ளச் சொன்னால் முகத்தில் அடித்தாற்போல் பேசியிருக்கிறார். ஒருமுறை இயக்குநர் பாலச்சந்தர் வாலியின் பாடலைக் கேட்டுவிட்டு, “இவ்வளவு சிறப்பாகப் பாடல் இருப்பதால் அது கண்ணதாசன் எழுதியதாக நினைத்தேன்” என்றிருக்கிறார். உடனே வாலியும், “இவ்வளவு சிறப்பாக குடும்பக்கதை வந்திருப்பதால் நானும் இப்படத்தை இயக்கியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனாக இருக்கும் என்றுதான் நினைத்தேன்” என்றிருக்கிறார்.
வாலிபக் கவிஞர் வாலி உடனான சந்திப்புகள், உரையாடல்கள், நேர்காணல் செய்திகள், வாழ்க்கைச் சம்பவங்கள்னு பல சுவாரஸ்யமான விவரங்களை ஆசிரியர் பகிர்ந்து இருக்காரு.
4 தலைமுறைகள் தொடர்ந்து திரைப்படப்பாடல்கள் எழுதியவர் வாலி. பாடல்கள் எழுதுவது மட்டும் இல்லாம ஓவியம் வரையுறது, நாடகம் எழுதுறது, பத்திரிகை ஆசிரியரா இருந்ததுன்னு பல திறமைகள் அவருக்கு. கவிதை வடிவிலேயே நெறைய புத்தகங்களும் எழுதி இருக்காரு. முன்பே வா பாடல் அவர் எழுதியதுனு இதுநாள் வரைக்கும் எனக்கு தெரியாது. கடைசியா அவர் பாடல் எழுதிய படம் காவியத்தலைவன்.
திறமையுள்ள பாடலாசிரியர், கூட ஒரு பண்பட்ட மனிதராகவும் வாலி அவர்கள்.
இந்த புத்தகத்தை படிச்சதுக்கு அப்புறம் அவரோட பாடல்கள் search பண்ணிப்பாத்தேன். அப்போ தான் தெரிஞ்சுது அவரோட பாடல்கள்னு தெரியாமலே நெறைய பாடல்கள் என்னோட favourite listல already இருக்குனு. He is a legend.
This entire review has been hidden because of spoilers.