வணக்கம், நான் ரியா மூர்த்தி, மரகதவீணை எனும் இக்கதைக்களம் மரகதம் பாட்டிக்கும், வீணா எனும் பேத்திக்கும் இடையேயான பாசத்தினை மையமாகக் கொண்டது. சிறுவயதில் கோபத்தினையே தன் முதன்மை குணமாக கொண்டு வளரும் நாயகன் வளர்ந்த பிறகு முற்றிலும் மாறுபட்டவனாய் பாட்டியின் வீட்டிற்குள் நுழைகிறான். அவனுக்கும் வீணாவுக்கும் காதல் மலரும் முன்பே அவனின் கோப குணம் மீண்டும் சுடர்விட்டெறிய நாயகியே காரணமாகிறாள். கோபமென்னும் அக்கினியில் அவர்கள் காதல் மலர் பொசுங்கினால், நாயகன் நாயகியின் நிலையென்ன? இருவரையும் இணைத்துப் பிடித்த பாட்டி என்னவானார்? என்று காதல் ததும்பும் பின்னணியில் புனையப்பட்டிருக்கிறது மரகதவீணை. நன்றி, ரியா மூர்த்தி