Balakumaran was born in Pazhamarneri village near Thirukattupalli in Thanjavur district in 1946. As a child, he was highly inspired by his mother, who was a Tamil scholar and a Siromani in Sanskrit, used verses of Sangam and other ancient literature to motivate him when ever he was emotionally down. This created a deep interest in Tamil literature which made literature his passion. His first stories were published in a literary magazine called ‘Ka-Sa-Da-Tha-Pa-Ra’ and for which he was also a founding member, a self-anointed militant literary journal that had been launched with a mission to blaze new trails in modernist literature.
He has also contributed to Tamil periodicals such as Kalki, Ananda Vikatan, Saavi and Kumudam. Later he became a famous Tamil writer, author of over 200 novels, 100 short stories, and dialogue/screenplay writer for over 14 films. His writings are noted for a distinct philosophical and religious tone. He is fondly called 'Ezhuthu Sithar' by his fans. He is a disciple of "Sri Yogi Ram Surath Kumar".
In his many novels he shows immense interest in enlightenment. He is considered as "Maanasiga Guru" for many individuals, who are in search of the formless almighty. His lucid but powerful expressions of man-woman relationship and human-God union is a tribute to mankind.
‘தங்கக்கை’ மற்றும் ‘ராஜகோபுரம்’ எனும் இரு நாவல்களை கொண்டது இப்புத்தகம். 1999இல் முதற்பதிப்பு கண்டது.
"தங்கக்கை ": சேஷாத்திரி சுவாமிகளின் சரிதையை நயத்தகு நாவல் வடிவில், அவரது திருஅவதாரம் முதல் அவர் புரிந்த ஆன்மீக திருச்செயல்கள், அரும்பணிகள், முக்தி பெற்றது வரை எழுதியுள்ளார், எழுத்துச் சித்தர் திரு பாலகுமாரன்.
சைவம், வைணவம் என இருபெரும் தத்துவங்களோடு 'சாக்தம்' முறையும் தமிழகத்திற்கு தேவைப்படும் என்பதை உணர்ந்த ஆதிசங்கரர், நர்மதை ஆற்றங்கரையிலிருந்து சில குடும்பங்களை காஞ்சிக்கு தருவிக்கிறார். அந்த குடும்பங்களின் வழிவந்தவர்தாம், சேஷாத்திரி ஸ்வாமிகள்.
சேஷாத்திரி ஸ்வாமிகளின் சரிதையின் ஊடாக திராவிட தேசத்தில் சனாதன தர்மம் வேரூன்றுவது பற்றி, வட ஆற்காடு மற்றும் தஞ்சை பிராமணர்களுக்கு இடையே உண்டான பிணக்கு, மொகலாயர்களை விட ஆங்கிலேயர்கள் இந்து தர்மத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதை பிராமணர்கள் கண்டுணர்ந்தது பற்றி, ஆங்கிலேயர்கள் காலத்தில் பிராமணர்கள் அவர்களுக்கு அணுக்கமாக இருக்க ஆங்கிலம் கற்றது, பிராமண பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டது பற்றி, நால்வித வருணங்களும் எவ்வாறு அக்காலத்தில் பிழைத்தனர் என்பது பற்றி, ஆங்கிலேயனின் கண்டிப்பால் வேலை செய்யும் இடத்தில் பிராமணர்கள் சாதி பாகுபாடு பார்ப்பதை விட்டொழித்தது, கோவில் தாசிமார்கள் நிலை என அக்கால அரசியல், சமூக மாற்றங்களை சொல்லி செல்கிறது இந்நாவல்.
அதேபோல் பல்வேறு தத்துவங்களையும் அதன் விளக்கங்களையும் சொல்கிறது இப்புத்தகம். உதாரணமாக, இறை நம்பிக்கை, சந்தியாவந்தனம் செய்வதின் பயன், தியானம் போன்றவைகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளன.
ராஜகோபுரம்: இக்கதை, திருவரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை மற்றும் சமயபுரம் பகுதிகளில் நடைபெறுவதாக அமைக்கப்பட்டுள்ளது. வரதன் என்னும் திருவரங்கத்து மடப்பள்ளி வைணவன், பெரு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பசியாற்றும் பொருட்டு சைவனாக மாறி, திருவானைக்காவல் கோவிலில் உணவு சமைக்கிறான். பின்பு காளமேக புலவராக மாறுகிறான். சித்ராங்கி எனும் தேவரடியார் பெண் அவனுக்கு துணை நிற்கிறாள்., திருமணம் எனும் பந்தத்துக்குள் சிக்காமல் அவனுக்கு சிஷ்யை ஆகிறாள். சைவ, வைணவர்களுக்குள் ஏற்படும் பேதங்களை களையும் விதமாக, தேவரடியார் பெண்கள் மற்ற பெண்களை போல கதையில் வளம் வருவதாக அமைக்கப்பட்டுள்ளது. திரிசீரபுரம் என்னும் திருச்சிராப்பள்ளியை மற்றும் அதன் தெற்கே உள்ள பகுதிகளை கண்காணிக்க கிருஷ்ணதேவராயரால் நியமிக்கப்பட்டவன் திருமலைராயன்., அவனின் நம்பிக்கைகுறிய படைத்தளபதி கன்னடத்து கோனேரிராயன் என்பவனை திரிசீரபுரத்தையும், அதன் சுற்றுவட்டார பகுதிகளான திருவரங்கம், சமயபுரம், கண்ணனுர் போன்ற தளங்களை சிற்றரசனாக ஆளும்படி பணித்தான். தமிழில் ஆர்வம்கொண்டு, காளமேகப் புலவருடன் நட்பு கொள்கிறான். சோழ சாம்ராஜ்யத்தின் கடைசி வாரிசுகளான வீரநாச்சி, பெருமாள்நாச்சியை திருமணம் செய்து தமிழ் வளர்க்கிறான். கந்தாடை ராமானுஜன் எனும் ஒற்றன் துறவு வேடத்தில் இவ்விருவருக்கும் தொல்லை தருகிறான். கடைசியில் இவர்கள் அவனை வென்றனரா? என்பதாக கதை சென்று முடிகிறது.. கதையின் கடைசியில் கந்தாடை ராமானுஜனின் வாரிசுகளை ஸ்ரீரங்கத்தில் சந்தித்தாக பாலகுமாரன் அவர்கள் குறிப்பிடுகிறார். மேலும் அங்கே வாழ்ந்த காளமேகப்புலவர் கோனேரிராயர் புகழ் அஞ்சலி செலுத்துவதாக முடிக்கிறார்.
இரண்டு நாவலிலும் ஆன்மிகம், தமிழ் மொழிபற்று, சமூக கருத்துக்கள் நிரம்பியதாக வடிக்கப்பட்டள்ளது. தொய்வில்லாமல் வாசிக்க ஏதுவானதாக உள்ளது.
புத்தகத்திலிருந்து...
\ மது இல்லாத, மாது இல்லாத, மாமிசம் படைக்காத சக்தி உபவாசத்தை திராவிட தேசம் முழுதும் பரப்ப வேண்டும் என்று அவர்களுக்கு (ஆதிசங்கரர்) உத்தரவு கொடுத்தார். அதற்குண்டான அதிகாரம் வழங்கினார்.
அந்த குடும்பங்கள் மிகுந்த மனுசந்துஷ்டியோடு , நிறைவோடு காஞ்சி மாநகரில் குடியேறின. நல்ல குருவோடு மட்டுமல்லாமல் , குருவால் அமைதியாக்கப்பட்ட ஆற்றல் ஊட்டப்பட்ட காமாக்ஷியம்மனின் உருவமும் அந்த குடும்பங்களை மிகவும் கவர்ந்தது.
அந்த அம்மனுக்காக தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவு செய்வதை அவர்கள் பெரும்பேறாகக் கருதினார்கள். தலைமுறை தலைமுறையாக காஞ்சி மாநகரில் இருந்து, சக்தி வழிபாட்டை அவர்கள் செய்யத் துவங்கினார்கள். அந்த குடும்பங்களுக்கு காமகோடி குடும்பம் என்று பெயர். /
\ "இன்னும் சொல்றேன் கேளும். இந்த பாலக்காட்டுக்காரர் பிராமணனோடு சேர்த்து, தஞ்சாவூர்காரனும் இங்கிலீஸ்காரனுக்கு வால்புடிச்சு தலைகால் தெரியாத ஆடப்போறான். முதலியார்களையும், தேவமார்களையும் எதிர்த்துக்கப் போறான். துரை சொன்னான். துரை சொன்னான்னு சொல்லி, ஏமாத்தப்போறான். ஒரு நாள் இல்ல ஒரு நாள், மத்த ஜாதிக்காரா முழிச்சுக்க போறா. அப்போ பிராமணனுடைய இடம் ரொம்ப மோசமா போகும். வேத அத்தியயனமும் போயி, வெள்ளைக்காரன்கிட்ட மரியாதையும் போய் , ஒரு ஓரமா தூக்கி அடிக்கப் போறா." /
\ தன்னுள் நம்பிக்கை உள்ளவன்தான் மற்றவருக்கு நம்பிக்கை தர முடியும். தன்னையே நம்பாதவன் மற்றவருக்கு என்ன விதத்தில் லாபம். /
\ "முத முத உங்க குழந்தை என் கூடையே தொட்டு, என் பொம்மையைத் தொட்டு, ரொம்ப அழகா இருக்குன்னு சொல்லுச்சு. அந்த தொடல், அந்த வாக்கு பலிதாமாகி எல்லா பொம்மையும் வித்துப் போச்சும்மா . இது சாதாரணக் குழந்தை இல்லை. இது தங்கக் கைக் குழந்தை." /
\ அந்தக் குழந்தைக்கு எந்நேரமும் காதில் வேத பாடங்களே ஒலித்துக் கொண்டிருந்தன. வீடு அமைதியாக இருந்ததால் கூர்ந்து கவனிக்கும் திறன் அதிகமாக இருந்தது. பெரியவர்கள் அந்த குழந்தை மீதும் பிரியமாக இருந்ததால் அதன் கவனம் சிதறாமல் இருந்தது. மனம் ஒருமுகப்படல் அந்த குழந்தைக்கு எளிதாகக் கை வந்தது. அவனுக்கும் அமைதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாய் இருந்தது.
ஆரவாரமான சூழ்நிலையில் வளர்ந்த குழந்தைகள்தான் ஆரவாரமாக அமையும். சேஷாத்ரியின் வீட்டுப் பெரியவர்கள் அமைதியாக இருந்தார்கள். குழந்தையும் பூவைப்போல வளர்ந்தான். மலர்ந்தான். /
\ சந்தியாவந்தனம் என்பது மூச்சை நெறிப்படுத்தி மனதை வசப்படுத்துகிற முயற்சி. மனம் அமைதியாகிற போது, உடம்பின் முக்கியமான பாகங்களை நம் விரல்களால் அழுந்தத் தொட்டு அங்கே துடிக்கும் நாடிகளை உற்சாகப்படுத்துகிறோம்.
ஒரு சிறிய ஓடையில் தண்ணீர் போகிறது. நடுவே ஒரு தடவை தண்ணீரை தேக்கி பிறகு விட்டால் குபுக்கென்று தண்ணீர் பாய்கிறது அல்லவா. வேகம் கூடுகிறது அல்லவா. அதுபோல நாடித்துடிப்பை அழுத்தி தொடுவதால் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. நாடிகளுக்கு உற்சாகம் அதிகரிக்கின்றன. /
\ உலக வாழ்க்கையில் திருப்தி இருக்கும் வரை ஞானம் வருவதில்லை. அதிருப்தி கொண்டவருக்கே தெளிவு வருகிறது. /
\ அட இதுதான்...ருத்ரபூமியா. இதுதான் மயானமா... இங்கு உட்கார்ந்து ஜபம் செய்தால் பல நூறு மடங்கு பயன் என்று சொல்கிறார்களே... எதனால் அப்படி.?
இங்கு அழகிய பெண்கள் இல்லை. ஆர்ப்பாட்டமான வாழ்க்கை இல்லை. செல்வச் செழிப்பு இல்லை. சிற்றின்ப சூழ்நிலை இல்லை, எல்லாம் அழித்த இடம். /
\ அந்த இரண்டு காவியங்களை(மகாபாரதம், இராமாயணம்) சொல்கிறபோது எத்தனை பெரிய வீரனாக இருந்தாலும் எவ்வளவு செல்வத்துக்கு அதிபதியாக இருந்தாலும் பிரச்சினைகள் வந்து கொண்டேயிருப்பதும் மனிதர்களுக்கு மரணம்தான் ஒரு படிப்பினை என்பதும் புரிந்தது. வாழ்வின் அநித்தியம் புரிந்தது. /
"நாலு வார்த்தையை திருப்பித் திருப்பி சொல்றதால எல்லா நன்மையும் கொண்டு வந்து தரும்"
"அது வெறும் வார்த்தையல்ல. கந்தகம்னு ஒரு வகை மண்ணு. அது வெடி மருந்தா மாறலையா. அந்த மாதிரி சில குறிப்பிட்ட வார்த்தைகள் உள்ளுக்குள்ள மாறுதல் நிகழ்த்தும். மந்திரம் சொல்ல சொல்ல மனசு ஒருமைப்படும். ஒருமைப்பட்ட மனசுக்கு நிறைய சக்தி உண்டு." /
\ பூஜை என்பது சொல்லித் தந்து செய்வது அல்ல. உள்ளிருந்து பீறிட வேண்டும். தன்முனைப்பாகக் கிளர்ந்து எழுந்து அதற்குள் தானே மயங்கி சரிய வேண்டும். /
\ உண்மையான அன்பு உரக்கப் பேசாது. நாடகமாடாது. யாரையும் கேவலப்படுத்தாது. /
\ தான் என்ற கர்வம் இல்லாதவன் தான், ஞானி. நான் செய்வேன், என்னால் முடியும். நானே சகலமும் என்று ஞானி சொல்வதில்லை. செய்கிறான். அவ்விதமே வாழ்கிறான். சொல்கிற அவனால் தானற்று வாழ முடிவதில்லை. /
\ " ராமாயணம் என்பது ஒரு புத்தகமா, அந்த புத்தகத்திலுள்ள கதையை வாசித்தால் ராமாயணம் வாசித்ததாய் ஆகிவிடுமா.
இல்லையெனில், அந்த ராமாயண படிப்பு போலியானது. வெறும் ஏமாற்று வேலையே.
அதே போல் ஞானியை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் ஞானியாக வாழ வேண்டும். எந்நேரமும் தர்மத்தின் பக்கம் நிற்பவன்தான் ஞானி. எது தர்மமென்று யாரையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. தன்னை உள்ளுக்குள் பார்த்துக்கொண்டால் போதும். மனதின் எண்ணங்களை இடைவிடாது கவனித்துக் கொண்டு வந்தால் போதும்."
ஆத்ம லிங்கத்திற்கு பூஜை செய். அதுதான் பெரிய பூஜை.
சேஷாத்ரி சுவாமிகள் அடிக்கடி சொல்வார்.
"பூஜை என்பது பூக்களாலும் வாசனை திரவியங்களாலும் நடப்பது அல்ல. எண்ணங்கள் தோன்றும்போதே அதை உற்றுப் பார்ப்பதுதான் உண்மையான பூஜை." /
\ ஒரு முப்பது வயது பெண்மணி பூக்களை அவர் பாதங்களில் சொரிந்து நமஸ்கரித்தார்.
"நான் இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவள். 13 வயதில் பொட்டுக்கட்டி தாசியானவள் பாடவும், ஆடவும் எனக்கு பயிற்சி அளித்தார்கள். கோவிலில் அதற்காக மானியம் கொடுத்தார்கள்.
இதுதவிர வீட்டு படியேறி வந்து பாடச் சொல்லியும் ஆடச் சொல்லியும் பிரபுக்கள் கேட்டார்கள்.
துரதிஷ்டவசமாய் எனக்கு குழந்தைகள் இல்லை. அதுவும் தவிர, காங்கிரஸ், சுதந்திரம் ஜஸ்டிஸ் பார்ட்டி, சமூக சீர்திருத்தம் என்று பலதும் ஜனங்கள் பேசுவதால் எங்களைப் போன்றவர்களை தேடி வருவது குறைந்துவிட்டது. ஜனங்கள் எங்களிடம் பேசுவதையே அவமானமாக நினைக்கிறார்கள்.
மங்கல சின்னமாகவும் மரியாதையாகவும் இருந்த வாழ்க்கை பட்டுப்போன மரம் போல நிற்கிறது. கள் விற்கும் கொட்டகையில் விபச்சாரம் செய்ய கூப்பிடுகிறார்கள். அவர்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. எனக்கு பாடுவதையும் ஆடுவதையும் தவிர வேறு தொழில் தெரியாது. நான் நாலு வீடு படியேறி நிற்கவும் முடியாது. என் வாழ்க்கையை உங்கள் கையில் கொடுத்துவிட்டேன்.
நீங்கள் என்ன முடிவு தந்தாலும் இயற்கை சித்தமாக இருக்கிறேன்" என்று விம்மி விம்மி அழுதாள். /
\ மகா பெரியவாள் என்றழைக்கப்பட்ட காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி, சேஷாத்ரி சுவாமி போல ஆவேனா என்று ஏக்கமாய் பேசுவாராம். /
\ இது நாவல் அல்ல. நாவல் வடிவத்தில் சொல்லப்பட்ட சேஷாத்திரி சுவாமிகள் என்கிற மகானின் மெல்லிய வரலாறு.
யாராலும் ஒரு மகானுக்கு வரலாறு எழுத முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் தெறித்த சில வெளிச்சங்களைத் தான் காட்ட முடியும்.
சேஷாத்திரி சுவாமிகளின் வரலாறு படித்துவிட்டு இந்த பாலகுமாரன் திருவண்ணாமலைக்கு ஓடினான்.
நீங்கள் இருந்தபோது நான் இல்லை நான் இருக்கும் போது நீங்கள் இல்லை உனக்கு. மந்த புத்தி கொண்ட எனக்கு ஒரு நல்ல குரு வேண்டும் என்று கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டான்.
ஒரு குருவைப் பார்த்து புரிந்து கொள்ளும் சக்தியையும் எனக்குக் கொடுங்கள் என்று மனம் கசிந்து யாசித்தான்.
சேஷாத்திரி சுவாமிகளின் தூண்டுதலால் ரமணாஸ்ரமம் போய் இதையே சொல்லி கெஞ்சினான்.
அடுத்த ஆறு மாதத்தில் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் அவனுக்கு குருவானவர். பாலகுமாரனை அள்ளி எடுத்துக் கொண்டார், அவன் மனநிலையை உயர்த்தினார்.
இந்த புத்தகத்தைப் படிக்கும் எல்லோருக்கும் இது போல் நடக்க வேண்டும் என்பது பாலகுமாரனின் பிரார்த்தனை. /
****************
\ "நீங்கள் சைவமா வைணவமா.?"
"இந்த கேள்விக்கு எனக்கு பதில் சொல்ல பிடிக்கவில்லை. இவை இரண்டுமே ஒன்று என்று எனக்குத் தெரியும். முழுவதுமாக தன்னை கொடுத்தல், சரணடைந்து விடுதல் என்பது ஒருவழி. சரணடைவதை விட கடவுளோடு கலத்தல், கடவுளாகவே மாறுதல் இன்னொரு வழி,. முன்னது வைணவம். பின்னது சைவம்.
இதில் எந்த வழியைப் பின்பற்றினாலும் நம்மை மீறி மிகப்பெரிய ஒரு இயற்கை சக்தி நம்மை சுற்றி பந்தாடி கொண்டிருக்கிறது என்பது புரிந்து கொள்ள வேண்டும். புரியாது வெற்றுவாதம் செய்கிற அயோக்கியர்களை கண்டால்தான் எனக்கு பிடிக்கவில்லை.
வைணவனாக இருந்தாலும் சைவனாக இருந்தாலும் பணிவாக இருப்பதுதான் சிறந்த விஷயம்., பணிவு, கடவுள் நம்பிக்கை இருப்போர்க்குதான் எளிதில் வரும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்க்கு பணிவு இருக்காது.
பணிவு இல்லாதவர்க்கு அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்காது. அறிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்கள் மற்றவர்களைப் புரிந்து கொள்வதில் தயக்கம் காட்டுவார்கள். மற்றவர்களைப் புரிந்து கொள்ள தயக்கம் காட்டுபவர்கள் வாழ லாயக்கு இல்லாதவர்கள்." /
\ "அந்த கம்பராமாயணம் அரங்கேறிய இடம் இந்த மண்டபம்.(ஸ்ரீரங்கம் தாயார் சந்நிதி எதிரில் உள்ள மண்டபம்). இங்கேதான் அந்தணர்களை கூட்டி, பெரிய சபையை அழைத்து தன்னுடைய காவியத்தைப் கம்பர் அரங்கேற்றியிருக்கிறார் இந்த மண்டபத்தில் மிக அழகான நரசிம்மம் ஒன்று இருக்கிறது. இங்கே வா, இந்தத் தூணை பார்த்தாயா? இந்த தூண் மேல் தலைக்குமேல் நிற்கின்ற நரசிம்மர் பார். அந்த நரசிம்மர் விரலைப் பிடித்துக் கொண்டிருப்பது பிரகலாதன். நரசிம்மர் எவ்வளவு உயரமாக இருக்கிறார் என்பதை பார். அவருடைய சாந்தம் உடம்பில் இருக்கிறது. முகம் மட்டும் சிங்கரூபமாக இருக்கிறது. இப்படி ஒரு சிங்கம் வேறு எங்கேனும் பார்த்திருக்கிறாயா, சித்ராங்கி.
ஸ்ரீரங்கம் ஒரு அற்புதமான இடம். இங்கே மூன்று முழ ஆழத்தில் நீர் கிடைக்கிறது. எந்த இடத்தில் தோண்டினாழும் ஊற்றாக நீர் பெருகுகிறது. பள்ளி கொண்ட பெருமான், மேடை மீதோ, மண் மீதோ இல்லை, நீர் மீது தான் இருக்கிறான் என்பதற்கு இந்த ஸ்ரீரங்கம் சாட்சி! ரோஹிணி! பரவாசு தேவரை தரிசித்து இருக்கிறாயா? பார்த்திருக்கிறாயா?அதாவது, விமான ரங்கந���தர். மிக அழகான சிலை சிற்பம் அது. முழுவதும் தங்க பூக்கள் அன்னம் யாளி கொடியென்று ஒரு சரியான வரிசை அவரைச் சுற்றியிருக்கும். நான்கு யுகங்களில் நான் அவதரித்து தலைமை தாங்குவேன் என்பது போல நான்கு கலசங்கள் இருக்கும். நூல் பிடித்தார் தெற்கேயிருந்து வடக்கே வரை கோபுரங்களின் அணிவகுப்பு பார்ப்பதற்கு பரவசமூட்டும்.
ஸ்ரீரங்கம் தமிழர் நாகரீகம். வாஸ்து சாஸ்திரப்படி ஸ்ரீரங்கம் சிறிதும் பிசிறில்லாத ஒரு கட்டிட அமைப்பு. இதில் ஒவ்வொரு செங்கல்லும் சாஸ்திரங்களுக்கு உள்ளடக்கியே செய்யப்பட்டது. அதனால்தான் ஸ்ரீரங்கம் எல்லா காலகட்டங்களிலும் சிறப்பாக இருக்கிறது.
வைஷ்ணவம், சைவம் என்று இந்துக்கள் பேதம் பார்க்கிறார்கள். உள் சுற்றில் விநாயகர் சிலை இருக்கிறது. வனதுர்க்கை சிலையும் இருக்கிறது. இந்த விநாயகர் சிலையும் வனதுர்க்கை சிலையும்தான் ரங்கநாதருடைய சந்நிதியை காவல் காக்கின்றனர். ஆனால் அங்கே போவதற்கு வைஷ்ணவர்கள் விடுவதில்லை. அதற்கு நித்தியப்படி பூஜைகள் எல்லாம் தவறாது செய்கிறார்கள். கோவில் ஈசானியத்தில் அதாவது வட கிழக்குப் பக்கத்தில் ஒரு ராமர் சன்னதி இருக்கிறது. மூலவர் சந்நிதி ஒரு பக்கமும், உற்சவர் சந்நிதி மேற்கு பார்த்தும் இருக்கின்றன. அந்த மேற்கு பார்த்து இருக்கிற உற்சவர் சந்நிதி நல்ல அதிர்வுகள் கொண்டது. அங்குள்ள மண்டபத்தில் சிறிது நேரம் உட்கார்ந்தாலும் மன அமைதி நிச்சயம் கிட்டும். அங்கே உட்கார்ந்து மந்திரம் சொன்னால் வெகு நிச்சயமாய் பலிதமாகும். பிரார்த்தனைக்கும் தியானத்திற்கும் மிக உன்னதமான இடம், அந்த ராமர் சன்னதி.
மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் தனித்தனியே ஆதிசேஷனுக்கு கீழே உட்கார வைத்து கல்லால் வடித்திருக்கிறார்கள். மிக நுணுக்கமான வேலைப்பாடு. அந்த இடத்தில் பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டு ஒரு இடையறாத உஷ்ணம் பரவியிருக்கிறது. ஸ்ரீரங்கம் எப்போது வந்தாலும் இந்த ராமர் சந்நிதியை பார்க்காமல் போக வேண்டாம். ஸ்ரீரங்கம் போன்ற கோவிலில் ஈசானிய மூலையில் இருக்கும் சந்நிதிகள் மிக விசேஷமானவை பவித்திரமான அவை அதிக சக்தி கொண்டவை தாயார் சன்னதியில் இறந்து போகும்போது ராமரையும் தரிசித்துக் கொண்டு போங்கள். "