‘காலச்சக்கரம், ரங்கராட்டினம், சங்கதாரா’ மூன்றுமே பெரும் தாக்கத்தை எங்களுள் ஏற்படுத்திவிட்டன! தயவுசெய்து, வருடத்திற்கு ஒரு நாவலை எழுதாமல், நிறைய எழுதுங்களேன்,’ என்று நாவல்களை படித்துவிட்டு, என் ரசிகர்கள் என்று கூறிக் கொள்ளும் பலரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களை என் ரசிகர்கள் என்று நான் கூறிக்கொள்ள விரும்பவில்லை. என் ரசிகர்கள் என்று கூறினால், நான் ஏதோ பெரிய சாதனையை செய்துவிட்டது போல ஆகிவிடும்.
“தமிழில் பேசுவதும், எழுதுவதுமே ஒரு பெரிய சாதனையாகிவிட்டது, இந்த காலத்தில்! ஆங்கில பத்திரிகையில் பணிபுரிந்துக் கொண்டு தமிழில் எப்படி எழுதுகிறீர்கள்?” என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
டி ஏ நரசிம்மன் என்கிற காலச்சக்கரம் நரசிம்மா கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தற்போது . தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார். சுமார் 15 நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல் நாவல் காலச்சக்கரம், வெளியிடப்பட்டு பரபரப்பாக விற்பனையாக, இவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்மாவாக மாறியது. இவரது ரங்கராட்டினம் நாவலை படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து பேசி பாராட்டி, திருவரங்கத்தில் போட்டியிட போவதாக அறிவித்தார். சங்கதாரா , பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா போன்ற இவரது நாவல்கள் இவருக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. தற்போது இவர் எழுதியுள்ள ஐந்து பாகங்களை கொண்ட அத்திமலைத்தேவன் பெரும் பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கிறது.
சின்ன திரைகளில் கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, அனிதா வனிதா, மாயா போன்ற தொடர்கள் உள்பட பல தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு சிறப்பு அரசியல் விமர்சகராகவும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு, மற்றும் எழுத்தாளர் கமலா சடகோபனின் மகன் ஆவார். இவரது மகன் ஷ்யாம் திருமலை என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராகவும், மகள் ஸ்ரீயந்தா இயக்குனர் ராதாமோகனின் காற்றின் மொழி மற்றும் பொம்மை படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர்.
குமுதத்தில் மூவிடத்து வானரதம் என்கிற சரித்திர தொடர்கதையை எழுதியிருக்கிறார்.
தற்போது கல்கியில் கூடலழகி என்கிற சரிந்திர தொடரை எழுதிவருகிறார்.
காதலில் அதீத விருப்பம் கொள்பவர்களின் மனது பிறர் சூழ்நிலையைக் கவனம் கொள்ளாது தன்னிலை முடிவுகளேயே மேற்கொள்ள வைக்கும்.
ஒவ்வொரு பிறவியுமே கர்மா பலனின் சங்கிலி தொடர்ச்சி.
நியமிக்கப்பட்ட வரைமுறைகளை மீறும் போது அதற்கான தண்டனைக்கு உட்பட்டே ஆகவேண்டும்.
குபேரவனத்தைக் காவல் காக்கும் யட்சிணியை மீறி அதன் உள்ளே சென்ற கந்தர்வனைக் கொல்ல பல ஜென்மங்களை எடுத்தும் அவனை வெற்றி பெற முடியாமல் போவதால் கடைசி ஜென்மமாக அழகிய பெண்ணுருவம் பெறுகிறாள் யட்சிணி மிருகா என்ற பெயருடன்.
கந்தர்வன் பிறக்கும் போது அவனுக்கு வரப் போகும் ஆபத்தைக் கணித்து விளக்கினாலும் பெரியவனான பின்பு மிருகாவின் கண்ணில் பட்டு புருஷோத்தமனின் வாழ்க்கை ஊஞ்சலாட தொடங்குகிறது. அவளைப் பற்றித் தெரிந்தவன் அவசர அவசரமாக மாமன் மகளைக் கல்யாணம் முடித்து ஆண்குழந்தை பெற்ற பிறகு மிருகாவின் வசியத்தால் அவளிடமே தங்சமடைகிறான். அவனின் மனைவி வெள்ளைக்காரனுக்கு வைத்தியம் பண்ண போய்த் தவறான பேருடன் ஊரில் மற்றவர்கள் பேச்சில் ஆளாகி எங்கோ சென்றுவிடுகிறாள்.
புருஷோத்தமனின் மகன் பெரியவனாகி தன் தாயை கண்டுபிடித்து, தந்தையைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கும் வசியத்தையும் முறியடித்து இந்த ஜென்மத்திலும் யட்சிணியின் பிடியில் இருந்து அவரை விடுவிக்கிறான்.
400 கும் மேற்பட்ட பக்கங்கள். ஒரு அசாத்தியமான திரில்லர். கதையை படித்து முடித்தவுடன் யோசித்து பார்த்தால் கதையின் லூப் ஹோல்ஸ் தெரிய வரலாம். ஆனால் புத்தகத்தை படிக்கும் பொழுது கண்டிப்பாக தெரியவராது. அடுத்து என்ன நடக்கும் என்ற ஒரு த்ரில் இருப்பதை மறுக்கமுடியவில்லை. இறுதியில் வரும் பக்கங்களை யூகிக்க முடிவது கொஞ்சம் மைனஸ். ஆனால் அதைத்தவிர்த்து பார்த்தால் இந்த புத்தகம் கண்டிப்பாக உங்களை engage செய்யும்.
புருஷாமிருகம் குபேர வானத்தை விட்டு பூவுலகிற்கு வந்த பின் , யட்சிணி ஒருவள் பாதுகாக்கிறாள் . அந்த யட்சிணியிடம் மாட்டும் ஒருவன் . அவர்களுக்குள் ஜென்ம ஜென்மாய் தொடரும் பகை . கடைசி ஜென்மத்தில் ம்ருகரஞ்சிகா வாகவும் புருஷோத்தமனாகவும் பிறக்கும் இவர்கள்களின் கதை. யட்சிணி உபவாசம் , சதி (உடன்கட்டை ஏறுதல் ) , சடவாக்கியம் என பல conceptஉடன் கதை நகர்வதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லை.