பின்நவீனத்துவம் என்பது இன்னொரு எழுத்து முறை அல்லது கலை வெளிப்பாட்டு முறை என்று மட்டுமே முன்வைக்கப்படும் புரிந்து கொண்டும் இருந்த ஒரு சூழலில், தத்துவ வரலாற்றின் ஊடாக அதன் இடத்தை சுட்டிக் காட்டும் எழுத்துக்களின் தொகுப்பு இது.
அ. மார்க்ஸ் தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும், இயற்பியல் பேராசிரியரும் ஆவார். மனித உரிமைப் பணிகளுக்காக களப்பணி ஆற்றி வருபவர். இலக்கியம், சமயம், அரச நிறுவனம், தேசியம் என ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் உள்ள அரசியலை தனது எழுத்துகளின் மூலம் தொடர்ந்து கவனப்படுத்தி வருபவர்.