சினிமா பார்க்கிற எல்லாருக்கும், குறிப்பாக ஹாலிவுட் பிரியர்களுக்கு CIA என்ற பெயர் நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் CIAவின் உண்மை வரலாறு அந்தச் சினிமாக் கதைகளையெல்லாம்விடச் சுவையானது, விறுவிறுப்பானது, பரபரப்பானது.
உண்மையில் சிஐஏ என்ற அமைப்பை யார், எதற்காகத் தொடங்கினார்கள்? அவர்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் உண்டு, என்னென்ன அதிகாரங்கள் இல்லை, அந்த அதிகாரங்களையெல்லாம் மீறி அவர்கள் செயல்படுவதாகச் சொல்கிறார்களே, அதெல்லாம் உண்மைதானா? ஆம் எனில், சிஐஏ-வைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் யாரிடம்தான் இருக்கிறது? எங்கெல்லாம் அவர்களுடைய கரங்கள் நீண்டிருக்கின்றன? அவர்களுடைய வெற்றி, தோல்விகள் என்னென்ன? அனைத்தையும் சான்றுகளுடனும் விறுவிறுப்பாகவும் பேசுகிறது இந்த நூல்.
மொசாட், CIA, FBI, KGB எனப் பல உலக உளவு அமைப்புகளுடைய கதைகளையைச் சுவையான நூல்களாக எழுதியிருக்கும் என். சொக்கனின் இந்தச் சூப்பர் ஹிட் புத்தகத்தை ஒரு நாவல்போலப் படிக்கலாம், திரைப்படத்தைப்போல் மனக்கண்ணில் காணலாம், ஆனால், இவை அனைத்தும் உண்மையில் நடந்தவை, நடந்துகொண்டிருக்கிறவை என்பதை உணரும்போதுதான் அதிர்ச்சியும் திகைப்பும் பலமடங்காகும்!
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் தெளிவான எழுத்தும் ஆழமான ஆய்வும் நிறைந்த தன்னுடைய நூல்களுக்காகத் தமிழகமெங்கும் நன்கு அறியப்பட்டுள்ளவர். புனைவு, வாழ்க்கை வரலாறு, நிறுவன வரலாறு, தன்னம்பிக்கை, சிறுவர் இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள், நூற்றுக்கணக்கான கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.
Felt like watching some made up documentary but still it was fun to read and moreover they're true (80% of the infos). Rajmohan report youtube channel script maari iruku🌚🌚🌚
2007ஆம் வருடம் நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது பார்த்த திரைப்படம் தசாவதாரம். அந்த திரைப்படத்தில் தான் CIA எனும் சொல்லை முதன் முதலில் கேட்டேன். வில்லன் கிறிஸ்டியன் ப்ளச்சர் ஒரு ex CIA. அது தான் CIAவுக்கு அறிமுகம் செய்தது. அதன் பிறகு சென்ற ஆண்டு வாசிப்பு பட்டியலில் இருந்த 3 புத்தகங்கள், தாலிபன் ஒரு அறிமுகம், அல்கைதா ஓர் அறிமுகம், 9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி. இவை மூன்றுமே பா. ராகவன் அவர்களின் தீவிரவாத தொடர் நூல்கள். இவை அனைத்திலும் CIA தொடர்பான பல விஷயங்கள் இருந்தது. அதை தொடர்ந்து இப்போது வாசித்த நூல், என். சொக்கன் அவர்களின் CIA அடாவடிக் கோட்டை. ஆசிரியரின் நூல்களில் நான் வாசித்த முதல் நூல் இது. Facebookகில் சொக்கன் அவர்களை பின் தொடரந்தாலும் இதுவரை அவர் நூல்களை வாசிக்கவில்லை. பா. ராவின் தீவிரவாத தொடர் நூல்கள் வாசித்த பிறகு உளவு, தீவிரவாதம், உலக அரசியல் குறித்து ஒரு நாட்டம் எழுந்ததால் இந்த நூலை வாசித்தேன். இந்த நூல் அமெரிக்காவின் உளவுத்துறையான CIA (Central Intelligence Agency) குறித்த ஒரு விரிவான அறிமுகத்தையும் அதன் செயல்பாடுகள் குறித்தும் பேசுகிறது. இரண்டாம் உலகபோரில் அமெரிக்காவின் பேர்ல ஹார்பர் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியத்தில் தொடங்கி, 2001 செப்டம்பரில் World Trade Center மீது அல்கைதா நடத்திய தாக்குதலில் முடிகிறது இந்த நூல். CIA உருவான காரணம், அதன் ஆரம்ப கால செய்யப்பாடுகள், அதன் உளவறியும் முறை, அதன் அத்து மீறல்கள், போன்ற பல பரிமாணங்களை சுவாரஸ்யமகா சொல்லுகிறது இந்த நூல்.
You can get the same information from Wikipedia or other websites. If you like to read Wikipedia in the author's language then this is the book. I guess this review applies to all his books. For me, a good book is something that has the author's content 40% + 60% content from online(not readily available content). In Chokkan's books, I see 90% of the content online. You don't even need to put in a lot of effort. It will readily be available on the first page of Google search. I love his writing style. I expect his future books to have his content of at least 40%.
CIA என்ற அமெரிக்கா உளவு அமைப்பை உருவாக்கினார்கள், எதற்கெல்லாம் மூக்கை நுழைத்தார்கள், என்னவெல்லாம் கோட்டை விட்டார்கள், எதில் வெற்றி கண்டார்கள் என்பதை ஓரளவிற்கு சுவாரசியமாக கூறியிருக்கின்றார்.
ஓவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் பார்த்துவிட்டு பிறகு வாங்கி கொள்ளலாம் என கடந்த புத்தகம். ஆனால் தவறவிடக்கூடாத புத்தகம் என நினைத்துக் கொண்டிருந்த ஒன்று.
இரண்டாம் உலகப்போரில் Pearl Harbourல் வாங்கிய அடிக்கு பின்னர், அமெரிக்கா விழித்துகொண்டு, ஒரு உளவு அமைப்பை உருவாக்க முற்படுகிறது. Donovan என்பவரால் தொடங்கப்படுகிறது சிஐஏ எனும் Central Intelligence Agency. அது பிறந்த விதம் முதல் அதன் ஏற்ற இறக்கம், உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை, கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு விண்ணகம் பாதாளம் என அனைத்திலும் அவர்களின் உளவுகள், தகவல் சேகரிப்புகள், அரசியல் தந்திர காய்நகர்த்தல்களில் பங்கு என அவர்களின் அனைத்து அராத்து வேலைகளையும் பட்டவர்த்தனமான தகவல்களாக விறுவிறுப்பான தோரணையில் காட்சிப்படுத்துகிறது இப்புத்தகம்.
அமெரிக்கர்கள் எந்த விஷயத்தையும் சர்வ ஜாக்கிரதையுடனேயே அணுகுவார்கள் என்பதனை அவர்களின் உளவு அமைப்பின் செயல்பாடுகளை காண்கையில் ஊகிக்கலாம். உதாரணமாக, ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பதனை அறிந்து கொள்வதில் எல்லா காலத்திலும், அவ்வளவு ஆர்வம் உள்ளவர்களாக சிஐஏ இருப்பதனை காணமுடிகின்றது.
தமது நட்டின் பாதுகாப்பு-பாதுகாப்பு-பாதுகாப்பு மட்டுமே பிரதானம் என்பதை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட அமைப்பு, அடுத்த நாடுகளை உளவு பார்த்து, அங்கு குழப்பம் விளைவித்து, அமெரிக்காவிற்கு தோதான அரசை அமைக்கிறது., அதாவது பலநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு, அந்நாடுகளை, அமெரிக்கா, தனக்கு வால் பிடிக்கும் நாடுகளாக்கி, உலகப் பெரியண்ணனாக வலம்வர சிஐஏ'வின் கரங்களை கண்டங்கள் கடந்து நீளச்செய்திருக்கிறது.
"ஆயிரம் சூரியப் பேரொளி" எனும் ஆப்கனிஸ்தானின் 1970-90 காலகட்ட பின்னனியில் எழுதப்பட்ட பெருநாவல் வாசிப்பிற்கு நடுவில், சிஐஏ பற்றி படித்தது, பல புள்ளிக் காரணிகளை தொடர்பு படுத்தி கொள்ள உதவியாக இருந்தது. உதாரணமாக, ஆப்கனில் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் முஜாஹுதின் மற்றும் இன்னபிற புரட்சிபடைகளுக்கு அமெரிக்கா உதவி புரிவதும், அதன்பின்பு அந்த புரட்சிபடையில் இருந்த ஒருவர் அமெரிக்காவையே பதம் பார்த்த கதையையும் தொடர்பு படுத்தி கொள்ள ஏதுவாக உள்ளது.
இவர்களது இந்த பெரும் அரசியல் ஆட்டத்தில், பெரும்பாலும் பாழும் மக்களே பலிவாங்கப்படுகின்றனர் என்பதுதான் சோகமே. ரஷ்ய KGB, இஸ்ரேலிய MOSSAD, இந்திய NIA போன்ற உளவு அமைப்புகள் தத்தம் தகவல்களை பிரிதொருவர் பாதுகாப்புக்கு பரிமாறி கொண்டாலும், உலகப் பெரியவன் என்பதை முன்னிறுத்த, அனைத்து நாடுகளின் மூலை-முடுக்குகள் வரை கண்காணிக்கும் CIA, அமெரிக்காவிற்கு இன்றிமையாததாகவே மாறிவிட்டது.
ஆங்காங்கே நையாண்டித்தனமான கேலிகளுடன் மிக சுவாரசியமான வகையில் எழுதப்பட்டருக்கிறது இப்புத்தகம். சிஐஏ பற்றி (தமிழில்) நன்கு அறிந்து கொள்ள ஏற்ற நூல்.
Excellent book. Everyone should know about the working of CIA. The author has explained the activities of CIA inside and outside of America in a elaborate manner. Good attempt by yhe author