"கண்ணி வைக்கும் மானே"இது என்னுடைய இரண்டாவது கதை.. ஆர்னி மற்றும் அமிர்தனின் அளவிலா காதலை சொல்லும் கதை.. பல வாசகர்களிடம் என்னுடைய அடையாளத்தை பதித்த கதை.. படித்து விட்டு உங்களுடைய விமர்சத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. நன்றியுடன் சிராஜூநிஸா
எங்கள் ஊர் - கத்தேரி நூலகத்தின் நூலகர் அக்கா எனக்கு பரிந்துரைத்த நாவல் தான் இந்த கண்ணி வைக்கும் மானே ! அவர்கள் கூறித்தான் இந்த புத்தகத்தை வாசிக்க எடுத்தேன் ✔️
640 பக்கம் கொண்ட சற்றே பெரும் கதை என்பதால், அதுவும் காதல் கதையாய் இருந்த காரணத்தால், 640 பக்கங்களையும் எந்த தொய்வும் இன்றி, நம்மை இந்த புத்தகம் அழைத்துச் செல்லுமா என்ற கேள்வி தொடக்கத்தில் எனக்கு இருந்தது !
ஆனால் நான் எண்ணியதற்கு நேர் மாறாக இருந்தது இந்தக் கதை. வழக்கமான காதல் கதைகளைப் போல் அல்லாமல், நல்ல ஆக்கப்பூர்வமான கதைக்களத்தையும் விறுவிறுப்பான கதையோட்டத்தையும் பல எதிர்பார திருப்பங்களையும் கொண்ட காதல் கதையாய் இருந்தது இது. ✔️
Nice story but too draggy...One can easily identify the real culprit is purushothaman and the reason behind his act at the early stage itself... There is no reason for the author to take the story this long...