'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி முடித்தார். வாழ்க்கையில் எதையுமே அதிதீவிரமாக எதிர்கொள்ளும் இளைஞன் ரகுபதி, அலட்சியமான நடத்தைகொண்ட அமெரிக்க இந்திய இளைஞன் ராதா கிஷன், மனத்தில் குழந்தைத்தனம் மாறாத தேவதைப் பெண் மதுமிதா, தீர்க்கமான அமெரிக்க தமிழ்பெண் ரத்னா என்கிற நான்கு கதாபாத்திரங்களுடன் இயங்கும் இந்தக் காதல் கதை திருநெல்வேலி பாபநாசத்தில் தொடங்கி அமெரிக்காவில் நிறைவடைகிறது. 'ஆனந்த தாண்டவம்' என்று சினிமாவாகவும் எடுக்கப்பட்ட கதை. இரு பாகங்களும் சேர்ந்து ஒரு புத்தகமாக முதல் முறையாக வெளியாகிறது.
Sujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.
As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.
"Love is nature's way of ensuring a pregnancy" என்ற ரகுபதியின் தந்தையின் காதலை பற்றிய sensible சிந்தனையில் துவங்குகிறது பிரிவோம் சந்திப்போம். கதாபாத்திரங்கள் யாவரும் இன்றைய சமுதாயத்தில், மாற்றங்களின் இடையே காதலை தேடி அலைகின்றனர். சுஜாதாவின் வாசகி ஒருவர் சுஜாதாவிற்கு எழுதிய கடிதத்தில் துவங்கியுள்ளது இக்கதைக்கான விதை. மதுமிதா கதாபாத்திரத்தை தனக்கு கடிதம் போட்ட வாசகியை மனதில் வைத்து சித்தரித்துள்ளார் சுஜாதா.
காதலுக்காக தற்கொலைக்கு முயன்று, மதுமிதா'விற்காகவே MBA படிப்பதை ஒரு சாக்காக கொண்டு அமெரிக்கா செல்கிறான் ரகுபதி.. முதல் பாதியில் மதுமிதா-ராதாகிஷன் திருமணத்திலும் ரகுவின் காதல் தோல்வியிலும் முடியும் கதை அமெரிக்கா'வில் தொடர்கிறது.. ரகுவிற்கு அமைந்த தந்தையை போல ஒவ்வொருவருக்கும் தந்தை அமைந்தால் காதல் தோல்வி எல்லாம் காமெடி தொடர்கதைகளாய் போகும். சிறந்த முற்போக்குவாதி ! \m/ :D
ராதாகிஷனின் தவறான குணங்கள் தெரியவந்து, மதுமிதாவிடம் உண்மைகளை ரகு கூறும்போது இடையில் வருகிறாள் ரத்னா. ரத்னாவா மதுவா என்று குழம்பும் ரகுவும், கடைசி நிமிஷத்திலும் திணறும் முடிவுகளையே எடுக்கும் மதுவும், தெளிவான ரத்னாவும், சுஜாதாவின் எழுத்துக்களில் உணர்ச்சிகளாக தெரிகின்றனர். பெண்ணை போக-பொருளாய் மட்டும் பார்க்கும் ராதாகிஷன் போன்ற ஆட்களை துப்பாகியால் சுடவேண்டும் என்ற ரகுபதியின் எண்ணம் நமக்கும் தோன்றுகிறது. -_- மாறி வரும் சுழலில் காதல் இப்படி தான் மாறிபோகும் என்று 10 ஆண்டுகள் முன்னரே கணித்த சுஜாதாவின் எழுத்துக்களை என்னவென்று மெச்சுவது ? அமெரிக்க கலாச்சாரத்தில் சீரழியும் எல்லா உறவுகளையும் திறம்பட கையாளுகிறது இந்த கதை. காதலில் விழுந்ததாகவும் - காதலில் இருப்பதாகவும் - காதல் பற்றிய தியரிகள் உள்ள அனைவர்க்கும் "பிரிவோம் சந்திப்போம்" ஒரு eye -opener.
24 வயதில் வரும் முதல் காதலை அதன் அப்பாவித்தனம் குறையாமல், பிரமிப்பு நீங்காமல், மிக அழகாக, தெளிந்த நீரோடையின் நடையை போல சொல்லிருக்கிறார் சுஜாதா .
கதை ரகுபதியின் பார்வையில் நகர்கிறது. எனவே ஒரு moon struck இளைஞனை இயல்பாக சித்தரித்திருக்கிறார். கதையில் மிகப்பெரும் திருப்பம் என dramatic-ஆக எதுவும் இல்லை. நாம் பிற்பகுதியில் ஏதேனும் துரதிர்ஷ்டம் நடக்கும் என தயாராகிவிடுகிறோம் ஆனால் அது என்னவாக இருக்கும் என்பது சஸ்பென்ஸ். அதுவரை முதல் முக்கால்வாசி நாவலுக்கு திகட்ட திகட்ட காதல். நடுவில் ஒரு வரி வருகிறது ‘என்ன இது.. வில்லனே இல்லாத காதல்’ என்று… Too good to be true. இது நம் மனதை மாட்டியிழுக்க சுண்டப்பட்ட தூண்டில் என்று அறியாமல் நாமும் அந்த காதல் நதியில் திளைக்கிறோம். காதலில் வேலை நிமித்தம் வரும் பிரிவை இன்ப வேதனைகளை சுவாரசியமாக எழுதியிருக்கிறார் சுஜாதா.
கதையின் highlight ரகுவின் அப்பா கோவிந்தராஜ். தோளுக்கு வளர்ந்த பிள்ளையை தோழனாக நடத்தி, இளமையின் சலனத்தை, சபலத்தை சக நண்பனோடு விவாதிப்பது போல தன் பிள்ளையிடம் பேசும் இந்த பாத்திரத்தை எனக்கு மிக பிடித்திருந்தது.
முதல் பாகத்தை மிக அழகாகவும், அர்த்தமாகவும் முடித்து இருக்கிறார். :)
சுஜாதாவின் இந்தப் புத்தகத்தை முதன்முறையாக 'ஆனந்த தாண்டவம்' எனும் திரைப்படமாக வெளிவந்தபோது வாசித்தேன். இது இரண்டாவது வாசிப்பு. சுஜாதாவை எத்தனை தடவையும் வாசிக்கலாம். ஸ்மார்டான பெண் கதாப்பாத்திரங்களை வடிப்பதில் சுஜாதாவுக்கு நிகர் சுஜாதா தான்.'ரத்னா 'என்கிற கதாப்பாத்திரத்தை அதிகம் பிடிக்கும். காதலையும் ,சமுதாயத்தின் எத்தனையோ முகங்களையும் அடையாளம் காட்டும் சுஜாதாவின் எழுத்து.உதாரணமாக, 'இங்கு எல்லாமே மிகைப்படுத்தல்கள்' என்று எழுதியிருப்பார்.
"I love you sometimes foolishly and at these moments I do not understand that I could not, would not, and should not be so absorbing a thought for you as you are for me" என்ற பிரான்ஸ் லிஸிஸ்ட் கவிதையில் ஆரம்பிக்கிறது இக்கதை. 1983இல் எழுத பட்ட காதல் கதை இன்றும் மாறாமல் சுவாரஸ்யம் புகுத்துவது சுஜாதாவின் மேஜிக் . ஒரு வெகுளியான பெண்ணின் ஆர்வங்களையும் வாழ்வில் ஏமாற்றங்களை மட்டுமே சந்தித்த ஆணின் முதல் காதலையும் அதன் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் பிரிவோம் சந்திப்போம்.
"உலகில் உள்ள அத்தனை கவிதைகளுக்கும் அவசியம் ஏற்பட்டது ,அருவிக்கு அறிமுகமாய் சிரித்தாள்" போன்ற வர்ணனைகளிலும்
"காதல்ங்கறது nature's way of ensuring a pregnancy,லைப்ல கல்யாணம்ங்கிறது பெரிய gamble , ஆனா ராமுவுக்கு எனக்கும் வித்தியாசம் இருக்கு, நா விடோவ்ர் " போன்ற எதார்த்தத்தில் சுஜாதா மின்னுகிறார் .
ஒரு அப்பாவி இளைஞ்சனின் ஆசை ,எதிர்பார்ப்பு ,கனவு,காதல் இவை அனைத்தும் ஒரேய் நொடியில் சுக்குநூறாகுகிற தருணத்தை,
I've watched the movie "Aanandha thaandavam " earlier but I wanna here it from sujatha, so when I got soft copy of pirivom santhipom part 1 I read it immediately . The plot was so captivating at the end of part 1 I had the urge to read part 2 sooner . Thanks to chennai book fair 2017 I was able to find the book easily . Next coming to the book , I feel like sujatha is a wizard who has separate potions for each of his charectars and just before he starts to write he drinks some part of all the potions. The charectars way of responding to the situation was so realistic I couldn't stop loving his writing . The main charectar Raghu visits America to pursue his M.B.A which he is not really passionate about he finds his former love Madhumitha living happily with her rich manipulative husband Radhakrishnan . As the story pedals Ratna a sensible American girl of Indian origin proposes her wish to marry Raghu for his qualities. Throughout the story Raghu seems to be in a confused state whether to forget his blind love for Madhu and accept Ratna as his wife . From any third person point of view people would suggest Raghu to accept Ratna as she is way better than Madhu , but Raghu's heart aches everytime he thinks about Madhu . I loved the story because it spoke the plain truth about life . Kudos to Sujatha for yet another master piece.
Did not expect an out and out romantic novel from Sujatha like this. He takes us into the mind of all the characters. Some of the intentions and dialogues spoken by some characters did not get with me well but I guess that is what the author intended. Raghu’s dad’ character was beautifully portrayed. The karma angle was superbly brought out. And the ending was fulfilling for me too.
the first book is all about love, but the second book takes a more philosophical approach on each character. sujatha is a master when it comes to character development.
2022-ம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக கிடைத்தக் கடைசி புத்தகம். அவர்களுக்கு நன்றி.
ஆனந்த தாண்டவம் திரைப்படம் பார்த்த நான் அதான் title card யில் சுஜாதாவின் புகைப்படம் பார்த்தப்போதே இப்புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
ரகுபதி வேலை தேடும் இளைஞன்,அவனிடம் இருந்து கதை ஆரம்பம். பாபநாசத்தில் வேலை செய்யும் அப்பா, அவரின் உயர் அதிகாரியின் மகள் மதுமிதா. சுஜாதாவின் வருணனையில் அவள் அழகோ அழகு. அவளின் குறும்பும், வெகுளி பேச்சு ரகுவை காதல் வயப்பட வைக்கும். அவளின் பெற்றோர்களும் நிச்சயம் என்ற ஒரு நிகழ்ச்சி போல் சிறியதாக ஏற்பாடு செய்து, அதையும் நடத்தி முடித்து அவனை சென்னை அனுப்புவர். காதலில் ஒரு பிரிவு மென்மேலும் காதலை வளர்க்கும் உண்மையான காதல் உள்ளவர்களுக்கு. அதே போல் ரகுவும் அதீதக் காதல் அடைந்தான். அவளின் கடிதத்தை கூட அவன் வரி மாறாமல் ஒப்பிக்கும் வண்ணம் இருந்தது. மதுவின் அப்பாவின் தகவலின் பேரில் அவன் மீண்டும் பாபநாசம் வரும் போது அனைத்தும் நாசமாகத்தான் போனது. ரகுவின் அப்பா அடிக்கடி கூறுவார். இது வில்லன் இல்லா காதல் கதை. அத்தனை சுவரஷ்யம் இல்லை என்று. ஆனால் சுஜாதா அவர்கள் ஆரம்பித்தார். வந்தான் ஒரு அமெரிக்க மாப்பிள்ளை. அமெரிக்க மோகம் என்றாலே சொல்லவா வேண்டும். மதுவின் பெற்றோர் வாக்கு தவறி ராதாவிற்கு (அமெரிக்கன்) மதுவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்தது. ரகு கதிக் கலங்கிப் போனான். மதுவின் அப்பா அம்மா ராதா என அனைவரிடமும் வாக்குவாதம். சொன்ன சொல் தவறிய மதுவின் அப்பா நியாமான பேசுவதாக நினைத்து அநியாயமாக ரகுவை ஏமாற்றி விட்டார். ரகு காதல் போனால் சாதல் என்று ஆனான். அவனின் அப்பா அவனை மீட்டெடுத்து அவனின் வளர்ச்சிகாக அமெரிக்கா அனுப்பினார். மதுவும் ராதாவை மணம் செய்துக் கொண்டு அமெரிக்கா சென்றாள். ரகு படிப்பில் இன்னல்களை சந்தித்தான்.
மேரி என்ற ஒரு கதப்பாத்திரம் வரும் போது நான் பயந்தே விட்டேன். இவள் தான் கதாநாயகியா என்று.
பிறகு அவன் மதுவை மீண்டும் பார்த்தான்.நண்பர்கள் போல் பழினான். மீண்டும் ex உடன் நட்பாக பழகினாலும் அது mental peace யை பாதிக்கும். மது ரகுவிற்கு அவனின் வருங்கால பொன்வசந்தத்தை அறிமுகம் செய்தாள். இது தான் அவள் செய்த உருப்படியான விஷயம். சுஜாதா கூறியது, ரத்னா மது விட அழகு இல்லை என்றாலும் அவள் அறிவாளி. அடிக்கடி சில சில இடங்களில் வரும் பெண் வருணனை எனக்கு பிடிக்கவில்லை. ராதாவின் குணங்கள் செயல்கள்மதுவை சின்னாபின்னம் ஆக்கியது. ரத்னா ரகுவை புரிந்துகொள்ளுதல் மிகவும் நன்றாக இருந்தது. Understanding first, love next என்பது போல இருந்தது. இந்த பிரபஞ்ச ஏற்கனவே நடந்த காட்சிகளை மீண்டும் நடத்தி பார்க்க ஆசைபடும் போல. இறுதியில் ரகு, ரத்னா,மது, ராதா,இவர்களுக்கு என்ன ஆகும் என்பது கதை.
திரைப்படத்தில் நாவலில் இருப்பது போன்று இல்லாமல் சிறு சிறு மாற்றங்கள் இருக்கும். Minor character கள் ஜெயந்தியின் திருமணம் எனக்கு திரைப்படத்தில் பிடித்து இருந்தது. மேரி என்ற பெண் படத்தில் முக்கியமானவள் இல்லை. அதற்கு பதில் ஒரு நண்பன் வருவான், நாவலில் முதல் பாகத்தில் கலை என்ற ஒரு நண்பன் இருப்பான். அவனும் சில சம்பவத்திற்கு பிறகு கதையில் இல்லை என்பது எனக்கு மகிழ்ச்சியே. மது செய்த காதல் கத்தரிகாய் எல்லாம் பெற்றோரின் வசனம் என்று ரகுவிற்கு இறுதி வரை புரிந்தாத இல்லையா என்று தெரியவில்லை.Rom com fictional பிரியை ஆனா நான் நீண்ட நாட்கள் காதல் men's pov என்பதை பற்றி படிக்க வேண்டும் எழுத வேண்டும் நினைத்தேன். ரகு சரியான காதலன். ரத்னாவின் mature பேச்சில் நான் அவளின் ரசிகை. ஒரு இடத்தில் ரத்னா ரகுவை பார்த்து, உங்க காதலை நான் காதலிக்கிறேன் என்பாள். அதே தான் ரகு நானும் சொல்லுகிறேன்.நான் படித்த காதல் கதையில் பிடித்துப் போன காதல் கதையில் இதுவும் ஒன்று. நன்றி. சுஜாதா. 💜
This entire review has been hidden because of spoilers.
பிரிவோம் சந்திப்போம். வெகு நாட்களுக்கு பிறகு வாத்தியார் வாசிப்பு.
ரகு மற்றும் மதுமிதா இருவருக்குமிடையே இயல்பாக நிகழும் காதலை வைத்து முதல் பாகம் நடக்கிறது. ஒரு சில இடங்களில் ரகுவின் ஒரு தலை காதலோ என்று தோன்றுமளவிற்கு இருக்கிறது மதுமிதாவின் மனநிலை. காதலுக்கு இடையில் அமெரிக்கா ராதாவின் இடையூறால் மதுமிதாவின் மனம் மாற்றம் அடைகிறது அல்லது மாற்றப்படுகிறது? ராகுவின் நிலை பரிதாபமாக தோன்றினாலும் சற்று நிதானமாக யோசித்தால் அவரவர் எடுக்கும் முடிவு அவரவர் பார்வையில் சரியாக தான் இருக்கிறது. மதுமிதாவின் அப்பாவின் மனநிலை, மதுமிதாவின் மதில் மேல் பூனை மனோநிலை, ரகுவின் ஆத்திரம் நிறைந்த மனோநிலை, ரகு அப்பாவின் நிதானம் அனைவரின் மனநிலையும் கதைக்கு கச்சிதமாக பொருந்தி வருகிறது.
இரண்டாம் பாகம். தமிழ் படமாக இருந்தால் எளிதாக கணித்துவிடலாம். ஹீரோ ஒரே பாடலில் முன்னேறி கோடீஸ்வரனாக பல கார்கள், பல்லடுக்கு மாளிகை, கைவிட்ட காதலியை விட அழாகான மனைவி என்று பழிவாங்கும் படலமாக இருந்திருக்கும். நாமும் கைதட்டி ரசித்து சில்லறைகளை சிதறவிட்டு அருமை என்று எழுந்து வந்திருப்போம். ஆனால் கதை வெகு இயல்பாக நகர்கிறது. ரகுவின் அப்பா ரகுவை மனம் மாற்றி அமெரிக்காவுக்கு மேற்ப்படிப்புக்கு அனுப்புகிறார். புதிய நாடு, புதிய சீதோஷணம், புதிய மனிதர்கள், இந்திய-அமெரிக்க கலந்த கலாச்சாரத்தில் இருக்கும் அமெரிக்க இந்தியர்கள் என்று ரகு சிரமப்படும் இயல்பான ஒரு சராசரி மனிதனை ஒட்டியே புத்தகம் நகர்கிறது. ரத்னா, மீண்டும் மதுமிதா, ராதா என்று கதை கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கிறது. ரத்னா வெகு இயல்பாக இருப்பது புதியதாக இருந்தது. இறுதியில் மதுமிதாவை கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. மாறாக ராதாகிருஷ்ணனை கொன்றிருக்கலாம் என்று சராசரி மனிதனின் எண்ணம் தோன்றாமல் இல்லை.
வெகு நாட்களுக்கு பிறகு 500 பக்கங்களை 4 நாட்களில் படித்து முடிக்கும் அளவிற்கு இயல்பான நடை, கதையுடன் நாம் ஒன்றி போகும் அளவிற்கு இருக்கும் கதாபாத்திரங்கள் என்று ப்ளஸ்கள் ஏராளம்.
மதுவுடனான காதல் நிச்சயதார்த்தம் வரை சென்று முறிந்த கையோடு அமெரிக்காவிற்கு செல்கிறான் ரகு. அங்கு மதுவை சந்திக்க நேர்கிறது. அதே குழந்தைத்தனம் மாறாத மதுவிடம் அவளது கணவன் பற்றிய உண்மையை சொல்லியும் பயனில்லை என்பதை உணருகிறான் ரகு. ரகுவிற்காக மது பார்த்த பெண் தான் ரத்னா-அமெரிக்காவில் வளர்ந்தாலும் இந்திய கலாச்சாரம், அறிவு, தெளிவான சிந்தனை என typical சுஜாதாவின் நாயகியாக மிளிர்கிறாள் ரத்னா.
தன் கணவனை பற்றிய உண்மையை மது தெரிந்து கொண்டு அவனை பிரிந்தாளா? ரகு ரத்னாவுடன் இணைந்தானா? என்பது தான் கதை.
ரகுவின் தந்தை என் personal favorite. "காதல்ங்கறது nature's way of ensuring a pregnancy" என்ற வசனத்தில் தொடங்கி ரகு தன் காதல் வாழ்க்கைக்கு ஆலோசனை கேட்கும் நேரங்களில் "நான் சொல்லி நீ கேட்க இது என்ன remote control ஆ? இருந்தாலும் சொல்கிறேன் என திருக்குறளை அடுக்கி கடிதம் எழுதும் இடமெல்லாம் கிளாஸ். Everyone need a Dad like Raghu's to deal with all teenage and relationship problem!
"ஆனந்த தாண்டவம்" படம் பிடித்த அனைவருக்கும் இந்த புத்தகம் பிடிக்கும்! "சுஜாதா" பிடித்த எல்லாருக்கும் இந்த புத்தகம் இன்னும் பிடிக்கும்!
இந்த கதையின் பின்னுரை தான் மனதை இன்னும் நெருடியது.ராதாகிருஷ்ணன் போல் பெண்களை granted ஆக எடுத்துக் கொண்டு "Take it easy" என்று சொல்லும் இதே சமூகத்தில் தான் ரகு போன்ற காதலர்களும் வாழ்கிறார்கள். 1983இல் எழுதிய கதை இன்றும் கனக்கச்சிதமாய் பொருந்துவது தான் காலத்தின் சோகம்!
"உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே நிலவு"-காதல் தெரிந்த எல்லாரும் படிக்க வேண்டிய கதை.
"உண்மைங்கறது பெரும்பாலானவர்கள் ஒத்துக்கற பொய்"-இந்த வரியெல்லாம் படிக்கும் போது தான் சுஜாதா இன்னும் கொஞ்ச நாள் விகடனில் கதை எழுதிக் கொண்டே இருந்திருக்க கூடாதா என்ற ஏக்கம் எழுகிறது.
Had my father pick up a bunch of easy read tamil novels from the book fair. Mostly jayakanthan and Sujatha. My father definitely thought this book was a different one when he picked it up for me, said it was about getting a visa to the US back in days. Three pages in and I knew this was the book that got adapted in the movie "Aanandha thaandavam" which I have seen atleast 5 times on Ktv. But because of my compulsive behaviour, I had to finish the book. I wa sreading a sujatha book after a long time which meant getting accustomed to reading english written in Tamil. This must be the kind of book our parents might have grown up reading in college. Very sexually charged environment, very "yadhaarthamaana" writing, Sujaatha is the king of capturing the middle class audience perfectly. Even though I knew the story very well, it was an engaging read. I like the movie and I liked the writing as well. Just a masala novel but really takes you into that world and makes you feel for the character. Good short read. Gonna go watch the movie again.
A simple and uncomplicated plot with the usual dramatic turns. It is very unlikely of Sujatha's writings to encompass the normal. The plot is not something out the ordinary but the strength is the portrayal of very normal and realistic characters whom we can relate to and bump into. Here the emphasis is more on emotions and feelings which is beautifully depicted intertwined with the plot where many a times the readers look at oneself through the characters. The significance is that there is a strong trait portrayed through every character. Over and again we have heard or experienced the conflict of brain Vs mind. Its a choice of pragmatism vs wishes/desires. It is JUST to say, "all is fair in love and war". A true love doesn't know the barriers of deceit, pragmatism, dejection, defeat. It only gets stronger and more responsible with time and conviction. With many questions still lingering, the author's note at the end brings a justifiabe acceptance. Not a unique plot, but an impactful read.
நான் மீண்டும் மீண்டும் வாசிக்கும் கதைகளில் இதுவும் ஒன்று. நாயகியின் பெயர் எனது பெயராக இருப்பது ஒரு காரணம், என்றாலும், மனித வாழ்வின் உண்மைகளை இவ்வளவு சாதாரணமாய், வெறும் கதைபோலச் சொல்லிச் சென்றுவிட்ட சுஜாதாவின் சொல் வன்மையும் ஒரு காரணம். ஒவ்வொரு இடத்திலும் சராசரி மனிதனின் மனதைத் தொடும் காட்சிகள். நாம் எடுக்கும் முடிவுகள், கேட்கும் கேள்விகள், எண்ணும் எண்ணங்கள் எல்லாவற்றையும் தான் நம் நாயகனும் செய்கிறான். ஜனரஞ்சகம் என்பது சுஜாதாவின் கலை. அதுதான் அவரது எழுத்துக்களை இன்னும் வாசிக்க வைக்கிறது என்போல ஆயிரக்கணக்கான இளைஞர்களை.
Adolescent age craze for reading novels started with Sujatha. An amazing writer, captures the mind of people well. This particular novel was a dream story for most of the Tamil boys and girls of 80's. Well written love story weaved with american dreams, life style of America, and typical mind set of middle class culture. Most of us know the cities of America through this story sitting in one corner of chennai or remote village.
It would have been a great book when it was published. Quiet difficult to accept the love, friendship and marriages in this story. An enjoyable read even though many of the twists were predictable. Apart from the technology and innovation the American narrative to an extend seems to hold good for today as well. The first part of the story was so beautiful written, One feels like living in papanasam.
ரொம்ப நாள் கழித்து என்னை மிகவும் பாதித்த ஒரு நாவல் . ஏனோ தெரியவில்லை படிக்கும் போதே மனம் வலிக்க ஆரம்பித்துவிட்டது இந்த கதையை இதற்கு முன் படமாக பார்த்ததுண்டு இருந்தும் எழுத்துக்கள் ஏனோ கஷ்டப்படுத்திவிட்டன. இந்த கதை உண்மையில் அப்படி ஒரு பாதிப்பை தருமா என்று எனக்கு தெரியவில்லை என் நேர காலமோ சூழ்நிலையோ இதை படித்தவுடன் பாதித்துவிட்டது. அதே மனதோடு பாகம் 2 நோக்கி போகிறேன்.
அமெரிக்க மோகத்தை பதிவு செய்து நான் படித்த முதல் நாவல். வாத்யாரின் வழக்கமான துள்ளல் நடை, புதுமையான சொல் பிரயோகங்கள்.. எப்போதும் போல் கலக்கல். காலம் கடந்து நம் தலைமுறையின் American Exposure கூடிவிட்டதால் இப்போது பலருக்கு பிடிக்காமல் போகலாம். இருந்தாலும் வாத்யார் எழுதிய மிகச்சில கொலை நடக்காத நாவல்களில் இதுவும் ஒன்று.
The characters are so alive that one can feel the loss when one of the main character dies. The lead character madhumitha is designed so well that sends message to every married woman to never love her husband blindly instead open your eyes and look what is happening in the other side because every guy around cannot be Ragupathy.
This entire review has been hidden because of spoilers.
ஒரு பெண் 'Innocent' ஆக இருப்பது நல்லதாக பல திரைப்படங்களில் காட்டப்பட்டுள்ளது. உதாரணமாக 'ஹாசினி' from சந்தோஷ் சுப்பிரமணியம். அது எல்லா நேரங்களிலும் நல்லதாக இருக்காது. எல்லாரிடமும் innocent ஆக இருப்பது முட்டாள்தனமாக கருதப்படலாம். அது விபரீதமாக ம���டியக்கூடும், சில கயவர்களின் வலையில் விழ வைக்கக் கூடியதாகவும் அமையும். இக்கதையில் நேர்ந்தது போல். மனிதர்களை எடை போட கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் நலனுக்காக.
Sujatha has beautifully recorded, in this story, the birth and death of first love in a man. Story will move anyone's heart and will make the reader correlate it with their own. After all, hardly can anyone escape the tragedy of first love in life!