Jump to ratings and reviews
Rate this book

தமிழ் முருகன் [ Thamizh Murugan]

Rate this book
இந்த முருகன் புனைந்த கதையன்று..
 வாழ்ந்த வரலாறு. இந்நூலின் அச்சுப்பதிப்புகள் கடந்த 2018 ஆம் ஆண்டு மே திங்களிலும் 2019 ஆம் ஆண்டு சனவரி திங்களிலும் 
வெளியாகின. தன் தந்தை தர்மலிங்கம் அவர்களின் 
நினைவாக நடத்தும் தர்மலிங்கம் அறவழித் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை 
சார்பில் இதன் அச்சு நூலைப் பதிப்பித்தார்
 என் தமிழண்ணன் 
த.மணிவண்ணன். இந்த முருகன் நம் தமிழ் இனத்துக்கானவன் 
என்ற நோக்கில் த.மணிவண்ணனே மின் நூலாக உலகத் தமிழர்களுக்குக் காணிக்கையாக்குகிறார்.
சமய, மத அடையாளங்கள் அழுக்குப்படுத்துவதற்கு முந்தைய மூத்த மூத்த காலத்தவன் தமிழ்முருகன். குறிஞ்சித் தமிழ்முருகனுக்குச் சந்தனமே குறியீடு! மற்றெல்லாம் தவறீடு! இனப்பிழை! இந்தக் கருத்துகளுக்குட்பட்டு, சங்க இலக்கியப் பாடல்களில் 
பதிவு செய்யப்பட்டிருக்கும் தமிழ் முருகன் வரலாற்றை நினைவுறுத்துவதே இந்நூலின் மையப்பொருள்.
தமிழ் வாழ்க! தமிழினம் வாழ்க! தமிழ் முருகன் வாழ்க!
-உங்கள்அறிவுமதி

66 pages, Kindle Edition

Published September 26, 2020

3 people are currently reading
98 people want to read

About the author

அறிவுமதி

6 books5 followers
அறிவுமதி, (இயற்பெயர்: மதியழகன்) புகழ் பெற்ற தமிழ்க் கவிஞரும் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார்.

http://arivumathi.blogspot.com/
https://arivumathi.wordpress.com/

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
19 (36%)
4 stars
20 (38%)
3 stars
10 (19%)
2 stars
1 (1%)
1 star
2 (3%)
Displaying 1 - 7 of 7 reviews
99 reviews
November 23, 2021
எளிய புத்தகம். அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். ஆதாரத்துடன் இந்நூல் முருகப்பெருமானைப் பற்றிப் பேசுகிறது.
Profile Image for Prasanna Kumar.
52 reviews8 followers
September 29, 2021
முருகன் ஒரு மதத்தின் அடையாளமில்லை அவன் ஒரு இனத்தின் அடையாளம்.

குமாரி கண்டத்தின் அரசனாக இருந்த ஒருவனை. ஒரு தமிழ் தலைவனை ஆரிய வருகையின் பின் எப்படி கலப்பில் தமிழ் முருகன் கந்தனாக மாறினான் என்பதை சான்றுகளுடன் விளக்கி இருக்கிறார் அறிவுமதி.

தமிழ் இலக்கியம், வரலாற்று ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், கல்வெட்டுகள் போன்ற பலவிதமான சான்றுகளைக் கொண்டு, முருகனுக்கு மத அடையாளம் என்ற ஒன்று இல்லை, மாறாக இன அடையாளம் மட்டுமே இருப்பதை ஆணித்தரமாக நிரூபிக்கிறார் அறிவுமதி.

முருகன் உலகத் தமிழினத்தின் கடவுள் என்பதனை குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், திருமுருகாற்றுப்படை, மதுரை காஞ்சி, புறம்,அகம்,சிலம்பு பாடல்கள் என்று எண்ணற்ற சான்றுகளை இணைத்துள்ளார்.

ஆரிய வருகையினால், வட மொழினியின் திணிப்பால் இன்று நான் வணங்கும் முருகன் உண்மையில் தமிழ் கடவுள் இல்லை என்பதையும் அது ஆரிய கடவுள் கந்தனை அவர்கள் நம்முள் புகுத்தி அதற்கு கற்பனை கதைகளையும் வடிவமைத்துள்ளனர் என்பதை நிரூபிக்கிறார்.

தமிழ் முருகன் - கடவுளுக்கும் மேல் ஒரு தலைவன்
Profile Image for Nithyakarpagam.
17 reviews8 followers
January 23, 2021
முருகன் ஒரு மதத்தின் அடையாளமில்லை அவன் ஒரு இனத்தின் அடையாளம்.

குமரிக் கண்டம் இருந்ததையும் அதை ஆண்ட மிகப்பெரிய போர் வீரன் தான் முருகன் என்பதையும் சான்றுகளோடு விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
Profile Image for Siva Prasath T R.
76 reviews4 followers
January 27, 2021
தமிழ் முருகன் மிக அருமையாக வடிவமைக்கப்பட்ட சிறிய புத்தகம். ஒரு பக்கம் முழுவதும் படங்கள் மற்றொரு பக்கம் முழுவதும் தரவுகள் என கேள்வி பதிலாக புத்தகம் அமைந்துள்ளது.
தமிழ் இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ள ஐந்திணைகளில், மலையும் மலைசாரந்த இடமான, குறிஞ்சித் திணையின் தலைவன் முருகன் என்று நாம் சிறுவயதிலே நம் பாடப்புத்தகத்தில் படித்துள்ளோம்.சங்கப் பாடல்கள்கள் , சங்கப்புலவர்கள், சிற்பங்கள்,0வரலாற்று ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், கல்வெட்டுகள் போன்ற பலவிதமான சான்றுகளைக் கொண்டு, முருகனுக்கு மத அடையாளம் என்ற ஒன்று இல்லை, மாறாக இன அடையாளம் மட்டுமே இருப்பதை ஆணித்தரமாக நிரூபிக்கிறார் அறிவுமதி. முருகன் என்பவன் போர்வீரன்,வெற்றித் தமிழன் நிலப்போரிலும் கடல்போரிலும் சிறந்தவன் என்று கூறுகிறார். முருகன் குறிஞ்சித் தலைவன் மட்டுமல்ல குறிஞ்சி நிலத்தோடு நெய்தல் நிலத்திற்கும் உரியவனாகிறான். குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்தது,கொற்றவைதான் முருகனின் தாய்,முருகன் உலகத் தமிழினத்தின் கடவுள் என்பதனை குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், திருமுருகாற்றுப்படை, மதுரை காஞ்சி, புறம்,அகம்,சிலம்பு பாடல்கள் என்று எண்ணற்ற சான்றுகளை இணைத்துள்ளார்.

ஆரிய தெய்வ வருகையால் வடமொழி ஆதிக்கத்தால், தொன்று தொட்டுத் தமிழர்கள் குருதிப் பலியிட்டு வழிபட்டு வந்த முருகன் , ஆரிய கடவுள் கந்தனாக மாற்றப்பட்டார். வள்ளியின் கணவனான மட்டும் இருந்த முருகன் இரு மணம் கொண்டவராக திரிக்கப்பட்டார் என முடிக்கிறார்.
Profile Image for Saravanan.
356 reviews21 followers
January 27, 2023
தமிழ் முருகன் பற்றிய கேள்விகளுக்கு பண்டைய இலக்கியங்களை கொண்டு பதிலளித்துள்ளார். தமிழ் நாடு கோவில்களில் சம்ஸ்கிருத வழிபாடு, கோவில்களுக்கு சம்ஸ்கிருத பெயர், மலேசியா பத்து மலைக்கோவிலில் விற்கப்படும் முருகன் சிலைகளில் பூநூல் என்று தன் இனத்தின் மீது திணிக்கப்பட்டத்தை தமிழினம் துடைத்தெறிய இன்னும் எத்தனை தலைமுறை ஆகுமோ. வியட்நாமில் சில முருகன் கோவில்களில் கருவறையை சுற்றி வரும் பாதை முழுக்க திணிக்கப்பட்ட கடவுள்களின் புகைப்படங்கள், சிலைகள் தான். கூடியவரையில் அவர்களுக்கான கோவிலாக மாற்றிவிடுவார்களோ என்ற ஐயம். தமிழினத்தின் மீதான பண்பாட்டு தாக்குதலுக்கு எதிராக தமிழர்களை உந்த இந்நூல் உதவலாம்.
Profile Image for Poomani Fencer.
4 reviews
April 22, 2021
தமிழ் முருகன்

கடல் கொண்ட நிலம் போல,
தமிழ் அடையாளங்களை ஆரியம் எப்படியெல்லாம் தன் வசம் ஈர்த்திருக்கும் என்பதை, ஆய்வியல் பார்வையோடும் இலக்கிய ஆதாரங்களோடும் முருகனை மையப்படுத்தி நமக்கு தருகிறார் கவிஞர்.

புத்தகம் சிறியதென்றாலும் அதில் அடங்கியுள்ள தகவல்கள் பல நூற்றாண்டுகளாக நடந்த தமிழர் வாழ்வியல், வழிபாட்டு, பண்பாட்டு சுரண்டல்களை "தமிழ் முருகன்" ஆதாரத்தோடு தருகிறது.
Profile Image for Sugan.
144 reviews38 followers
August 31, 2023
The book claims to be a history book. I came with an expectation of reference. to literature, archeological evidence etc. The only reference in the book is to Sangam literature. And there are more theories which sounds more like pseudo science.
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.