ஒரு சிறந்த மாணவனாக, நல்ல படிப்பாளியாக, கற்பித்தலில் தேர்ந்த ஓர் ஆசிரியராக, தீரமிக்க கட்சிப் பணியாளராக, கொள்கைப் பிடிப்பாளராக, திடகாத்திரமான கட்டுடல் கொண்ட ஆணாக, எழுத்தாளராக, படைப்பாளியாக, சிந்தனையாளராக, ஆங்கில மொழி வித்தகராக, அற்புதமான உரையாடல்காரராக, இரவு வாழ்க்கையில் வேட்கையோடு திளைப்பவராக, வாழ்வின் ருசிகளை ரசித்து அனுபவிப்பவராக, சாதி, வர்க்க அடையாளங்களை முற்றிலும் துடைத் தெறிந்தவராக, வாழ்வின் சரிவுப் பாதையில் தயக்கமேதுமின்றி கால் வைப்பவராக, அப்பாதையில் சல்லென்று வழுக்கிச் செல்பவராக, வீடற்றவராக, வீதிகளில் படுத்துறங்குபவராக, தன் போதைகளின் தேவைக்காக இரஞ்சுபவராக, ஒரு நாடோடியாக, வாழ்வின் இறுதியில் மிக மோசமான நோயாளியாக, அரசு பொது மருத்துவமனைய
சி. மோகன் (C.Mohan) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூல்தொகுப்பாளர், கலை இலக்கிய விமர்சகர் என்று பன்முகங்களுடன் இயங்கும் ஒரு தமிழ் இலக்கியவாதியாவார். 2014 ஆம் ஆண்டு சி.மோகனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார். ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்ற சிறியநாவல் ஒன்றையும் கமலி என்ற ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ என்ற மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும். எழுத்து தவிர, ஓவியம், சிற்பம், திரைப்படம் ஆகிய துறைகளிலும் கவனத்தைச் செலுத்திவருபவர்.
பார்வையில், சிந்தனையில், எண்ணப்போக்கில் நம்முள் மாற்றத்தை அல்லது மேலும் அழுத்தத்தை உண்டாக்கும் சில புத்தகங்களில் இதுவும் ஒன்று.
மனம் உழைப்பின் பயனை யாசிக்கும், உடல் உழைப்பைப் புறக்கணிக்கும் ஜி. நாகராஜனின் இந்த வரி அனைவருக்கும் பொருந்தும் உண்மை.
எதிர்பார்ப்பையும், சோம்பலையும் கடந்து செல்ல… கடமை, பொறுப்பு, லட்சியம், தன்னறம் என ஒவ்வொருவரும் ஒன்றைப் பற்றிக் கொள்கிறோம்.
இவற்றை எதிர்த்துச் சென்றாலும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம், அனுசரித்துச் சென்றாலும் நாம் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கப் படுகிறோம்.
ஜி. என்- னின் கதைகளில் பொன் மொழிகள் இல்லையென்று நண்பர் ஒருவர் குறைபட்டுக்கொண்டாராம். அதற்காக அவர் உதிரியாக உதிர்த்த சில பொன் மொழிகளில் ஒன்று…
“தனது கலைப் படைப்புகள் மூலம் சமுதாய மாற்றத்தை நிகழ்த்துவதாக நினைக்கும் கலைஞனுக்குப் பனம்பழத்தை வீழ்த்திய காக்கையின் கதையைச் சொல்லுங்கள்.”
அடுத்தவருக்கு ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக அவர் எதையும் செய்வதில்லை என்று தான், சி. மோகன், ஜி. என் பற்றி வரைந்த இந்தக் கோட்டோவியம் சொல்கிறது.
ஆனால், செயல்கள் அதிலும் பயன் கருதாத பலரின் செயல்கள் தான் இன்றைக்கு நாம் வாழும் இந்த மேம்பட்ட வாழ்க்கையை உருவாக்கின. பேச்சுரிமை முதல் தனியுரிமை வரை இன்று விளிம்புநிலை மக்களையும் சென்றடைந்திருக்கிறது.
அவரது கலைப்படைப்புகள் சமுதாய மாற்றத்தை நிகழ்த்தியதா என்று தெரியவில்லை ஆனால், சாமானிய மனிதனிடம் விளிம்புநிலை மக்களின் மேல் ஒரு பார்வை மாற்றத்தைக் கண்டிப்பாக நிகழ்த்தியிருக்கிறது.
ஒட்டுமொத்த மக்களின் மேம்பட்ட வாழ்க்கையே பொதுவான குறிக்கோள், அதிலும் “ஒட்டுமொத்த” என்னும் பதத்தினை விரிவாக்கிக் காட்டியவர் ஜி. என்.
பாலியல்தொழிலாளிகள், சில்லறை குற்றவாளிகள் என விளிம்புநிலை மக்களின் மேல் வெளிச்சம் காட்டிய ஜி. நாகராஜனின் ஆக்கங்களை சி. மோகனின் இந்தப் புத்தகம் மேலும் அணுக்கமாக்கியிருக்கிறது.
அவரது கதைகளையும், கதை மாந்தர்களையும், நுணுக்கமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது, ஆசிரியர் கோடிழுத்துக் காட்டிருக்கும் ஜி. என்-னின் வாழ்க்கை சித்திரம்.
ஜி. நாகராஜனின் நாவல்களையும், சில சிறுகதைகளையும் ஏற்கனவே படித்திருந்தாலும் அவரது ஆங்கிலப் புலமை பற்றி இந்தப் புத்தகத்தின் மூலம் தான் தெரிந்துகொண்டேன். அவருடைய, “Galileo and the Brechtian Dilemma” கட்டுரையைக் கூகுளில் தேடிப் படித்தேன். ஆசிரியருக்கு நன்றி.
Sure this book served it’s purpose. Such an inspiring Bio.
I accidentally bought GN's Nalai mattruro naale ( tomorrow is another day) in Madurai airport and was lying in my shelf almost 2 years. After kamalhassan explaining the book and author on bigboss - i read the novel in one shot. The author packs so much of experiences in such a short novel is truly a remarkable experience.
Such a melancholic life, makes us wonder y live such a miserable life, but again experiencing every aspect of life even the ones rejected by the society has its own beauty.