பெருந்தனக்காரர் ராமசாமி கவுண்டரின் இரு மகள்களில், மூத்தவளான தாட்சாயினிக்கு மட்டும் ஒன்றை ஆண் வாரிசு. இளைய மகள் தங்கேஸ்வரி தனது அக்கா மகன் சிம்மதேவன் அக்குடும்ப வாரிசாக வளர்ந்து சொத்துகளுக்கு அதிபதியாக கூடாது என்று வஞ்சினமாக காய் நகர்த்தி, அவன் படிப்பு முடிந்து குடும்ப பொறுப்பு ஏற்கும் பருவத்தில் வெளியேறும்படி செய்து, சிம்மனின் வாழ்வை தடம் புரண்டுபோகச் செய்கிறாள் . சிம்மன் அதில் இருந்து மீண்டுவந்து குடும்பத்துடன் இணைந்து வினை விதைத்த வஞ்சகர்களையே அவ்வினையை அறுவடை செய்யும்படி காய்நகர்த்தி குடும்பத்தோடு இணைகிறான். இதற்கான பகடையாக பயன்படுத்தப்படும் வாகினியை கரம்பிடித்து கரை ஏறுகிறான் சிம்மன்.