Jump to ratings and reviews
Rate this book

எஸ்பிபி எனும் நண்பன் : இறவா கலைஞனுக்கு ஓர் எழுத்தஞ்சலி

Rate this book
எஸ்பிபி அவர்களை தன் நண்பன் என்று உரிமை கொண்டாட குழந்தை முதல் வயோதிகர் வரை இந்த மண்ணில் பிறந்த அத்தனை பேருக்கும் உரிமையிருக்கிறது.
அத்தனை பேரின் வாழ்வை மனதை உணர்வை அவர் தொட்டிருக்கிறார் பழகியிருக்கிறார் கூடவே வாழ்ந்திருக்கிறார்.. இன்னும் வாழ்ந்து கொண்டே இருக்கப் போகிறார்.
அவருக்காக இன்று கசிந்துருகும் நம் அனைவரின் காலத்திற்கு பிறகும் அவர் வாழப் போகிறார் என்பதே உண்மை. இந்த மண்ணில் ஆக்சிஜன் தீர்ந்து போய் மனித இனம் அழிந்து போகும் காலம் வந்தாலும் அங்கு மிச்சமிருக்கும் கடைசிமனிதன் கூட எஸ்பிபி பாடலை கேட்டபடியே தன் காலத்தை கடத்துவான் என்பதை இப்போதே உறுதியாகச் சொல்லமுடியும். பாடலின் சந்தங்களுக்கும் கிடைக்கும் சந்துகளுக்கும் இடையில் சங்கதிகளின் மூலம் ஒரு சர்க்கசையே நடத்தி முடிக்கும் வித்தை தெரிந்த எஸ்பிபி க்கு நிகரான பாடகர்கள் இங்கு யாருமே கிடையாது. அவரைப்போல வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாட்டத்துடன் வாழ்ந்தவர்களும் யாரும் இருக்க முடியாது.

71 pages, Kindle Edition

Published October 1, 2020

3 people are currently reading
1 person want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (36%)
4 stars
1 (9%)
3 stars
4 (36%)
2 stars
2 (18%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Anitha Ponraj.
277 reviews45 followers
October 12, 2020
எஸ்பிபி எனும் நண்பன் : இறவா கலைஞனுக்கு ஓர் எழுத்தஞ்சலி

கதிர் ஆர் எஸ்
தொகுப்பாசிரியர்

ரஜினி திரை படங்களில் முதல் பாடல்க‌ளி‌ல் சிறு வயதில் அறிமுகம் ஆகி பின் என் ஒவ்வொரு மனநிலைக்கும் தனி தனியாக இருக்கும் ஒவ்வொரு பிளேலிஸ்ட்களிலும் இடம் பிடித்தவர் SPB.

குரலிலே எல்லா உணர்வுகளையும் பிரதிபலிக்கும் அவர் ஒவ்வொரு பாடல்களையும் வியந்து ரசித்து இசையோடு இணைந்து வாழும் பலகோடி ரசிகர்களில் நானும் ஒருத்தி.

ஒரு பாடகராக மட்டுமல்லாமல் ஒரு தலை சிறந்த மனிதனாகவும் வாழ்ந்ததனால் தானே அத்தனைபேரும் புலம்பி தவிக்கிறோம் அவர் மறைவுக்கு

50 வருடங்களில் 40000 பாடல்கள் தந்த அந்த அழகிய இசை சகாப்தத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பலரின் உணர்வுகளின் தொகுப்பு இந்த நூல்.

ஒவ்வொருவரும் சொல்லும் பாடல்களை வாசிக்கும் போதே அது SPB இன் குரலில் நம் மனதில் ஒலிக்கிறது. எந்த பாடல்கள் கேட்டு மனம் இலகுவாக தோன்றியதோ அவை எல்லாம் கனக்கிறது அதை பாடிய "இளையநிலா" இன்று நம்மிடையே இல்லை என்ற உண்மையை ஏற்க மறுக்கும் மனம்.

கலைஞர்கள் என்றும் மறைவதில்லை. காலம் தாண்டியும் வாழ்கிறார்கள். அதை அவரே என்றோ பாடியும் சென்று விட்டார்

" இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்" என்று.

ஆனால் சிலரின் மறைவை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கும். "ஏன் இப்படி" என்று காலத்தின் மீது கோபம் வரும். விழிகள் நீர்த்துளிக்க மறுக்கும் ஏனெனில் இதயம் ஏற்கனவே கசிந்துருகிக் கொண்டிருக்கும்.மனமாற வேண்டுகிறேன் அவர் ஆத்மா சாந்தியடைய...

SPBயின் இனிய குரலால் ஈர்க்க பட்ட எல்லாரும் கண்டிப்பாக இந்த புத்தகத்தை நேசிப்பார்கள் என நம்புகிறேன்.
22 reviews
September 26, 2021
A fitting tribute to a great performer

What a great artist SPB was! In my humble opinion, among all the male playback singers three singers excelled in acting while they sang. .... Rafi, Kishore and SPB. And SPB was the best ! SPB's greatness lied in his ego-free, magnanimous and truly artistic values. All the writers in this book have summarized the above mentioned points in their own style. Thanks Kathir for collecting these articles in the form of this wonderful book!
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.