அது ஒரு காலம். பெண்கள் ஆண்களுக்குச் சமமாக இருந்த காலம். போட்டிகளிலும் பந்தயங்களிலும் ஆண்களைப் பெண்கள் தோற்கடித்த காலம். பெண்கள் ஆண்களை விட பலசாலிகளாக, புத்திசாலிகளாக, கூர்மையாக - ஏன் , அழகாகக்கூட இருந்த காலம். கற்பனைத் திறமையும் சிருஷ்டித் திறனும் ஆண்களைவிட அதிக அளவில் பெற்றிருந்த காலம்.
குஜராத் மாநிலத்தின் வடக்கு எல்லையில் ராஜஸ்தானைத் தொட்டிருக்கும் மலைப்பகுதிகளில் வசிக்கும் துங்ரி கரேஸியா ஆதிவாசிகளிடையே வெகுகாலமாக புழங்கி வந்த கதைகள் இவை. காமத்தில் திளைக்கும் ராஜா ராணிகள் முதல் காதல் வயப்படும் இளைஞர்கள் வரை அனைவருக்கும் உடலின்பமே உயிரோடு இருப்பது வரை தேவையான ஒன்று என்கின்றனர். கடவுள் கூட பெண்தான் ஆணல்ல. அவளே தன மக்களிடையே காதலை ஏவிவிட்டு ஆட வைக்கிறாள். பறவைகள், விலங்குகள், இடையே வாழும் இயற்கையோடிணைந்த வாழ்க்கை அவர்களுடையது. நிர்மலமான ஆற்று நீரில் குளிக்கும் இளம் பெண்களோடு காதல் புரியும் ஆண்மை மிக்க இளைஞர்கள் நிரம்பிய இந்தக் கதைகளில் மாற்றாந் தாய் கொடுமை, கொலை செய்யும் மனைவி, கொடுங்கோல் மன்னன் போன்றவர்களும் இடம் பெறுகின்றனர்.
காலச்சுவடு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் மரிஜா ஸ்ரெஸ் என்பவரால் குஜராத்தின் ஆதிவாசிப் பழங்குடியினர்களின், ஆதிக்கதைகளைத் தொகுத்த நூல். ஸ்லோவேனியா நாட்டில் இருந்து இந்தியா வந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக, துங்ரி கரேஸியா காட்டுப் பகுதியில் இறை ஊழியம் செய்து அவர்களோடு வாழ்ந்தவராக அடையாளப்படுத்தப்பட்டு அந்த மக்களின் பல தரப்பட்ட கதைகளை ஆவணப்படுத்தி உள்ளார்.
குஜராத் மாநிலத்தின் வடக்கு எல்லையில் ராஜஸ்தானைத் தொட்டிருக்கும் மலைப்பகுதிகளில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற துங்ரி கரேஸியா மக்களிடையேப் புழங்கிய கதைகள் இந்த நூலில் உள்ளன. கதைகள் இல்லாத தமிழகத்தையோ, அல்லது இந்தியாவையோ நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அவ்வளவு கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை எவ்வளவோ வழிகளில் காலம் காலமாக தொகுத்து இலக்கியமாக்கி சொல்கிற மரபு நம்முடையது.
தெருக்களில் கதைகள், ஊருக்கான கதைகள், கோவிலுக்கான கதைகள், சுவற்றுக்கென கதைகள், மனிதருக்கான கதைகள், மனிதர்களின் கதைகள், பெருமைக்கென கதைகள், சிறுமைக்கென கதைகள், பயத்தின் கதைகள், பரவசத்தின் கதைகள் என்று எவ்வளவோ கதைகளின் கைப்பிடித்தே மானுடம் பல தலைமுறைகளை கடந்து செல்கிறது.
கதைகளை மட்டும் முடிந்த வரை சேமிக்கவோ, சேகரிக்கவோ மனித இனம் முயன்று கொண்டே தான் இருக்கிறது. பல உண்மைகள் தெளிவுறுகின்றன. பல பொய்கள் உண்மையென மாறுகின்றன. இப்படி இந்தக் கதைகள் நம் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் மகத்தானது. இந்த புத்தகத்தை பொறுத்த வரை, பெண் எப்படி ஆதி சக்தியாக இருந்தாள் என்பதும், எப்படி அது மெல்ல மெல்ல மறைந்தது என்பதும் ஆதிவாசி மக்களின் வந்த கதைகளின் வழி நமக்கு கடத்துகிறார் மரிஜா.
அவரது மிக முக்கியமான பணியாக அவருக்கு இடப்பட்டது, பெண்கள் அவர்களது ஆற்றலினை உணர வேண்டுமென்பதும், எப்படி ஒரு கூட்டமாக அவர்களால் சக்தி மிக்கவர்களாக, தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் கட்டமைத்துக் கொள்ள முடியும் என்பதையும் அவர்களுக்கு உணர்த்துவது தான். ஆனால் அந்தப் பெண்களிடமிருந்து மரிஜா கற்றுக் கொண்டது மிக மிக அதிகம் என்பதாலோ என்னவோ, அந்தப் படிப்பினைகளை கதைகளாக நம்மிடம் பகிர்ந்துள்ளார் என்று நினைக்கத் தோன்றுகிறது.
இப்படி இந்த எழுத்துப் பணியை, தன்னுடைய களப்பணியுடன் மரிஜா தொடங்கிய காலம் 1973க்கு பிறகு என்று பதிவு செய்திருக்கிறார்கள்.
"சில வருடங்களுக்குப் பிறகு, எனது நண்பரும் குஜராத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான மனுவாய் பஞ்சோலி தர்ஷக் மனம் திறந்து என்னிடம் கூறினார்: "குஜராத்தைச் சார்ந்த எழுத்தாளர்களாகிய நாங்கள் எவ்வளவோ விஷயங்கள் குறித்து எழுதியிருக்கிறோம். ஆனால் ஆதிவாசிகளைப் பற்றி எழுத வேண்டும் என்று யாருக்குமே தோன்றவில்லை. இலக்கியத்தில் அவற்றுக்கு இடமில்லை, எங்களை விடத் தாழ்ந்தவர்கள் அவர்கள் என்று நினைத்து விட்டோம். ஆனால் தூர தேசத்திலிருந்து வந்த ஒரு சகோதரி நாங்கள் செய்யத் துணியாத ஒரு செயலைச் செய்து விட்டீர்கள். ஆதிவாசிகளை இலக்கியத்துக்குள் கொண்டு வந்துவிட்டீர்கள். ஆதிவாசிப் பெண்கள் எங்கள் இலக்கியச்சிந்தனையில் இடம் பெற்று விட்டார்கள். இதற்காக உங்களுக்கு எவ்வளவோ நன்றி சொல்ல வேண்டும் மரிஜா" என்றார்.
பல வெளிநாட்டவருக்கு இந்தியா பெரும் புதிராகவே இருந்து வந்திருக்கிறது. ஆயினும் பலருக்கு அவர்களைப் பற்றியும், உலகத்தின் சாராம்சத்தைப் புரியவும் வைத்திருக்கிறது. அந்த வகையில் மரிஜாவையும், இந்தியா தன்னகத்தே அணைத்துக் கட்டிக் கொண்டதாகவே உணர்கிறார்.
"இந்தியாவில் வசிப்பது அப்படியொன்றும் சுலபமல்ல. சுலபம் என்று பொய் சொல்லக்கூடாது. இங்கே வசிப்பது சொர்க்க வாசம் என்று அளக்கக் கூடாது. வயதாகும் தோறும் இருபது ஆண்டுகளுக்கு முன் நான் ரசித்த ஜோக் அடித்த விஷயங்கள் எல்லாம் இப்போது வெறுத்து ஒதுக்குகிறது. அப்படியானால் ஏன் நான் இன்னும் இந்தியாவில் வசித்து கொண்டிருக்கிறேன்? விடை சுலபமானது. ஏனெனில் இங்குதான் நான் நானானேன். இங்குதான் என் இதயத்தைக் கண்டெடுத்தேன்".
இப்படி அவரின் இந்திய வாழ்க்கையையும், பயணத்தையும் அறிமுகம் செய்த பின்னர் மெல்ல கதைகளை அறிமுகம் செய்கிறார். பெண்களுக்கு ஆண்களின் பரிசு எப்படி மெல்ல மெல்ல, அவர்களின் மனதுக்கே தெரியாமல் அவர்களின் சுதந்திரத்தை பறித்த கதைகள் முதல், பெண்களுக்கு பேய் பிடித்ததாக ஆண்கள் அவர்கள் மீது பரப்பும் வதந்திகள் என்று பெண்களைப் பலவீனமாக்கினர் என்றும், எப்படி அதைக் காரணமாக்கி பெண்களை தண்டிக்கின்றனர் என்று நீண்டு செல்கிறது அந்த காடு மற்றும் மலைகளின் கதைகள்.
குத்ரத் என்று ஒவ்வொரு குடும்பத்துக்குமான ஆதிக்கடவுள் இருந்ததும், எப்படி காடு மலைகள் அவரால் உருவாக்கப்பட்டது என்றும், அல்கி துல்கி என்ற முதல் இரட்டையர் உதித்த கதையும், முதன் முதலில் உடன்கட்டை ஏறியது, துல்கி இறந்து போன போது - அல்கி என்ற தங்கை தான். அந்த கதை கூறுவதெல்லாம், "யாரவது ஒருவரிடம் நாம் நம் முழு அன்பை செலுத்த முடியும். அல்கி நமக்குத் தெரிவித்தது அதுதான்" என்று தங்களுக்குள் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டனர்.
பெற்றோரை வெறுத்த மன்னனை எதிர்த்து ஆதிவாசிக் கணவனும், மனைவியும் மன்னருக்கு எதிராக நின்று பேசி மக்கள் தம் பெற்றோரைப் பேணிக் காத்த கதை, புலியின் இளங்குழந்தை இரத்த வேட்கையிலிருந்து அல்லி மலருக்குள் பதுங்கி வாழ்ந்த நாகம் குழந்தை காத்த கதை என்று பல கதைகள் உள்ள நூல். ஒவ்வொன்றையும் மிகவும் ரசித்துக் கடந்தேன். படித்துப்பாருங்கள்...
The book is a collection of 14 tales of the Dungri Garasiya tribe. It begins with the author coming to India and studying Gujarati and later the dialect of the Tribal people. It talks of how she learnt the ways of rural India and how she worked at empowering these women. It was heartwarming to see her refer to the women as 'my' women. It is the selfless dedication of such people that helped the downtrodden women find a sense of independence and financial security. During Marija Sres' time, the women of the Dungri Garasiya tribe were not the strong women that their ancestors were. The tribe began from a single woman that Kudrat created to complement the beauty of the Earth. It was only from her need that she created man. The women then had autonomy in the selection of their mates and were considered equal to the men in all walks of life. Like the author describes, 'they walked neither behind not in front of the men but alongside them as equals.' Some of the stories are tales that the author heard from the tribal people and some of them are songs that have been passed on from one generation to the next, written down in the form of prose. The author's picks are all centered around women and the tribe's close connection with nature and animals. The people lived in harmony with nature, helping animals and birds, and the creatures helping the people in return. It was a time of abundance and love that was later destroyed due to commercialization and deforestation. After the insurgency of the British, the tribal people were taught to integrate themselves into mainstream life, taught to abhor their traditions and their language until they began to refer to their dialect as 'kali boli'. This was the perfect read for Indian Independence month.