எதுவும் செய்ய இயலாத கையாலாகாத தன்மையினை மழை நேரத்தின் குளிர்காற்று அதிகமாக்குகிறது..சாலையின் ஓரமாக குவிந்திருந்த குப்பைகள் மழைவெள்ளத்தில் அடித்துப் போய் விட்டதில் சாலை சுத்தமாக இருந்தாலும்.. தனது கடினமான மேற்பரப்பை இழந்து குண்டும், குழியுமாக இருந்தது..தூரத்தில் அவள் கண்ட கார்த்திக்கின் முகம் நெருங்கிவந்து அவள் சொந்தமாகி விட்டது..