என்னுடைய வாழ்க்கையில் நடந்த, என்னைச் சிலிர்க்க வைத்த, என்னை நெகிழ வைத்த, என்னை அழவைத்த, என்னை அதிர வைத்த, என்னைக் கோபப்பட வைத்த, என்னைச் சிந்திக்க வைத்த, முக்கியமாக, எனக்கு ஒரு விழிப்புணர்வைத் தந்த பல விஷயங்களைப் பற்றி, மனிதர்களைப் பற்றி, சம்பவங்களைப் பற்றி இந்தப் புத்தகம் மூலமாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். கண்டிப்பாக, என்னுடைய நினைவலைகள் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்குள் தோன்றின விழிப்புணர்வுகளை உங்களுக்குள்ளும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது சரி, அதென்ன ‘சூரிய வம்சம்’ என்று நீங்கள் கேட்கலாம். தொடர்ந்து படியுங்கள், உங்களுக்கே புரியும்.
Sivasankari is an Indian author and activist who writes in Tamil. She is one of the four Tamil writers asked by the United States Library of Congress to record their voice as part of the South Asian article on Sivashankari.
திருமதி சிவசங்கரி அவர்களை ஒரு சமூக சேவகியாக எழுத்தாளராக புரவலர் ஆக கடந்த 46 வருடங்களுக்கும் மேலாக அறிவேன். நன்றாக தெரிந்த அவரது வாழ்க்கை வரலாற்றை மீண்டும் மீண்டும் படிப்பது ஒரு அற்புதமான அனுபவம்.
மனிதர்கள் எத்தனை விதம். நாம் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களும் எதிர்கொள்ளும் அனுபவங்களும் கற்றுக்கொடுக்கும் படங்கள் என்றும் நிலைத்திருக்கும் என்பதற்கு உதாரணம் இந்த புத்தகம். எண்ணம் போல் வாழ்க்கை என்பது மிகவும் உண்மை என்பதை உணர்த்தும் புத்தகம்.