தமிழக வரலாற்றின் முக்கியமான செப்பேடுகளைப் பற்றி அவற்றை முதலில் ஆராய்ந்த அறிஞர்கள் பதிப்பித்த கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு. ஜான் மார்ஷல் , ஹுல்ட்ஸ் , வெங்கய்யா , கோபிநாத ராவ் போன்ற சென்ற நூற்றாண்டுகளில் தமிழர் வரலாற்றைக் கட்டமைப்பதில் பெரும் பங்காற்றியவர்களின் கட்டுரைகள் இவை. தமிழர் வரலாற்றின் முக்கிய ஆவணங்களான கூரம் , திருவாலங்காடு , அன்பில் , வேலூர்ப்பாளயம் , லெய்டன் , திருநெல்லி , வேள்விக்குடி செப்பேடுகள் கண்டறியப்பட்டபோது அவை என்ன மாதிரியான விவாதங்களையும் , இன்று நாம் எளிதாக எடுத்துக் கொள்ளும் பல்லவ , சோழ , பாண்டிய , சேர மன்னர்களைப் பற்றிய நமது புரிதலை அவை எப்படி முன்னெடுத்து சென்றன என்றும் இந்த கட்டுரைகளில் தெரிந்து கொள்ளலாம்.
இவை அறிமுக கட்டுரைகளே. இது போன்ற ஆயிரக்கணக்கான கட்டுரைகள் மற்றும் ஆய்வுகளின் முடிவையே இன்று நாம் வரலாறாக வாசிக்கிறோம். இந்த புரிதலை ஏற்படுத்த இந்த சிறு நூல் பயன்படும் என்று நினைக்கிறேன்.
உள்ளடக்கம்
கூரத்தில் இருந்து ஒரு பல்லவ சாசனம். மூன்றாம் நந்திவர்மனின் வேலூர்ப்பாளையம் செப்பேடுகள். லெய்டன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் இரண்டு செப்பேடுகள் திருவாலங்காடு செப்பேடுகள் அன்பில் செப்பேடுகள் நெடுஞ்சடையனின் வேள்விக்குடி சாசனம். பாஸ்கர ரவிவர்மனின் கொச்சி செப்பேடுகள். பாஸ்கர ரவிவர்மா திருவடியின் சில பதிவுகள்