நீங்கள் செல்வந்தராக வேண்டுமா?இந்த கேள்விக்கு நம் அனைவரின் ஏகோபித்த பதிலும் "ஆம்!" என்பதாகவே இருக்கும். மாற்றாக பதிலளிப்பவர்கள் அரிது. செல்வந்தராக வேண்டும், இன்றைய வாழ்க்கை முறையை மாற்றி நினைத்த வாழ்வை வாழவேண்டும் என்கிற தீரா ஆசை எல்லாருக்குமே இருக்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் இந்த எண்ணம் கைகூடுவதேன்? ஏன் மற்றவர்களால் இதை நிகழ்த்த முடிவதில்லை!உண்மையில் செல்வந்தராவது உலகின் அனைத்து மனிதர்களுக்கும் சாத்தியம்! அதற்குத் தேவையானது ஒன்றேதான். செல்வத்தை பற்றிய இயற்கை விதிகளின் சரியான புரிதல்!இவ்வுலகிலுள்ள அனைவருக்கும் இந்த புரிதல் கிடைத்திடவேண்டும் என்ற நோக்கில் செல்வத்தின் ஞானம் அனைத்தும் மிக எளிய நடையில் அனைவருக்கும் பு
பண வாசம் ❤️ • பணம், நம் எல்லோரையும் இணைக்கும் ஒற்றைக் கருவி. அதை அடைந்து செல்வந்தாராக எண்ணுவது நம் அனைவரினதும் இயல்பான அவா. அப்படி செல்வந்தராக மாற, செல்வம் நம்மைத் தேடி வருவதற்கான இரகசியங்களை குரு மித்ரேஷிவா விளக்கும் புத்தகமே இந்த பண வாசம். • இந்தப் பிரபஞ்சம் நமக்கானதை வழங்கத் தயாராக இருக்கிறது, ஆனால் நாம் தான் அதற்குத் தடங்கலாக இருக்கின்றோம். அதற்கு முதல் காரணியாக நாம் மற்றவர் மீது கொள்ளும் பொறாமை அமைகிறது. தொடர்ந்து நம் மனநிலை, நாம் செய்யும் செலவின் நோக்கங்களும் அதனுடனான பதற்றங்களும் செல்வாக்குச் செலுத்துகின்றன. • பணம் மட்டுமே செல்வமல்ல, நேரம், ஆரோக்கியம், மகிழ்ச்சியான வாழ்வு என செல்வத்தின் பிற பக்கங்களைப் பற்றியும் பேசுகிறது புத்தகம். நமது வாழ்வின் நோக்கமும் அதனோடு ஒத்திசைந்த நம் செயற்பாடும் செல்வத்தைப் பெருக்கும் என்பதோடு எவ்வகைச் செல்வமாகினும் அதைப் பகிரும் போதுதான் மேலும் பெருகும் என்ற உண்மையையும் எடுத்தியம்புகிறது இப்புத்தகம். ‘தர்மம் தலை காக்கும்’ • பணம்சார் உளவியலைப் போலவே இந்தப்புத்தகமும் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். ஒரே இருப்பில் வாசித்து முடிக்கலாம். பணம்சார் உளவியல் பணத்தின் பக்கம் பேச, பண வாசம் மனத்தின் பக்கம் பேசுகிறது. இரண்டின் புரிதலும் நம் வளர்ச்சிக்கு அவசியம். • [“பணம் சம்பாதிக்கவும் சந்தோஷமாக வாழவும் ஒரே ரகசியம்தான். பிடித்த வேலையைச் செய்ய வேண்டும். பிடித்த மனிதர்களோடு வாழ வேண்டும். நீங்கள் யாரை நேசிக்கிறீர்களோ, யார் உங்களை நேசிக்கிறார்களோ அவர்களோடு வாழ வேண்டும். அப்படி வாழும்போது எப்போதும் நம்மோடு சந்தோஷமும் இருக்கும், பணமும் தானாக வந்து சேரும். இதுதான் வாழ்வின் மிகப்பெரிய ரகசியம்.” —புத்தகத்திலிருந்து]
🤑 பணம் எல்லோருக்கும் ஆனது நாம் தான் அதை புரிந்து கொள்ளாமல் அதற்கு தடையாக இருக்கிறோம், நம் எண்ணம், நம் நோக்கம், நாம் செலவு செய்யும் போது இருக்கும் மனநிலை, பணம் பற்றின பயம் இது போன்ற நம் மனநிலையின் காரணமாக தான் நாம் பணக்காரர்கள் ஆகாமல் இருக்கிறோம்.,
🤑 கடினமாக உழைத்து கோடீஸ்வரன் ஆக முடியுமா என்றால் முடியாது., களைப்படைந்து ஏழையாக தான் இருப்போம், என்ன செய்யவேண்டும்., எப்படி மாறவேண்டும் என்று சில சூட்சமங்கள் இந்த புத்தகத்தில் உள்ளது.
🤑 பணதிற்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பு என்ன..? இயற்கை நம்மை எப்படி இருக்க சொல்கிறது.? நாம் எப்படி இருக்கிறோம்..? அப்படி இருந்தால் நாம் கண்டிப்பாக பணக்காரர்களாக ஆக முடியுமா...? வாசித்து பாருங்கள் பணம் பற்றின ஆழமான தகவல்களும் நம்மை மாற்றும் பல விஷயங்களையும் தெரிந்துகொள்வோம்.
Guru Mithreshiva has explored the hidden truths of this universe and is involved in a process of sharing them to other beings. This book is one more step in the process!
This is truly an eye opener in so many ways. The way how you treat wealth? Is just outstanding in this book. I have learned so many things new from this book . Definitely a change in mindset towards money.
Good book from for people who didn't know Law of Attraction and a good refresher to who already knew about it. Just follow what the author said and you will see definitely a difference.