க. சீ. சிவகுமார் (இறப்பு: 3 பிப்ரவரி 2017) தமிழகத்தைச் சேர்ந்த சிறுகதை, புதின எழுத்தாளர் ஆவார். 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருந்தார். சிறந்த சிறுகதைக்கான 'இலக்கிய சிந்தனை விருது' 2000ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
கன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், திருப்பூர் மாவட்டம் சின்ன தாராபுரம் அருகேயுள்ள கன்னிவாடி கிராமத்தில் பிறந்தவர். திருப்பூர் பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்துடன் இணைந்து இலக்கிய நிகழ்வுகளை நடத்தியவர்.
பத்திரிகையாளராக விகடன், தினமலர் ஆகிய நிறுவனங்களில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.
வெளிவந்த நூல்கள் கன்னிவாடி ஆதிமங்கலத்து விஷேசங்கள் குணச்சித்தர்கள் உப்புக்கடலை குடிக்கும் பூனை க. சீ. சிவகுமாரின் குறு நாவல்கள்