கவிஞர் ஆத்மாநாமை ஆசிரியராகக் கொண்டு மே 1978ல் தொடங்கி, 6 ஜூலை 1984ல் அவரது மறைவுக்குப்பின் ஞானக்கூத்தனை ஆசியராகக் கொண்டு அக்டோபர் 1988 வரை வெளியான 28 இதழ்களின் தொகுப்பு.
500 பக்கங்களுக்கும் மேல் கவிதைகளும் கவிதை பற்றிய விவாதங்களும் விமர்சனங்களுமாக ஒரு காலகட்டத்தின் இலக்கிய வரலாற்று ஆவணம் இது.
தமிழின் புதுக்கவிதை வரலாற்றில் வெகு முக்கியமான சிற்றிதழ். இன்றைய வாசிப்பில் கவிதைகள் சோடைக் கவிதைகளாகத் தோன்றினாலும் வெளிவந்த காலகட்டத்தை கணக்கிடும் போது புதுகவிதைக்காக மெனக்கெட்ட ழ இதழின் தீவிரம் தெரிகிறது. புதுக்கவிதை பற்றிய கட்டுரைகள் யாவும் இன்றும் முக்கியமானவை. வாசிக்க வேண்டியவை.