எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை ஆயிரம் பெயர் சொல்லி அர்ச்சித்து அவன் மனம் குளிர வேண்டினால் மன நிம்மதியுடன், சந்தோஷமாக, உடல் ஆரோக்கியத்துடன், செல்வச் செழிப்பான வாழ்க்கை வாழலாம் என்பதுதான் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமை. விஷ்ணு சஹஸ்ர நாமத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் இதனை சொல்லலாம். முழு மனதோடு பகவானைச் சரணாகதி அடைந்தால் பலன்களை அவன் தருவான். விஷ்ணு சஹஸ்ர நாமத்தை கூறினால் பேய், பிசாசுகள் அண்டாது. வியாதிகள் அணுகாது. வைத்தியர்கள் கைவிட்ட தீராத நோயும் தீரும். சுகப்பிரசவம் சரியாக நேரும். நோயாளிகளின் காதருகே அவர்கள் மனம் கேட்கும்படியாக சஹஸ்ர நாமப் பாராயணம் செய்வது மிக மிக உத்தமம்.