Jump to ratings and reviews
Rate this book

ஆதவன் சிறுகதைகள்

Rate this book
தமிழின் மிக முக்கியமான சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவரான ஆதவனின் அனைத்துச் சிறுகதைகளும் அடங்கிய முழுத் தொகுப்பு இது. சந்தேகமில்லாமல் ஒரு பெரும் தலைமுறையையே பாதித்த எழுத்து அவருடையது. தனி மனிதனின் பிரச்னைகளை, தேடல்களை, மனக்கொந்தளிப்புகளை, அற்ப ஆசைகளை, அவை தீராதபோது எழும் ஆதங்கத்தை, குமுறலை - ஆதவனைப்போல் நேர்த்தியாகப் பதிவு செய்தவர்கள் தமிழில் குறைவு.

***

‘1960-70களில் இந்திய நகரங்களில் இளமைப் பொழுதை க்கழித்த, படித்த, மத்தியதர வர்க்கத்தினரின் பிரத்தியேக ஆசை - அபிலாஷைகளையும் சோகங்களையும் நிராசைகளையும் ஆதவனைப்போல யாரும் தமிழில் பிரதிபலித்ததில்லை. ’இண்டர்வியூ’, ’அப்பர் பெர்த்’ போன்ற அவருடைய பக்குவம் மிக்க சிறுகதைகளைப் படித்து, இவ்வளவு துல்லியமாகவும், சத்தியம் தொனிக்கவும் தற்கால இந்தியாவின் படித்த இளைஞர் மனத்தைச் சித்திரிக்க முடியுமா என்று வியந்திருக்கிறேன்.’

- அசோகமித்திரன்

‘நான் அவனை பாதித்திருப்பது போல, ஆதவனும் என்னை மிகவும் பாதித்திருக்கிறான். இதை நான் பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியும்.’

- இந்திரா பார்த்தசாரதி

‘தமிழ் இலக்கியத்தை நிரந்தரமாக அலங்கரிக்கக்கூடிய பல மணிமணியான சிறுகதைகளை ஆதவன் எழுதியிருக்கிறார். இப்போதும் எழுத்துலகில் நிறைய இளைஞர்களைப் பார்க்கிறேன். நுணுக்கமாக எழுதுபவர்கள், பெரும் மேதாவிலாசம் இருந்தாலும் அன்பும் அடக்கமும் உடையவர்கள்... இத்தகைய இளைஞர்களைப் பார்க்கிறபோது ஆதவனைப் பற்றிய ஞாபகம் வந்துகொண்டே இருக்கிறது.’

- திருப்பூர் கிருஷ்ணன்

800 pages, Paperback

First published January 1, 2005

12 people are currently reading
317 people want to read

About the author

Aadhavan

24 books22 followers
Also known as ஆதவன் (Tamil).

Sundaram was born in Kallidaikurichi in Tirunelveli District and obtained his education in Delhi. He worked briefly for Indian Railways. Later he joined the National Book Trust of India as an assistant editor. He married Hema in 1976. He started his literary career as a writer of stories for children in the magazine Kannan. He wrote under the pseudonym Aadhavan (lit. The Sun). His most noted work was the novel En peyar Ramaseshan (lit. My name is Ramaseshan), which was translated into Russian by Vitaliy Furnika and sold over a hundred thousand copies. In 1987, he drowned while swimming in a river at Shringeri. He was awarded the Sahitya Akademi Award for Tamil posthumously for his collection of short stories Mudalil iravu varum (lit. First comes the night)

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
21 (45%)
4 stars
15 (32%)
3 stars
6 (13%)
2 stars
3 (6%)
1 star
1 (2%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Dineshsanth S.
192 reviews42 followers
Want to read
February 7, 2022
தமிழில் நான் வாசித்த மிகச்சிறந்த சிறுகதைத் தொகுப்புகளுள் இதுவும் ஒன்று.இந்நூலில் இடம்பெறும் "முதலில் இரவு வரும்" சிறுகதை என்னை மிகவும் பாதித்தது.அதனை வாசித்த பின்னர் பத்து நிமிடங்களுக்கு மேல் அம்மாவை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.
Profile Image for Vishy.
806 reviews285 followers
January 31, 2024
புத்தக விமர்சனம் – ஆதவன் சிறுகதைகள்

எப்போதும் வருட ஆரம்பத்தில், ஜனவரி மாதத்தில், நிறைய புத்தகங்கள் படிப்பேன். ஆனால் இந்த வருடம் ஏனோ முடியவில்லை. ஆனால் புத்தக திருவிழாவுக்கு எப்படியோ நேரம் ஒதுக்க முடிந்தது. அங்கு போய் இலக்கிய காதலை கொண்டாடி நிறைய புத்தகங்கள் வாங்கினேன். எத்தனை புத்தகங்கள் வாங்கினேன் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது. காதலுக்கு கண்ணில்லை என்று சொல்லுவார்கள். இலக்கிய காதலுக்கும் கண்ணில்லை அல்லவா?

இப்படி வாங்கின ஒரு புத்தகம் தான் ஆதவனின் சிறுகதைகள். சில வருடங்களுக்கு முன்பு தோழி ஒருவர் ஆதவனின் எழுத்து பற்றி மிகவும் புகழ்ந்து பேசினார். அப்பொழுதே அவர் புத்தகங்களை படிக்க வேண்டும் என்று ஆசை. இப்போது தான் சில வருடங்களுக்கு பிறகு அந்த ஆசை நிறைவேறியது.

ஆதவன் அவர் காலத்தில் சிறுகதை பிரியர்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். சில நாவல்களும், நெடுங்கதைகளும், ஒரு நாடகமும் எழுதியுள்ளார். ஆனால் சிறுகதைகளுக்கு தான் இவர் மிகவும் புகழ் பெற்றவர். இந்த புத்தகத்தில் அவர் சிறுகதைகள் எல்லாம் உள்ளன. மொத்தம் 60 சிறுகதைகள். பெரிய புத்தகம். 800 பக்கங்கள். ஒரே நாளில் படிக்க முடியாது. கொஞ்சம் நாள் ஆகும். எனக்கு ஒரு மாதம் ஆனது.

ஆதவன் கதையில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள், அமைதியை விரும்புபவர்கள். சுதந்திரத்தை விரும்புபவர்கள். மனதிற்குள்ளேயே வாழ்பவர்கள். ஆனால் உலகம் அவர்களை சும்மா விடுவதில்லை. அவர்களுடைய சுதந்திரத்தை பறிக்கிறது. அவர்கள் மேல் மரபை, மதத்தை, சடங்குகளை, சம்பிரதாயத்தை திணிக்கிறது. அவர்களின் அமைதியை குலைக்கிறது. இந்த சூழ்நிலையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது கதை. நீங்களும் மனதிற்குள் வாழ்பவராக இருந்தால் உங்களுக்கு இந்த கதைகள் மிகவும் பிடிக்கும். இந்த கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் மனது உங்களுக்கு புரியும். சில சமயம் உங்களையே அந்த கதாபாத்திரங்களில் காண்பீர்கள்.

இதில் பல கதைகள் மனித மனதின் ஆழத்தை, மனித உறவுகளின் ஆழத்தை, மனித மனதின் முரண்பாடான சிந்தனைகளை அழகாக சித்தரிக்கின்றன. நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்பு எழுதிய கதையாக இருந்தாலும் இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்துகிற மாதிரி இருக்கிறது. ஐம்பது வருடங்களில் நம் வாழ்க்கை சூழ்நிலை எவ்வளவோ மாறிவிட்டது. இப்போது காரில் போகிறோம், plane-னில் பறக்கிறோம், எப்போதும் கையில் smartphone வைத்திருக்கிறோம். ஆனால் மனித மனம் மட்டும் மாறவில்லை. அப்படியே தான் இருக்கிறது.

இந்த புத்தகத்தில் எந்த கதைகள் எல்லாம் பிடித்த கதைகள் என்று சொல்ல தெரியவில்லை. கிட்டத்தட்ட எல்லா கதைகளும் நன்றாக இருந்தன. அதிகம் யோசனை செய்யாமல் நினைத்து பார்த்தால் –

'ஒரு பழைய கிழவர்; ஒரு புதிய உலகம்' (ஒரு பெரியவர் மாறிய இன்றைய உலகில் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று கதை), 'கருப்பு அம்பா கதை' (ஒரு அப்பா தன் மகளுக்கு கதை சொல்லும் போது என்ன நடக்கிறது என்று கதை), 'புகைச்சல்கள்' (ஒரு புது மண தம்பதியரின் உறவு எப்படி மாறுகிறது என்று கதை), 'சினிமா முடிந்த போது', 'சிவப்பாக உயரமாக மீசை வைக்காமல்...'(காதல் வசப்படும் ஒரு இளைஞனுக்கும் இளம் பெண்ணுக்கும் நடுவே என்ன நடக்கிறது என்று கதை)

– இந்த கதைகள் எல்லாம் சட்டென்று ஞாபகத்திற்கு வருகின்றன.

புத்தகத்திலிருந்து பிடித்த சில பகுதிகள் –

******

'சினிமா முடிந்த போது' என்ற கதையிலிருந்து

"சமையலறையிலிருந்து கௌரி ஏதோ டியூனை முனகும் ஓசை மிதந்து வந்தது. இவளுக்கு வீட்டுக்குள் வந்து விட்டாலே ஒரே உற்சாகம்தான். அவனோ வீட்டிலிருக்கும் சமயங்களிலெல்லாம் சிறகொடிந்த பறவை போல உணருகிறான். அவனுக்கு வெளி யுலகம்தான் பிடித்தமானது. கூட்டங்கள் பிடித்தமானவை. ஏராளமான வண்டிகளும் மக்களும் மேலும் கீழுமாகச் சென்ற வண்ணமிருக்கும் சாலைகள்; ஜேஜேயென்ற கடைத் தெருக்கள். சினிமா தியேட்டர்கள், ஹோட்டல்கள். ஆனால் இவளுக்கு வீடுதான் பிடிக்கும். அதன் அமைதியும் ஆசுவாசமும்தான் பிடிக்கும். அவன் ஒரு விடலையான கோலாகலப் பிரியன் என்றும் அவள் ஒரு ரசனையற்ற தொட்டாற்சுருங்கியென்றும் இதற்குப் பொருளல்ல. தனிமை, கலகலப்பு இரண்டும் இருவருக்குமே ஏறத்தாழ ஒரே விகிதாசாரத்தில் வேண்டும். அவனுக்குப் பிறரின் கலகலப்பிடையே தன் தனிமையை, வித்தியாசத்தை உணருவதில் ஓர் ஆசை. உலகத்தின் இயல்பான அழகுகளை விசித்திரங்களை, விலகி நின்று ருசிக்கத் தெரிந்ததன் ரசனையின் பால் கர்வம். அவளுக்கோ தானே கலகலப்பை உருவாக்கும் கதாநாயகியாக ஜொலிக்க ஆசை. இந்த ஜொலிப்பு வீட்டுக்குள்தான் சாத்தியமென்பதால் வெளியுலக ஓசைகள் ஒலிகளிடையே அவள் அற்பமாகிப் போவதால் வெளியுலகம் அவளுக்கு வேப்பங்காய்."

******

'கருப்பு அம்பா கதை' என்ற கதையிலிருந்து

"அப்பா, கதை சொல்லு."

"உம்... சரி: சொல்கிறேன்...ஒரே ஒரு காக்காய் இருந்ததாம்..."

"காக்காய்க் கதை வேண்டாம்."

"வேறே என்ன கதை வேணும்?"

"கருப்பு அம்பா கதை."

"சரி, சொல்றேன்."

அம்பா என்றால் மாடு. கருப்பு அம்பா என்றால் கருப்பு மாடு, அதாவது எருமை மாடு.

"ஒரே ஒரு ஊரில ஒரு கருப்பு அம்பா இருந்ததாம்..." என்று சங்கரன் கதை சொல்லத் தொடங்கினான். மாலுவின் முகத்தில் ஆர்வமும் மகிழ்ச்சியும் துள்ளின. கதை என்ற பெயரில் அவளிடம் எதையாவது சொல்ல வேண்டும். அவள் வேண்டுவது அதுதான். கதை முன்னுக்குப் பின் முரணானதாக, அபத்தங்கள் நிறைந்ததாக, சாரமற்றதாக இருக்கலாம். ஆனால் அவளை ஒரு பொருட்டாக மதித்து அவளுக்கென நாம் விசேஷப் பிரயத்தனம் எடுத்துக் கொள்வதாக அவள் உணரச் செய்ய வேண்டும் – இது முக்கியம். நடுவில் சிறிதளவு கூட இடைவெளி விடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே போகவேண்டும் – இதுவும் ரொம்ப முக்கியம். அவனுடைய கற்பனைத் திறனுக்கும் துரிதமான சிந்தனைத் திறனுக்கும் ஒரு சவால். இந்தச் சவாலை மாலுவின் மீதுள்ள ஆசையினால் மட்டுமல்ல, தன் மீதுள்ள ஒரு கவலை மற்றும் பரிவு காரணமாகவும் அவன் தினசரி சந்திக்கத் தயாராகிறான். ஆமாம்; அவளுக்குக் கதை சொல்லத் தொடங்கி, அந்தக் கதையில் மெல்ல மெல்ல அவனும் ஆழ்ந்து போகும் போது, அவனுடைய மன உளைச்சல்கள் அல்லது உறுத்தல்கள் – அன்றைய தினத்து முகங்களும் நிகழ்ச்சிகளும் தந்த பரிசுகள் – மங்கி மறைந்து போகின்றன. அவன் புத்துயிர் பெறுகிறான்...

எனவே கருப்பு அம்பா மாலுவுக்கு எப்படியோ அப்படியே அவனுக்கும் ஓர் இஷ்ட தெய்வம்தான். தினசரி அது புதிதாக என்ன செய்யப்போகிறது என்று அறிவதில் மாலுவுக்கு இருக்கிற ஆர்வமும் ஏக்கமும் அவனுக்குமுண்டு.

******

'ஒரு பழைய கிழவர்; ஒரு புதிய உலகம்' என்ற கதையிலிருந்து

"கடைசியில் அவருடைய முறையும் வந்தது. அவர் நாற்காலியில் போய் உட்கார்ந்தார். நாவிதன் அவரைக் கழுத்துக்குக் கீழே வெள்ளைத் துணியால் போர்த்தினான். அவருக்குத் திடீரென்று அமைதியும் ஆசுவாசமும் ஏற்பட்டது. மீண்டும் சிறு பையனாகி விட்டது போல – பொறுப்புகள் இல்லாதவராக, சீராட்டுக்குரியவராக. இப்போது அவர் எதுவும் செய்ய வேண்டியதில்லை. எல்லாம் நாவிதன் பார்த்துக்கொள்வான். ஒரு நல்ல தந்தையைப்போல, தாயைப்போல, மனைவியைப்போல, எல்லா நாவிதர்களிடமும் அவர் இப்படி ஆசுவாசமாக உணர முடிந்ததில்லை. ஒரு வருடம் முன்பு இவனைக் கண்டுபிடிக்கும் வரையில் அவர் எவ்வளவு சிரமப்படவேண்டியிருந்தது.

பல வருடங்களாக கனாட் பிளேஸில் ஒரு குறிப்பிட்ட சலூனில் இருந்த ஒரு குறிப்பிட்ட கிழவனிடம்தான் அவர் முடிவெட்டிக் கொண்டார்; ஆனால் திடீரென்று ஒரு நாள் அந்தக்கிழவர் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். அன்று இன்னொருவன் அவருக்கு முடி வெட்டிவிட்டான். அவன் அவர் தலையைத் தொட்டு திருப்பிய விதம், தலைமயிரை வாரிய விதம், சிரைத்த விதம், காதுகளின் மேல்புறத்தில் மழித்த விதம், எல்லாமே அவருக்கு அருவருப்பூட்டின. அவர் அதன் பிறகு அந்த சலூன் பக்கமே போகவில்லை. நாவிதனுடன் நாம் கொள்ளும் உறவு வெறும் வார்த்தை உறவல்ல; ஸ்பரிச உறவு – மனைவியுடன் கொள்ளும் உறவைப் போல. சிலரால்தான் நாம் கவரப்படுகிறோம். சிலர் தீண்டுவதுதான் நமக்கு இதமளிக்கின்றது. நம்மை கவராதவர்கள் பேச்சை பொறுத்துக்கொள்ளலாம்; ஸ்பரிசத்தை பொறுத்துக் கொள்ள முடியாது. அவனை அவருக்குப் பிடிக்காமல் போனது அவனுடைய குறையென்று கூடச் சொல்ல முடியாது. அவருடைய துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.

இந்த துரதிர்ஷ்டம் பல நாள்கள் நீடித்தது. எத்தனை சலூன்களுக்குச் சென்றிருப்பார், எத்தனை நாவிதர்களிடம் பண்ணிக்கொண்டிருப்பார்! யாருமே அவருக்குத் திருப்தியளிக்கவில்லை. கடைசியில் ஒரு வருடத்துக்கு முன்பு அவர் வீட்டருகிலேயே இந்த சலூன் திறந்தது. அதனுடைய முதலாளியாகிய இந்த நடுத்தர வயது நாவிதனிடம் தான் சலூன் நாற்காலிகளில் பெற விரும்பிய ஆசுவாசத்தை அவர் மீண்டும் – வெகுநாள்களுக்குப் பிறகு – பெற முடிந்தது. அவனுக்கு வயதென்னவோ முப்பத்தைந்துக்குள்தான் இருக்கும். ஆனாலும் அவருடைய பழைய கிழட்டு நாவிதரிடம் இருந்த அதே பக்குவமும் இங்கிதமும் மென்மையானதொரு கர்வமும் அவனுடைய ஒவ்வோர் அசைவிலும் ஸ்பரிசத்திலும் இருந்தது. அவன் ஒரு கலைஞன். தான் செய்கிற தொழில் குறித்து அவனுக்குத் தாழ்வு மனப்பான்மை கிடையாது. இந்தத் தாழ்வு மனப்பான்மை விளைவிக்கும் முரட்டுத்தனமோ அல்லது போலியான பணிவோ அவனிடம் இல்லை."

******

ஆதவன் சிறுகதைகள் படித்திருக்கிறீர்களா? பிடித்திருந்ததா? உங்கள் கருத்துக்களை பகிருங்களேன் 😊

******

#BookReview – Collected Short Stories of Aadhavan

My reading in January hasn't been going well because I've been distracted by life. But I managed to find time to go to the local book fair and get some (= many, too many!) books. I also somehow managed to find time to read one of the books I got. It was the collected short stories of Aadhavan.

Aadhavan was a well-known Tamil writer during his time. He started writing from the 1960s and he wrote till the late 1980s. He wrote mostly for small, serious literary magazines. So his fan base was small but loyal. He was famous for his short stories (this book has 60 of them), but he also wrote a few novels (3 of them), some novellas (5, I think) and a play. Most of his short stories featured an introverted person who lived a rich internal life, but who struggled with the day-to-day demands placed by everyday life, by family, by religion, by the workplace, by the state. His protagonists struggle to balance the contradictions between these two. If you are an introvert, you'll be able to identify with most of these stories.

I loved this book. It took me a long time to read, but I loved it. It is hard to pick some favourite stories from the book, because the book was huge and there were so many favourites. Some top-of-my-mind favourites are these –

(1) An Old Man; a New World (Oru Pazhaiya Kizhavar; Oru Pudhiya Ulagam) – It is about an old man who struggles with the changes in the world, and how it is hard to even find a good saloon to get his hair cut

(2) The Story of Black Amba (Karuppu Amba Kadhai) – it is about a dad telling his daughter her favourite story every night, and how the story keeps taking new shapes everytime it is being told

(3) Pugaichalgal – it is about a newly married couple, whose relationship changes in a complex way after the initial honeymoon period gets over

(4) After the Movie Ended (Cinema Mudindha Podhu) – it is about what happens when to a family of three, a husband, a wife, and a kid, when the movie gets over

(5) Sivappaga, Uyaramaaga, Meesai Vaikkaamal... – it is about a young man and a young woman who are attracted to each other in the workplace, but this is what it seems, because there is more to it than meets the eye.

I want to share some excerpts from the book, but I'm too lazy to translate right now 🙈 Hopefully, another day...

This is the first chunkster (>= 800 pages) that I've read this year, and so I'm very happy. I've read probably only 17 chunksters in my whole life and so this is a significant event for me. Yay!

Have you read Aadhavan's short stories? What do you think about them?
Profile Image for Venkat.
145 reviews73 followers
March 28, 2016
Its a delight to read Aadhavan, his settings are usually in the contemporary 70's or 80's and dealing with problems faced by people and their relationships.
My favourite stories in this compilation are "Upper berth" and "Karthick".
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.