Jump to ratings and reviews
Rate this book

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை / Adichanallur Mudhal Keezhadi Varai

Rate this book
தொல்லியல் தொடர்பான விழிப்புணர்வும் வாசிப்பு வேட்கையும் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில் வெளிவந்துள்ள புதிய வரவு இது. தமிழகத்தின் இருபது தொல்லியல் தடங்களை எளிய நடையில் அறிமுகம் செய்கிறார் நிவேதிதா. கடந்த 120 ஆண்டுகால தமிழ்த் தொல்லியல் ஆய்வுகளின் பாதையும் பயணமும் இதில் அடங்கியிருக்கின்றன. - ஆர். பாலகிருஷ்ணன்.

தமிழக வரலாற்றைப் புரிந்துகொள்வதில் தொல்லியலின் பங்கு பற்றி நன்கு விளக்குகின்றார் நிவேதிதா. கடந்த சில பத்தாண்டுகளில் உருவான தொல்லியல் சார்ந்த தொழில்நுட்பக் கருவிகளையும் உத்திகளையும் எளிய தமிழில் அறிமுகப்படுத்துகிறார். நல்ல தருணத்தில் வந்துள்ள வரவேற்கத்தக்க நூல். - சு. தியடோர் பாஸ்கரன்

இந்நூல் மூலமாக தொல் தமிழ் காலத்தையும் நம் முன்னோர்களின் மொழியாற்றல், கைவினை, போர்க்கலை போன்ற ஒப்பற்ற நாகரிகப் பெருமைகளையும் அறிந்துகொள்ள முடியும். - ஆ. பத்மாவதி

224 pages, Paperback

Published January 1, 2020

39 people are currently reading
39 people want to read

About the author

Nivedita Louis

10 books4 followers
Writer, social and feminist historian.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
15 (46%)
4 stars
14 (43%)
3 stars
2 (6%)
2 stars
1 (3%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
249 reviews8 followers
December 29, 2021
The book is somewhat informative. But the book is not at all professional. I didn't expect it to be a research done by a qualified archeologist but I expected a book written by a well informed writer. But the book looks like a jumble of online articles and snippets from here and there. For example, a very crude and misleading chronology of genus Homo is given on page 33. A novice reader can be misled to think that our ancestors are Australopithecus (4 Mya) -> Homo habilis (3 Mya) -> Homo erectus (2 Mya) - Homo neanderthalensis (1 Mya) -> Homo sapiens. The above is totally incorrect on many levels. Then on page 145, a somewhat better chronology of genus Homo is given. Here Homo sapiens are said to have evolved by 400,000 years BP. But again on page 149, Homo sapiens are given a drastically later date of 150,000 years BP! Now which narrative the reader should take as somewhat closer to truth? Similar confusions exist in case of other things. Horses are said to be imported and not found in South India natively in chapter 8. Also, chapter 8 gives the date of domestication of horses as 5,500 years BP. But then in chapter 15, a painting depicting horseback hunters from Bhimbetka is dated to 30,000 to 20,000 YBP (which is incorrect again!). All the names of scientists, places, scientific names, equipments etc are only given in Tamil which is not easy to read as well as to search for extended reading on the internet. For example, Bhimbetka. It is given in Tamil as "பிம்பேத்கா". How to identify which is "B" and which is "P". The author is also a Facebook feminist warrior, which you can sniff easily as you read. The over emphasis on female deities and queens while ignoring phallic stones... Calling kings "avan" "ivan" while women as "ammai" and "avar" (even in a single passage, you can see her call Sembiyan Madevi with plural of respect while Rajaraja Cholan is called "avan-ivan"). Overall, professionalism is totally missing and the author is not mature enough to write books let alone serious books like this. I pity the scholars who have read and reviewed this book and I am worried that Indian archeology is in the hands of people who are not even able to identify and point out these mistakes to the author before publishing.
Profile Image for Srikumaran Ramu.
13 reviews
March 19, 2025
புத்தகம்: ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை
ஆசிரியர்: நிவேதிதா லூயிஸ்
தேதி: 19-03-2025

"வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும், அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அதை எதிர்வரும் தலைமுறைக்குக் கடத்த வேண்டும்!" ❤️

எனக்கு சிறுவயது முதலே தொல்லியலில் மிகப்பெரிய ஈடுபாடும் ஆர்வமும் இருந்துள்ளது. ஆனால், தொல்லியல் குறித்த தகவல்களை பெரும்பாலும் இணையத்தில், காணொளிகள் மூலம் அறிந்துகொண்டதுதான் அதிகம். தொல்லியலுக்கென பெரிதாக புத்தகங்கள் வாங்கி படித்ததில்லை. தொல்லியல் குறித்து நான் முதன் முதலில் வாசித்த புத்தகம் எகிப்து நாகரிகத்தையும் பிரம்மிப்பூட்டும் பிரமிடுகளையும் பற்றியது. அதற்குப் பின் "கி.மு - கி.பி" என்ற புத்தகம் படித்துள்ளேன்.

ஆனால், "ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை" என்ற இந்த புத்தகமே தமிழகத்தை தொட்டு எழுதப்பட்ட, நான் படித்த முதல் தொல்லியல்சார் நூலாகும். மொத்தம் 222 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் ஆசிரியர் நிவேதிதா அவர்கள் தமிழகத்தின் மிக முக்கியமான, அதே சமயம் பெரிதும் கவனிக்கப்படாத 19 தொல்லியல் தடங்களை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். "ஆதிச்சநல்லூர்", "கீழடி"ஆகிய இடங்களைத் தான் பெரும்பாலும் அறிந்திருப்போம். ஆனால், அவைகளைத் தாண்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளலூர், அரிக்கமேடு, கொடுமணல், பையம்பள்ளி, தேனூர் போன்ற பல தொல்லியல் தடங்களை இந்த நூல் அறிமுகம் செய்கிறது.

இந்த நூலில் எனக்கு மிகவும் பிடித்தது, ஒவ்வொரு இயலிலும் நேரடியாக ஒரு தொல்லியல் தடத்தை விளக்க முற்படாமல், உலகின் ஏதோ ஒரு மூலையில் கண்டெடுத்த சிறப்புமிக்க தொல்லியல் சான்றையோ அல்லது நாம் தினசரி வாழ்வில் கடந்துவரும், பயன்படுத்தும் பொருளையோ வைத்து அதனைச் சுற்றி எழுதியிருக்கும் விதம். ஒரு தொல்லியல் தடத்தை அறிந்துகொள்ளும் முன் ஏன் அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்?" என்ற ஆர்வத்தை தூண்டுகிறார் ஆசிரியர். மேலும், ஆசிரியரை பாராட்ட வேண்டிய மற்றொரு பண்பு, புத்தகம் நெடுக மிகவும் நுட்பமான மற்றும் கடினமான அறிவியல் வார்த்தைகளைத் தூய தமிழில் எழுதியுள்ளது! எடுத்துக்காட்டாக முந்து வரலாறு (Pre-history), கரிமப் பகுப்பாய்வு (Carbon dating), புதைபடிவம் (Fossil) போன்ற சொற்கள்.

குங்கிலியம், சீப்பு, கண்ணாடி, நாய், குதிரை, மது, சதுரங்கம், ஆடை, பாறை ஓவியங்கள் என பல்வேறு பொருள்களைப் பற்றிய தொல்லியல் சான்றுகள் வாசிப்போரை வியப்பில் ஆழ்த்துகின்றன. நாம் இன்று பயன்படுத்தும் பெரும்பாலான பொருள்களை தம் மூதாதையர்கள் கிட்டத்தட்ட 2000-5000 ஆண்டுகளுக்கு முன்பாகவே பயன்படுத்தி அதில் தேர்ந்தும் இருந்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் படிக்கும்பொழுது , "மனித சமூகமானது எப்போதுமே இதே போலத்தான் இருந்திருக்கிறதோ?" என்ற எண்ணம் தோன்றுகிறது. காலத்தால் முன்னேறி வந்திருக்கிறோம், பொருள்களின் வடிவங்களை மனித மனத்தின் இரசனைகளுக்கேற்பவும் வசதிகளுக்கேற்பவும் மாற்றியிருக்கிறோமேயன்றி அவற்றின் பயன்பாடு காலம் நெடுகிலும்‌ பெரும்பாலும் ஒரேபோலத்தான் இருந்திருக்கிறது.

அதுமட்டுமல்லாது, பண்டைய தமிழகத்தில் "யவனர்கள்" என அழைக்கப்படும் இரோமானியர்கள், கிரேக்கர்கள், பாரசீகர்கள் மற்றும் சீனர்கள் என பலரும் ஒன்றாக ஒரே சமூகமாக இருந்துள்ளார்கள். "வணிகம்" என்ற ஒற்றை செயல்தான் மனிதர்களை கண்டம்விட்டு கண்டம் கடல்கடந்து சென்று இணைய வைத்துள்ளது. அவற்றை படிக்கும்பொழுது பண்டைக்காலத்தில் அனைவருமே "ONE WORLD"- ஆக இருந்திருக்கிறோம் என்பது புலப்படுகிறது.

இந்த நூலை இயற்ற ஆசிரியர் நிவேதிதா லூயில் அவர்கள் எடுத்திருக்கும் முயற்சி மற்றும் அவரின் ஓய்வற்ற உழைப்பு பாராட்டி போற்றத்தக்கது. எனினும், சில இடங்களில் அவர் பல்வேறு தகல்வல்களை தொட்டும் தொடாமலும் மேலோட்டமாக போட்டு வைத்திருப்பது, வாசிப்பின் அனுபவத்தை சற்று தொய்வுபடுத்துகிறது. அதுமட்டுமின்றி, புத்தகத்தின் இடையிடையே தொல்லியலில் இன்று பயன்படுத்தப்படும் கருவிகள், வழிமுறைகள் குறித்து பெட்டிசெய்திகள் போட்டிருப்பது வாசிப்பை ஆங்காங்கே தடைசெய்கிறது. அனைத்து செய்திகளையும் தனியே ஒரு இயலாக சேர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தோன்றுகிறது.

முடிவாக, இந்த புத்தகமானது தொல்லியலில் ஈடுபாடு கொண்ட, பண்டைத் தமிழக வரலாற்றை தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகமாகும். வெளிநாட்டினர் 100 வருடத்துக்கு முந்தைய தன் வரலாற்றைக் கூட பெருமையுடள் பாதுகாத்து வரும் சூழலில், நாம் பண்டைத் தமிழகத்தின் 5000 ஆண்டு பழமைமிக்க வரலாற்றையும் அதன் சுவடுகளையும் பாதுகாக்க தவறினாலும் பரவாயில்லை, அவற்றை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது மிகவும் வேதனைமிக்க உண்மையாகும். இந்த இழிநிலையை மாற்றி நம் வரலாற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை திறக்க நிவேதிதா போன்ற ஆசிரியர்களிள் இத்தகைய வரலாற்று புத்தகங்கள் துணைபுரிவது பெருமகிழ்ச்சி!! ❤️
Profile Image for Sanjeev Duglas.
89 reviews3 followers
February 21, 2021
இந்த புத்தகம் யாரும் கேட்டிராத தகவல்களை கோண்டுள்ளது.எழுத்தாழர் முதலில் உலக வரலாற்றில் பழமையானது பற்றி கூறி விட்டு தமிழ்நாட்டில் எங்கு அதே போல் பழமையானது பற்றி கூறுகிறார்.பல தொல்லியல் உலக மற்றும் தமிழக வரலாறு பற்றி ஆர்வமாக வாசிக்க கூடியவாறு எழுதி உள்ளார்.மற்றும் முதல் தமிழ் வீரன் “அந்தவன்” மற்றும் பெண்கடவுள் வழிபாடு என பல தகவல்கள்.
-சஞ்சீவ் இலங்கையிலிருந்து
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.