Jump to ratings and reviews
Rate this book

மர்ம நபர்: தேவதச்சன் கவிதைகள் முழுத் தொகுப்பு

Rate this book
தேவதச்சனின் கவிதைகள் தமிழ் வாழ்வியலின் நுட்பமான பதிவுகளைக் கொண்டிருக்கின்றன. மிக அபூர்வமான கவித்துவப் படிமங்களையும் பார்வைகளையும் வெளிப்படுத்துகின்றன. தத்துவச்சார்பு கொண்டது போன்ற தோற்றம் கொண்டிருந்தபோதும் இக்கவிதைகள் வாழ்வைக் கொண்டாடுகின்றன.தினசரி வாழ்வின் மீது இத்தனை ருசிகொண்ட கவிஞன் வேறு எவருமிருக்கிறார்களா என்று தெரியவில்லை . தேவதச்சனின் கவிதைகள் தினசரி வாழ்வின் விசித்திரங்களையும் அற்புதங்களையும் மிக அண்மையில் சென்று ரசிக்கின்றன. கவிதையின் வழியாக அவர் தமிழ்வாழ்வின் நினைவுகளை மீள்பரிசீலனை செய்கிறார்.

384 pages, Hardcover

1 person is currently reading
3 people want to read

About the author

தேவதச்சன் (பிறப்பு: நவம்பர் 6, 1952) தமிழகக் கவிஞர் ஆவார். இவர் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது உட்படப் பல இலக்கிய விருதகளைப் பெற்றுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு
இவரது இயற்பெயர் ஏ. எஸ். ஆறுமுகம் ஆகும். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எம். எஸ். ஏ. சேதுராமலிங்கம், சாரதா ஆகியோருக்குப் பிறந்தவர். கோவில்பட்டியில் பள்ளிப்படிப்பும் இளங்கலை பட்டப்படிப்பும் முடித்த பின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை (தத்துவம்) பட்டம் பெற்றார்.

இலக்கியப் படைப்புகள்
70களில் கவிதை எழுதத் தொடங்கியவர். ‘கசடதபற’ என்ற இலக்கிய பத்திரிகையில் அறிமுகமானார். தொடர்ந்து ‘ழ’ என்ற கவிதை இதழிலும் அதிகமாக எழுதி வந்தவர். காலச்சுவடு, கல்குதிரை, உயிர்மை போன்ற இலக்கிய இதழ்கள் இவரது கவிதைகளை வெளியிட்டுள்ளன.

1982 இல் அவரவர் கைமணல் என்ற தன் முதல் தொகுதியை வெளியிட்டார். அதற்கு 18 ஆண்டுகளுக்குப் பின்னர் காலச்சுவடு பத்திரிகையில் இவரது தனித்துவமான பல கவிதைகள் வெளிவந்தன. நவீன தமிழ்க்கவிதைக்கு புதியதோர் அழகியலை அறிமுகப்படுத்தினார். அடுத்தடுத்த தலைமுறை இளங்கவிஞர்களின் கிரியாஊக்கியாக மதிப்பிடப்படுகிறார்.

கவிதை தொகுதிகள்
அவரவர் கை மணல் (1982)
அத்துவான வேளை (2000)
கடைசி டினோசார் (2004)
யாருமற்ற நிழல் (2006)
ஹோம்ஸ் என்ற காற்று (2010)
இரண்டு சூரியன் (2012)
எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது (2013)
மர்மநபர் (முழு தொகுப்பு) (2017)

பெற்ற விருதுகள்
அமெரிக்கத் தமிழர்களின் கலாச்சார அமைப்பு வழங்கிய விளக்கு விருது (2010)
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருது (2011)
கோவை விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு வழங்கிய விஷ்ணுபுரம் விருது (2015)
கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை வழங்கிய கவிக்கோ விருது (2017)
கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கிய சிற்பி இலக்கிய விருது (2018)

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (66%)
4 stars
1 (16%)
3 stars
1 (16%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Jo.
27 reviews3 followers
November 26, 2025
வாழ்க்கை இனிதென்றும், வாழ்தல் வரமென்றும் நினைக்க வைக்கிற கவிதைகள் தேவதச்சனுடையவை.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.