சித்தர்கள் வாழ்வும் அவர்களின் செயல்பாடுகளும் அமானுஷ்யம் நிறைந்தவையாக இருக்கும். இன்றும் பொதிகை, பழநிமலை போன்ற இடங்களில் அவர்கள் அரூபமாக உலா வருவதாக தகவல்கள் உண்டு. அப்படிப்பட்ட சித்தர்களில் போகர் தனித்துவமிக்கவராகக் கருதப்படுகிறார். ஏனெனில் பழநி முருகனின் சிலையை நவபாஷாணங்களால் உருவாக்கியவர் அவர் என்பதால். நவபாஷாண முருகன் சிலையை உருவாக்க போகர் என்னென்ன பாஷாணங்களைப் பயன்படுத்தினார், அதன் உறுதித் தன்மைக்கு என்னவிதமான கலவைகளைக் கலந்தார், அதற்காக போகரின் சீடர்கள் எங்கெல்லாம் சென்று மூலிகைகளைச் சேகரம் செய்து வந்தனர் என அத்தனை விவரங்களையும் இந்த இறையுதிர் காட்டில், அன்று எனும் பகுதியில் அழகு தமிழ்நடையில் தந்துள்ளார் நூலாசிரியர். அத்துடன் அன்று போகர் செய்த ஒரு நவ பாஷாண லிங்கத்துடன் இன்று நடக்கும் சம்பவங்களைத் தொடர்புப்படுத்தி, அன்று இன்று என்ற இரு நிகழ்வுகளையும்; விறுவிறுப்போடும் திடீர் திருப்பங்களோடும் படிக்கப் படிக்க பரபரப்புத் தொற்றிக்கொள்ளும் எழுத்து நடையில் இணைத்திருக்கிறார் இந்திரா செளந்தர்ராஜன். ஆனந்த விகடனில் தொடர்ந்து 87 வாரங்கள் வெளிவந்து வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற இறையுதிர் காடு, இரண்டு அழகிய நூல்களாக இப்போது உங்கள் கையில். போகர் செய்த நவபாஷாண முருகன் சிலை வரலாற்றை அறிய இறையுதிர் காட்டில் இனி உலவுங்கள்!
புத்தகம்: இறையுதிர் காடு எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன் பதிப்பகம்: விகடன் பிரசுரம் பக்கங்கள்: 1104
💥 முருகனின் அறுபடை வீடுகளில் மிகவும் பிரபலமான கோயில் பழனியில் உள்ள தண்டாயுதபாணி கோயில். அந்த முருகன் சிலையை போகர் எவ்வாறு செய்தார், அவர்களின் சீடர்கள் அதற்கு எவ்வாறு உதவி செய்தனர், அந்த காலகட்டத்தில் இருந்த மக்களின் நிலை, பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
💥 இந்த புத்தகம் இரு வெவ்வேறு காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை பற்றி கூறுவதாக அமைந்துள்ளது.
💥 ஒன்று முருகன் சிலையை போகர் எவ்வாறு செய்தார். மற்றொன்று தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நவீன யுகம்.
💥 போகர் முருகன் சிலையை செய்ய உபயோகித்த பொருள் இதுவரை யாருமே பயன்படுத்தி இருக்க முடியாது. ஒன்பது பாஷாணங்களை கொண்டு செய்யப்பட்ட முருகன் சிலை அது. வழிபடும் மக்களுக்கு நல்லது செய்யும் விதமாகவும், பல ஆண்டுகள் நீடிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
💥 போகர் நவ பாஷாணத்தை கொண்டு முருகன் சிலையை செய்வதற்கு முன்னால், சிறிய அளவிலான லிங்கத்தை செய்தார். முருகன் ஒரே இடத்தில் இருந்து அருள் செய்ய வடிவமைக்கப்பட்டது. ஆனால் லிங்கம் 48 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம் மாறும் அளவில் உருவானது.
💥 பத்திரிகை துறையில் வேலை செய்பவரும் ஆன்மீகத்தில் சிறிதும் நம்பிக்கை அற்ற பாரதியின் கைக்கு அந்த லிங்கம் உள்ள பெட்டி வந்தது. அது திரும்ப எப்படி போகரிடம் ஒப்படைக்க பட்டது என்பதை மிகவும் சுவாரசியமாக கூறியிருக்கிறார்.
💥 நல்ல வாசிப்பு அனுபவமாக அமைந்தது.
💥 ஒரு எழுத்தாளர் 12 மாதங்கள் 12 புத்தகங்கள் - இரண்டாவது புத்தகம் இது.
💥 இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய என்னுடைய பிரார்த்தனைகள்.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
நீண்ட நாட்களுக்கு பிறகு, பரிந்துரைகள் இல்லாமல் விமர்சனங்கள் அறியாமல் நானே எடுத்துப் படித்த ஒரு சிறந்த படைப்பு :)
அடிப்படை தொடர்புடைய இரு வேறு கதைகளை, இடரே இல்லாத விறுவிறுப்பான நெடுஞ்சாலை பயணம் போல் "இன்று" பகுதியும், அதில் தீடீரென வரும் வேகத்தடைகள் போல நெறிகள், போதனைகளுடன் மிருதுவான போக்கில் "அன்று" பகுதியும் கூறுகின்றன. இரண்டாம் பாகத்தில் நிலமை தலைகீழ் :) கண்முன் அதிசியங்கள் நடந்தாலும், ஆத்திகத்தை அறவே நம்ப மறுத்த (சில இடங்களில் எரிச்சலூட்டும் வகையில்!!) கதை நாயகியின் மனமாற்றம் மிகவும் விரைவு படுத்தி எழுதப்பட்டதாக தோன்றுகிறது. கதை நாயகி என்பதாலேயே கதையின் முடிவு அவள் கையில் கொடுத்தது போல் இருந்தது சிறு ஏமாற்றத்தை அளிக்கிறது.
படைபாளரின் நல்ல தமிழ் நடைக்கு என் வந்தனங்கள்!! "நீ பெரிதாக பேசிட மாட்டாய்.. பேசினால் சிறிதாக பேசிட மாட்டாய்" என்பது என்னைக் கவர்ந்த வசனம். இன்னலின் பொது குருவருள் வழிகாட்டும், திருவருள், விதிப்படி நடக்கிறது என வேடிக்கை பார்க்கும் என்பது பிடித்த புதுக் கருத்து. பல மலர்கள், தாவரங்கள், அக்கால மனிதர்கள் ஆகியவற்றின் பெயர்களை வேள்பாரிக்குப் பிறகு (ஒரு சிறிய பங்கினை) இதில் படித்தது ஒரு ஆனந்தம்.
சித்த நெறிகள்/சித்த விஞஞானம்/சித்த மருத்துவம்/ சித்த ரகசியங்களின் அருமைகளையும் அதை இந்த நவீன கலியுகம் கிரகிக்கவோ, முறையாக பின்பற்றி பயன்படுத்தவோ தடுமாறுவதையும் நன்றாக விளக்கியுள்ளார் படைப்பாளர். அந்த பொக்கிஷங்களை மனிதனின் மட்டமான, சுயநலமான வியாபார நோக்கினால் ரகசியங்களாகவே வைக்கப்பட்டது வருத்தத்தை அளித்தாலும், தகுதியானவர்களுக்ககே அவை சென்று சேரும் என்ற உண்மையையும் இப்புதினம் நிலைநிறுத்துகிறது.
Indira Soundarrajan is a childhood favourite who has written several blockbuster tv serials like Marma Desam and Chidambara Ragasiyam. In the same vein, Irayudhir Kaadu is set around Pazhani and flip flops between Bogar and his Siddhars in the Pazhani hills and a modern day mystery story full of twists and turns.
Assured Page turner. Very informative about nature and Siddha also from the Bogar sections. Happy read.
Nice one... full of about nature,siddha and Tamil language... Since its Indra Soundar Rajan i thought it would be great suspense thriller, but little disappointed ....
A wonderfully written book: the timeline transition, the suspense, and a strong, headstrong female-led character whose portrayal I loved.
The 'Andru' portions were intriguing, and the 'Indru' portions reflected the reader's mind.
The only disappointment was how the main character, who does not believe in the siddha powers that have been showcased to her throughout the books, and who always tries to find logical reasons, suddenly believes in them immediately towards the end of the book. It felt like the ending was rushed to complete the series.