“உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால், அக்கற்களை கொண்டு கட்டடம் எழுப்புங்கள்!" - இதைச் சொல்லியவர் இந்தியாவில் மட்டுமே காலூன்றியிருந்த ஒரு வியாபார குழுமத்தை உலகெங்கும் எழுப்பி, அக்குழுமத்தையே உலக சந்தையில் இந்தியாவின் அடையாளமாய் மாற்றிய ரத்தன் நாவல் டாடா.நம் உணவில் உப்பாய், தேநீராய், நம் கையில் கடிகாரமாய், நம் செல்போனில் சிம் கார்டாய், நம் வீட்டுத் தூணில் இரும்பாய், நாம் பயணிக்கும் காராய், நம் டிவியில் டி.டி.எச்சாய் (DTH), நாம் அணியும் நகையாய் ஒவ்வொரு இடத்திலும் கால் ஊன்றி தடம் பதித்த டாடா நிறுவனத்தின் அதிபர் ரத்தன் டாடா.இப்புத்தகத்தில் ரத்தன் டாடா பற்றிய சுவையான தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.