எம்.ஜி.சுரேஷின் முந்தைய நாவல்களைப் பற்றி…. ‘சுரேஷின் நடையும் பாஷையும் அவருக்குச் சொந்தமானவையாக இருக்கின்றன. பாரதியாருடையதைப் போல் தெளிவாகவும், வேகத்துடனும், வலுவுடனும் காணப்படுகின்றன’ - க.நா.சு ’புதுமுறை எழுத்துகளில் நம்பிக்கை வைத்திருக்கும் எம்.ஜி.சுரேஷ் பல நாவல்களை எழுதியிருக்கிறார். நான் படிக்க நேர்ந்த அவரது மூன்று நாவல்களுமே பரிசு பெறத் தகுதியானவைதான்’ - சுந்தரராமசாமி ஒரு எழுத்தாளன் யதார்த்தத்தின் பொருட்டு தன்சார்புப் பார்வையை இழந்துவிடலாகாது. தன்சார்புப் பார்வையை இழந்துவிடாமல், யதார்த்தத்துடன் தனது எழுத்தின் தரத்தை உயர்த்திக் கொள்ளல் வேண்டும். அத்தகைய பண்பு நண்பர் சுரேஷுக்கு உண்டு. - ஜெயகாந்தன் ’சுரேஷுக்கு எதிலும் ஒர&