தான் பிறந்த ஊர் என்றால் இன்று சிலருக்கு மகிழ்ச்சியையும் பலருக்கு எரிச்சலாகவும் உள்ளது. பலரும் தாங்கள் பிறந்த ஊரில் சாதி ரீதியான இழிவுகளைச் சுமந்து, பார்த்து, அனுபவித்து, சொல்ல முடியாத துயரங்களைக் கடந்து படித்து முடித்து நகர்புறங்களில் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட பின்பே ஒரளவுக்கேனும் ஆசுவாசம் அடைகின்றனர். முதல் இருபது வயதில் வறுமையால், சாதி சார்ந்த இழிவுகளால், மதம் சார்ந்த ஒதுக்கல்களால், உறவுகள் சார்ந்த புறக்கணிப்புகளால் வெந்து நொந்து தன் இடத்தை அடைய, அடைந்த இடத்தை தக்க வைக்க, மற்றவர்களை விடப் பல மடங்கு போராடிப் பெற்ற பின்பு உருவாகும் வாழ்க்கையின் இறுதியில் என்ன கிடைக்கும்? உருவாகும் எண்ணங்களில் நீங்கள் என்ன மகிழ்ச்சியான கருத்தை எதிர்&#